LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!

காமியோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி .ஜே . ஜெயகுமார்  தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லன்ன நயன்தாரா' படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர்.

22ஆம் தேதி துவங்க உள்ள  இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஜி .வி .பிரகாஷ் கதாநாயகனாக  நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் 'கயல்' படத்தின் நாயகி ஆனந்தி ஆவார்.

பல்வேறு இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணி புரிந்த ஆதிக் ரவிசந்திரன் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல்வேறு வெற்றி  படங்களுக்கு ஒளிபதிவாளராக  பணியாற்றிய ரிச்சர்ட் எம் நாதன் இந்த படத்தில் ஒளிபதிவாளர் ஆக பணியாற்றுகிறார். ஜி வி பிரகாஷ் குமார் மிக அருமையான பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.சமீபத்திய வரவுகளில் மிகவும் நேர்த்தியான பட தொகுப்பாளர் என போற்ற படும் ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

உமேஷ் குமார் அரங்கமைக்க,ஷேரிப்ப் நடனம் அமைக்க, ஹரி தினேஷ் சண்டை காட்சிகள் அமைக்க, சுப்பு.N . நிர்வாக தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார்.

பல்வேறு விளம்பர படங்களை தயாரித்த 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின்  தயாரிப்பாளர் ஜெய குமார் கூறும் போது ' இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்த படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்ப்பு பெரும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன்.

இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி வி பிரகாஷ் குமார் அளவுக்கு இந்த பாத்திரத்துக்கு வேறு யாரும் பொருந்தி இருப்பார்களோ தெரியாது.கதாநாயகனாக அவரது முதல் படமான 'டார்லிங்' வெற்றிப் பெற்றது எங்களுக்கு கூடுதல் பலமாகும் 'கயல்' மூலமாக ஆனந்தி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்ப்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தில் அவரையே நாயகியாக ஒப்பந்தம் செய்தோம்.

இந்த படம் அவரை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டும்.. குறுகிய கால தயாரிப்பான 'த்ரிஷா இல்லன்னா  நயன்தாரா' இளைஞர்களை கவரும் படம் என்பதில் சந்தேகம் இல்லை'என்றார். .

GV's Next Movie is Trisha illana Nayanthara
Cameo films commenced their second production titled 'Trisha illana Nayanthara' in Chennai recently.The shooting is all set to happen from 22nd of January. G.V.Prakash kumar basking in the glory of the success of 'Darling' plays the lead. Anandhi who had attracted with her simple but elegant looks plays opposite him  .
Adhik Ravichandran who had earlier associated many directors makes his debut as a director. Richard M Nathan who had mantled cinematography for many successful films is the cinematographer of this film.G V Prakash kumar apart from playing the Hero role is also assigned the responsibility of Music .Rueben with his fast raising stature of being the Editor for the future is the editor. Umesh Kumar is the art director, sheriff is the choreographer,Hari Dinesh is the Stunt Director,and Subbu.N is the executive producer of the film.
The producer Jayakumar had a few points to share with.' The moment Adhik narrated the script i was confident on the out come. In my assumption G V Prakash Kumar  will be the perfect choice to play the Hero 'Darling' success is a major booster to his career as well as this film .Anandhi who had attracted one and all with her charming roles plays the heroine. She will be seen in an entirely different dimension in 'Trisha illana Nayanthara' . This will move in a rapid pace and we are confident that this film will attract youngsters.  .        
Trisha illana Nayanthara Movie Official Firest Look Poster
by Swathi   on 19 Jan 2015  0 Comments
Tags: ஜி.வி.பிரகாஷ்   த்ரிஷா இல்லனா நயன்தாரா   GV Prakash next movie   Trisha illana Nayanthara           
 தொடர்புடையவை-Related Articles
குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !! குழந்தைகளை கவருமாம் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ !!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !! ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் த்ரிஷா இல்லனா நயன்தாரா !!
சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !! சிரிப்பு படத்திற்கு சீரியஸாக உழைக்கும் ஜி.வி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.