LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

ஊனம் ஒரு குற்றமா?

ஊனமாக பிறந்தவர்களைப் பற்றிய நம் சமுதாயத்தின் கண்ணோட்டம் மாறுபட்டதாகவே இருக்கிறது. ஊனம் என்பது ஒரு குறையா? நம் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்கு தெளிவாக பதில் தருவதோடு, தான் நடத்திய யோகா வகுப்பில் சேர்ந்த மனநிலை குன்றிய ஒரு பெண்ணை எப்படி அந்த வகுப்பு மாற்றியது என்றும் நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கிறார் சத்குரு.
சத்குரு:
ஒருமுறை குன்னூரில் தங்கி, ஊட்டியில் வகுப்பு எடுக்கக் காரில் சென்றுகொண்டு இருந்தேன். மாலை நேரம்.
எலும்பே நடுங்கும் குளிரில், தெரு ஓரம் குளிர் தாங்க போர்வை ஏதும் இல்லாமல் ஒரு பெண் நடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கவனித்தேன். முப்பது வயதிருக்கலாம். அவள் முகத்தில் இருந்த துன்பமும், வேதனையும் கண்டு வண்டியை நிறுத்தினேன். அவள் சற்று மனநலம் குன்றியவள் என்பதால், குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவள் என்று பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்டு என் மனைவி கண் கலங்கினாள்.
அந்தப் பெண்ணைக் குளிரிலிருந்து உடனடியாகப் பாதுகாக்க, நான் அணிந்திருந்த ‘கோட்’டை கழற்றி, அவள் மீது போர்த்தினேன். அவளிடம் உணவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தேன்.
இப்படிச் சிலரை மனநலம் குன்றியவர்களாகச் சமூகம் ஒதுக்கி வைப்பதை அவ்வப்போது காண்கிறேன். மனதளவிலோ, உடலளவிலோ ஒருவரை ஊனமுற்றவர் என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்துதானே?
உங்களைவிட அதீத புத்திசாலியாக விளங்குபவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்களுக்கும் புத்தி குறைவுதானே? அதற்காக உங்களையும் புத்தி ‘குன்றியவர்’ என்று சொல்லலாமா?
என் அமெரிக்க வகுப்பு ஒன்றில் பங்கேற்ற ஒரு பெண்மணிக்கு, ஜுலி என்ற மகள் இருக்கிறாள். ஜுலியின் தலையளவு சிறிதாகவும், அதனுடன் ஒப்பிடும்போது அவள் உடல் மிகப் பெரிதாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி அவள் குள்ளமாகவும் இருப்பாள். ஜுலிக்கு 24 வயது. ஆனால், மூளையைப் பொறுத்தவரை எட்டு வயதுச் சிறுமியின் வளர்ச்சிதான்.
ஜுலி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவளுடைய பாட்டிதான் அவளை வளர்த்து வந்தாள். மூன்று வருடங்களுக்கு முன்பு அந்தப் பாட்டி இறந்துவிட்டாள். அப்போதிருந்து ஜுலி மனரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டாள். ‘ஜுலி உங்கள் வகுப்பில் பங்கேற்கலாமா?’ என்று அவள் அம்மா கேட்டாள். ஜுலியிடம், “உனக்கு விருப்பமா?” என்று கேட்டேன். அவள் ‘மிக விருப்பம்’ என்றாள்.
அவளை எவ்விதத்திலும் வித்தியாசப்படுத்தாமல், மற்றவரிடம் நடந்து கொள்வது போலவே அவளிடமும் நடந்து கொண்டேன். அவளிடம் இரக்கமற்று நடந்து கொள்வதாகக்கூட சிலருக்குத் தோன்றியது. அப்படி அல்ல. தனியான கவனம் கொடுப்பதைவிட, மற்றவரைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அவளது ஆசை.
வகுப்பில் நான் சொன்ன பல விஷயங்கள் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், அசையாமல் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில், என் சக்தி அலைவரிசை அவளை எட்டியது. அவள் உடலில் துள்ளலான அதிர்வுகள் தோன்றின. அதற்குப் பிறகு மேல்நிலை வகுப்பு வரை வந்த தியான அன்பர்களிடம் காணக்கூடிய சக்திமாற்றம் அவளிடம் காணப்பட்டது. ஒருசில நாட்கள் கழித்து அவள் என்னிடம், ‘என் பாட்டி இல்லாத குறை எனக்கு இப்போது தெரியவில்லை’ என்றாள்.
பொதுவான அளவுகோலின்படி, அவளது மூளை வளர்ச்சி சற்றுப் பின்தங்கி இருந்தாலும், அவள் அற்புதமான பெண்.
மனநலத்தில் பின்தங்கியவர்கள் பொதுவாக துன்பப்படுவதில்லை. அவர் உங்களை எல்லாம்விட மிக சந்தோஷமாகத்தான் இருக்கிறார். வெளிச்சூழ்நிலைகளால் பாதிப்பில்லாமல் குழந்தைகள்போல் இருப்பது ஒரு வரம். அதை நீங்கள் குறைபாடாக நினைத்து, அவரை ஏளனமாகப் பேசுகிறீர்கள். அவரைப் பார்க்கும் பார்வையில், நடத்தும் விதத்தில், குறைபாடுள்ளவர் என்று நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். இதன்மூலம் அவரை நீங்கள் வருத்தப்பட வைக்கிறீர்கள்.
உங்களால் மட்டும் உங்கள் உடலையும், மனதையும் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகிறதா என்ன? மனநலம் குன்றியவராக நீங்கள் நினைப்பவருக்கும், உங்களுக்கும் அளவுகோலில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வு இருக்கிறது, அவ்வளவுதானே?
எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தபோது, அவரை ஒரு கொடிய விஷத்தேள் கடித்துவிட்டது. விஷம் வயிற்றில் இருக்கும் சிசுவைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் கருதினார். மனைவியிடம் கருக்கலைப்பு செய்யலாம் என்றுகூடச் சொன்னார். ஆனால், ஐந்து மாதக் கர்ப்பத்தை சிதைக்க மனைவிக்கு மனமில்லை.
ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் பயந்தபடி, குழந்தை மாறுபாடான உடல் கொண்டிருந்தது. அதன் தலை மட்டும்தான் முழுமை அடைந்திருந்தது. கைகள், கால்கள் உருவாகாமலேயே குழந்தை பூமிக்கு வந்துவிட்டது.
டாக்டரின் வீட்டில் நான் தங்க நேர்ந்தபோதெல்லாம், அவர்கள் தங்கள் குழந்தையைப் பார்த்து பெரும் வேதனை கொள்வதைக் கவனித்தேன். மற்றவரைப் போல் இயங்க முடியாத சிறுவனாக இருந்தாலும், பெற்றோரிடம் காணப்பட்ட வேதனை அவனிடம் இருந்ததில்லை.
எதையும் பிரித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாததே அவனுக்குப் பெரிய வசதியாகிவிட்டது. தான் எதையோ இழந்துவிட்டோம் என்ற எண்ணமே அவனுக்குக் கிடையாது. அவன் எப்போதும் சிரித்துக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தான். என்னைப் பார்த்தால் உருண்டு உருண்டு வருவான். என் மடியில் ஏறி உட்கார்ந்துவிடுவான்.
எந்தவித ஊனமும் இல்லாதவராகத் தங்களை நினைக்கும் பலரிடம் காண முடியாத சந்தோஷத்தை அந்தக் குழந்தையிடம் என்னால் பார்க்க முடிந்தது. அப்படியானால், யார் ஊனமுற்றவர்கள்?
ஒருவேளை, எல்லா மனிதர்களுக்குமே இரண்டு கைகளுமே இல்லாது போயிருந்தாலும், பிழைத்திருப்போம்தானே? பிறகு ஏன் ஒற்றைக் கை குறைந்தால், அவரைக் குறைபாடானவர் என்று நினைக்கிறீர்கள்? பறவைகளும் பாம்புகளும் கைகள் இல்லாமல் தனது வாயை அற்புதமாகப் பயன்படுத்தவில்லையா?
உடலளவிலும் மனதளவிலும் ஒருவித இயலாமை இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்குச் சில இடங்களில் சில உதவிகள் செய்யப்பட வேண்டியதுதான். அதற்காக ஊனம் என்று முத்திரை குத்துவதா?
பெரிய மூளையை வைத்துக் கொண்டு அதை முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைவிட, இவர்கள் எந்த விதத்தில் குறைந்துவிட்டார்கள்? முறைப்படுத்தத் தெரியாமல் அதீத திறன் இருந்தால், அதுதான் ஆபத்து. இருக்கும் மூளையைக் கொதிக்கவிட்டுக் கொண்டு, எப்போதும் நிம்மதியற்று இருப்பதைவிட மூளையே இல்லாமல் சாதுவாக இருப்பவர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
ஒன்று ஊனம் என்பார்கள் அல்லது கடவுளின் குழந்தை என்பார்கள். இப்படி ஏதாவது சொல்லி மற்றவர்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஊனமுற்றவர் என்று சொல்வது எப்படியோ அப்படித்தான் பிரத்யேகமானவர் என்று சொல்வதும். மாறுபாடான உடலுடனோ, புத்தியுடனோ பிறந்த குழந்தையையும் ஒரு சாதாரண, இயல்பான குழந்தையாகப் பார்க்கும் பக்குவம் சமூகத்தில் வர வேண்டும்.
உண்மையில், உடலிலும் மனதிலும் ஊனம் என்று ஒன்று இல்லவே இல்லை. வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக இந்தப் பூமிக்கு வருகிறார்கள். வெவ்வேறு திறன்களோடு வளர்கிறார்கள். அவ்வளவுதான்.
பாரபட்சத்தை விடுத்து முழுமையான மனிதநேயத்துடன் பழகினால், யாரிடமும் எந்தக் குறைபாடும் தெரியாது. எந்த வருத்தமும், துன்பமும் இருக்காது!

by Swathi   on 26 Mar 2014  0 Comments
Tags: crime handicapped   handicapped crime   crime   handicapped   ஊனம் குற்றமா   குற்றமா ஊனம்   ஊனம்  
 தொடர்புடையவை-Related Articles
ஊனம் ஒரு குற்றமா? ஊனம் ஒரு குற்றமா?
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 107 ஆண்டுகளாக எவ்வித குற்ற சம்பவங்களும் அரங்கேறாத ஒரு அதிசய கிராமம் !! சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 107 ஆண்டுகளாக எவ்வித குற்ற சம்பவங்களும் அரங்கேறாத ஒரு அதிசய கிராமம் !!
இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !! இலங்கை அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !!
நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 24,630 கோடி ரூபாய் இணையதளத்தின் மூலம் திருடப்பட்டுள்ளது !! நடப்பு ஆண்டில் இந்தியாவில் மட்டும் 24,630 கோடி ரூபாய் இணையதளத்தின் மூலம் திருடப்பட்டுள்ளது !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.