|
|||||
கைத்தறிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் – திரு. சிவகுருநாதன். |
|||||
![]() கைத்தறிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் – திரு. சிவகுருநாதன்.
ஐடி துறையை விட்டு, கைத்தறி நெசவையே தனது வாழ்க்கை வழியாகத் தேர்ந்தெடுத்தவர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் உள்ள "நூற்ப்பு" என்ற நிறுவனத்தின் மூலம், 15 நெசவாளர்களுடன் இணைந்து பாரம்பரிய நெசவுகளை உயிர்ப்பிக்கிறார்.
கைத்தறி நெசவுக்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கி பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
அழகாக, நேர்த்தியாக நெய்யப்படும் புடவைகள், சட்டைகள், வேட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்தும் இங்கு உருவாகின்றன.
நம்முடைய பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இவ்விதமான முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
தொடர்பு கொள்ள:
திரு சிவகுருநாதன் – 95786 20207
|
|||||
![]() |
|||||
by Swathi on 14 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|