|
|||||
அரண்மனையில் அபூர்வ சக்திகள் கொண்ட பெண்ணாக வரும் ஹன்சிகா !! |
|||||
![]() இயக்குனர் சுந்தர் சி தற்போது எடுத்து வரும் திரில்லர் படம் அரண்மனை.
இந்த படத்தை சுந்தர் சி-யே இயக்கி நடிக்கிறாராம். இரண்டாவது ஹீரோவாக வினய் நடிக்கிறாராம்.
ஹீரோயின்களாக ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் மூன்று பேரும் நடித்து வருகிறார்களாம். த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஹன்ஷிகாவுக்கு சந்திரமுகி ஜோதிகா மாதிரி சவாலான வேடமாம். அதாவது, எதிர்காலத்தில் நடக்கபோவதை முன்கூட்டியே உணர்வது மாதிரியான அபூர்வ சக்திகள் கொண்ட பெண்ணாக நடிக்கிறாராம் ஹன்சிகா. அதனால, தன்னுடைய கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி, தாவணி கட்டிக்கொண்டு, நெற்றியில் பெரிய அளவில் குங்குமம் வைத்துக்கொண்டு பார்க்கவே வித்தியாசமான ஹன்சிகாவாக ரசிகர்களுக்கு தெரிவாராம். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ஹன்சிகாவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.
அரண்மனை படத்தில் முக்கிய வேடத்தில் சந்தானம், நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள்.
வில்லன்களாக பருத்திவீரன் சரவணன், ராஜ்கபூர், விச்சு நடிக்க பரத்வாஜ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சுந்தர்.சிக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறார். |
|||||
by Swathi on 11 Feb 2014 0 Comments | |||||
Tags: Hansika Hansika Motwani Power Girl Role Aranmanai Movie அபூர்வ சக்தி அரண்மனை ஹன்சிகா | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|