மரிய ஷரபோவா செரீனா வில்லியம்ஸ் இன்று பலப்பரீட்சை பெண்கள் ஒற்றையரில் பட்டம் வெல்வது யார்?
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று Ôகிளைமேக்ஸ்Õ அரங்கேறுகிறது.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், நடப்பு சாம்பியனும் 2&ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் மரிய ஷரபோவாவும் கோதாவில் இறங்குகிறார்கள். சமீப காலமாக வீறுநடை போட்டு வரும் 31 வயதான செரீனாவுக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சீசனில் தொடர்ச்சியாக 30 ஆட்டங்களில் வெற்றிகளை பதிவு செய்துள்ள செரீனா, 2004&ம் ஆண்டுக்கு பிறகு ஷரபோவாவிடம் தோற்றதில்லை. அவருக்கு எதிராக இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ள செரீனா அதில் 13&ல் வெற்றி கண்டிருக்கிறார். செரீனா, பிரெஞ்ச் ஓபனை 2002&ம் ஆண்டு மட்டுமே வென்றுள்ளார். தனது 11 ஆண்டு கால பிரெஞ்ச் ஓபன் தாகத்தை தணிக்க அவருக்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த பட்டத்தையும் வென்றால் இது அவரது 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும்.

|