LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் 800 இந்திய மாணவர்களின் நிலை என்ன?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்குத் தடை விதித்து அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் அங்குப் பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு நிலை கேள்விக்குறியானது. இந்தச் சூழலில் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.


வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியது ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வாகம். இது சட்ட மீறல் நடவடிக்கை என நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

பின்னணி என்ன? 
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் புகழ்பெற்ற ஹார்வர்டு  பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் மாணவர்களும் உயர்கல்வி பயில்கின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்க மறுத்ததால் ஹார்வர்டு  பல்கலைக்கழகத்துக்கான 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் மானியங்களையும் 60 மில்லியன் டாலர் ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.

மேலும்,ஹார்வர்டு  பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்குத் தடை விதித்தும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்குப் பயிலும் 800-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது.

ஹார்வர்டு  பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், இனப் பாகுபாடு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேலும், அங்குப் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு ட்ரம்ப் அரசு கூறியதற்கு, பல்கலைக்கழகம் மறுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்தே, அந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசின் மானியத்தை நிறுத்தியுள்ளது ட்ரம்ப் அரசு. தற்போது ஹார்வர்டு  தங்கிப் பயின்று வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறுவதற்கு 72 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க எதிர்ப்பு, தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வளாகத்தில் யூத மாணவர்களைத் தாக்க அனுமதிப்பதன் மூலம் ஹார்வர்டு  பல்கலைக்கழகம் பாதுகாப்பற்ற வளாகமாக உருவாகியிருப்பதாகவும் அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே இந்த வெளிநாட்டு மாணவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர தடையை ட்ரம்ப் அரசு விதித்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தில், இந்த பருவத்தோடு படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகும் பயில வேண்டிய மாணவர்கள் கட்டாயம் வேறு கல்வி நிறுவனங்களுக்கு மாற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், அவர்கள் அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் உரிமையை இழப்பார்கள் என்றும் ட்ரம்ப் அரசு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், இந்த ஆண்டு புதிய மாணவர்கள் ஹார்வர்டு  பல்கலைக்கழகத்தில் வந்து சேர முடியாதவாறு, வெளிநாட்டு மாணவர்கள் சேரும் பல்கலைக்கழகப் பட்டியலிலிருந்தும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பெயரை அமெரிக்க அரசு நீக்கியது.

ஒருவேளை, அரசின் சட்டத் திட்டத்துக்கு அடுத்த 72 மணிநேரத்திற்குள், ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டால், அது முன்பு போலவே இயங்கலாம் என்று கூறப்பட்டது.
by hemavathi   on 25 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.