|
||||||||
சென்னையில் வள்ளுவர் கோட்டம் பார்த்துவிட்டீர்களா? - இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகரின் மனப்பதிவு |
||||||||
நேர்த்தியாக மேம்பாடு செய்யப்பட்டு மாண்புமிகு முதல்வர் அவர்களால் சூன் 21 திறக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு ஒலி-ஒளிக்காட்சிகள் , நீரூற்று கண்கவர் காட்சிகள் வண்ணங்களுடன் நடைபெறுகிறது. உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் குடும்பத்தோடு பார்வையிட்டு மகிழலாம்.
"வள்ளுவத்தை வாழ்வியலாக்குவோம்" என்ற முழக்கத்துடன் திருக்குறள் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் 133 வகையான 1330 அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்களின் வழியே திருக்குறளைப் பரப்பும் பணியைப் புதிய முயற்சியாகச் செய்கிறார்கள். வள்ளுவர் கோட்டம் செல்பவர்கள், அங்கு அமைந்துள்ள "குறளங்காடி" யை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து உங்களுக்குப் பிடித்தவற்றை நண்பர்களுக்குப் பகிரவும்.
அமெரிக்காவில் அமைந்துள்ள Statue of Liberty , Empire State Building போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக ஓர் இலக்கியத்தை வாழ்வியலாக்க , வள்ளுவத்தை ஊர் பரவலாக்கல், உலகப் பரவலாக்கல் செய்யும் நோக்கில் முன்னெடுக்கும் பரவலாக்கல் ஆய்வுக் குழுவின் முயற்சியைப் பார்வையிட்டு, உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்து ஊக்கப்படுத்துங்கள்.
இனி திருக்குறள் சார்ந்த , தமிழ் சார்ந்த அனைத்துப் புதுமையான பரிசுப்பொருள்களும் அங்குக் கிடைக்கும். இணையத்தில் பெற விரும்புவோர் www.Kuralangadi.com இணையதளத்தில் பெறலாம்.
குறளங்காடிக்கு வந்த இசுபெயின் நாட்டுத் திருக்குறள் வாசகர் பதிவு செய்த கருத்து!
|
||||||||
| by hemavathi on 09 Jul 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|