|
||||||||
உடல் நலம் பேணல் - கவிமணி தேசிகவிநாயகம் பாடல் |
||||||||
உடல் நலம் பேணல்
உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ? சுத்த முள்ள இடமெங்கும் சுகமும் உண்டு; நீ அதனை நித்தம் நித்தம் பேணுவையேல், நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே!
ஆளும் அரசன் ஆனாலும் ஆகும் வேலை செய்வானேல், நாளும் நாளும் பண்டிதர்கை நாடி பார்க்க வேண்டாமே.
கூழை யேநீ குடித்தாலும் குளித்த பிறகு குடி, அப்பா! ஏழை யேநீ ஆனாலும், இரவில் நன்றாய் உறங்கப்பா! மட்டுக் குணவை உண்ணாமல் வாரி வாரித் தின்பாயேல்,
திட்டு முட்டுப் பட்டிடுவாய்! தினமும் பாயில் விழுந்திடுவாய். தூய காற்றும் நன்னீரும், சுண்டப் பசித்த பின் உணவும், நோயை ஓட்டி விடும், அப்பா! நூறு வயதும் தரும், அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம் அடையும் வழிகள் அறிவாயே! வருமுன் நோயைக் காப்பாயே வையம் புகழவாழ்வாயே.
- கவிமணி தேசிகவிநாயகம் பாடல் |
||||||||
by Swathi on 25 Jan 2019 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|