LOGO
  முதல் பக்கம்    மற்றவை    அறிவியல் Print Friendly and PDF
- கட்டுரைகள்

தொலைபேசி உரையாடல் எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

   இந்திய அரசியலில் கடந்த ஆண்டு ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.


     Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU(International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute -http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches)வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.


     விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF(Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.சற்று விரிவாக பார்க்கலாம்.


     உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.


     கீழ்க்கண்ட தகவல்களுக்கு இந்த படத்தை ரெபர் செய்யவும்]உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre)எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது.


     எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை. Law of Average!சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.


     இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3(Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும். இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))


     தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat)போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

நன்றி: ரவி

by Swathi   on 20 Dec 2011  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் அறிவியல் தமிழ்
நீர் உடும்பு நீர் உடும்பு
அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை அறிவியல் தமிழ் முனைவர். ஆர். ராஜராஜன் , சென்னை
மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது மனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது
சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்! சனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்!
நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்! - பேராசிரியர் கே. ராஜு
ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு
கருத்துகள்
25-Dec-2011 08:28:09 shiva said : Report Abuse
தனிநபர் பேசும் உரையாடல்களை ஒட்டு கேட்க்க ஏதேனும் வழி உண்டா.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.