|
||||||||
குதிகால் வலிக்கு - ஆயுர்வேத மருத்துவம் |
||||||||
![]() நீங்கள் முதலில் குதி காலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டடுள்ளதாக என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எக்ஸ்ரே மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும் காலையல் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம். சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லி.யும் கலந்து ஒரு இரும்புக் கரண்டியில் சிறிது எண்ணெயை. சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து வெந்நீர்ப் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 5-10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும. காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம். கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபேயாகிக்கவும். கால்களைத் தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதைத் தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும். |
||||||||
by Swathi on 10 Dec 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|