LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

தீபாவளி

 

தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை, தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி என உணர்க. தீபங்களில் ஜோதியாக 
விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். ஐப்பசியில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான திருவிழா 
தீபாவளி.ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின் பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை 
விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்றோம்.தீபாவளி தபால் தலை: தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான 
இந்தியாவில் செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் 
மட்டும்தான்.
தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு என்றாலும் அமெரிக்காவிலோ இல்லை கனடாவிலோ 
வார வேலை நாட்களில் வந்தால் அதாவது வியாழக்கிழமை தீபாவளி என்றாலும் அந்த வார இறுதி நாளான சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ தான் 
கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் சில மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான் மற்றும் 
உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் என்ற அளவில் வெகு அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. 
இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இந்த மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கிறது. 
தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை. 
நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை 'காளிகா புராண'த்திலும் வேறு 
சில புராணங்களிலும் உப கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இருந்தால் இது வைணவ 
விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் 
தீபாவளியையும் ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா?
 தீபாவளியை இந்தியர்கள் அனைவருமே கொண்டாடுகிறார்கள். ஆனால் 
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக் கொள்கிறார்கள்.

     தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை, தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி என உணர்க. தீபங்களில் ஜோதியாக விளங்கும் சிவபெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். ஐப்பசியில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான திருவிழா தீபாவளி.ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின் பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்றோம்.

 

தீபாவளி தபால் தலை:

 

     தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

 

     தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள் கொண்டாடுவோரும் உண்டு என்றாலும் அமெரிக்காவிலோ இல்லை கனடாவிலோ வார வேலை நாட்களில் வந்தால் அதாவது வியாழக்கிழமை தீபாவளி என்றாலும் அந்த வார இறுதி நாளான சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ தான் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் சில மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் என்ற அளவில் வெகு அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது.

 

    இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இந்த மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கிறது. தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும், சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக் கதை. நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை 'காளிகா புராண'த்திலும் வேறு சில புராணங்களிலும் உப கதையாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

     கிருஷ்ணன் சத்தியபாமா சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இருந்தால் இது வைணவ விழாவாகக் கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் தீபாவளியையும் ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா? தீபாவளியை இந்தியர்கள் அனைவருமே கொண்டாடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு காரணத்தைக் கூறிக் கொள்கிறார்கள்.

by Swathi   on 10 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.