LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

ஓணம் பண்டிகை

திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை கேரள மக்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். ஓவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தொடர்ந்து 10 நாட்கள் இந்தப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் வரும் அறுவடை கால பாரம்பரிய மிக்க பண்டிகையாகவும் இது கொண்டாடப் படுகிறது. ‘சொத்தை விற்றாவது ஓண விருந்தை முறைப்படி நடத்த வேண்டும்’ என்ற ஒரு வழக்கு சொல் இந்த ஓணத் திருவிழாவின் பெருமையை பறைசாற்றும்.

ஓணம் பண்டிகை பண்டையக் காலத்தில் தமிழ்நாட்டின் மதுரையில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தற்போது கேரளாவில் மட்டுமே இந்தப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப் படுகின்றது. மேலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அங்கு கிடைப்பதை வைத்து ஓரளவுக்கு இந்தப் பண்டிகையை நிறைவு செய்கிறார்கள்.

வரலாறு காட்டும் ஓணம் பண்டிகை

    கேரள நாட்டை மகாபலி சக்கரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் எந்தவித துன்பமும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். அவனுடைய ஆட்சியில் ஒரு நாள் கூட வீணான நாளாக கருத முடியாத அளவில் செழிப்பு நிறைந்திருந்தது. அவனுடைய வெற்றிகளையும் மக்களிடம் அவனுக்கிருந்த செல்வாக்கினையும் கண்ட தேவர்கள் உள்ளம் கொதித்தனர். அவனை தொடர்ந்து வளர விட்டால் தங்களால் அவனை அழிக்க முடியாமலேயே போய்விடும் என்று அவர்கள் கருதினர். ஆதனால் திருமாலிடம் சென்று முறையிட்டனர். இந்நிலையில் மகாபலிக்கும் தன்னைப் பற்றிய செருக்கு அதிகமானது.

உடனே திருமால் அதிதி என்பவருக்கு மகனாக வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி செய்த யாகத்திற்கு சென்று தனக்கு மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டார். அவ்வாறே கொடுக்க ஒப்புக் கொண்டார் மகாபலி. அந்த யாகத்தில் யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதாக வாக்களித்திருந்தான் அவன். பெரிய உருவெடுத்த வாமனர், ஒரு அடியை ப+மியிலும், ஒரு அடியை வானத்திலும் அளந்தார். ‘மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று அவர் கேட்க தன்னுடைய தலையையே அதற்கு கொடுத்தார் மகாபலி.

பாதாளத்திற்குள் வீழ்த்தப்பட்ட மகாபலி, திருமாலிடம், தான் இறந்த நாளை மக்கள் ஓணம் என்ற பண்டிகையாக கொண்டாட வேண்டும் என்றும் ஒவ்வொரு வருடமும் தான் அந்த நாளில் ப+லோகத்திற்கு வந்து தன்னுடைய மக்களை சந்திக்க வேண்டும், மக்கள் குதூகலமாக இருப்பதைக் காண வேண்டும் என்றும் வரம் கேட்டான். திருமாலும் அதற்கு சம்மதித்தார்.

ஆரியர்கள் சூத்திரர்களை அழிக்கவே இத்தகைய பத்து வகை அவதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றும் அவர்களால் மகாபலியின் ப+த உடலை வேண்டுமானாலும் அழிக்க முடியும் புகழுடம்பை அந்த புல்லர்களால் அழிக்க முடியாது என்றும் கலைஞர் கருணாநிதி ஒரு கட்டுரையில் கூறியுள்ளார்.

மகாபலியை வரவேற்கும் ப+க்கோலம்

    மகாபலி சக்கரவர்த்தியின் நினைவு தினமாகவும், இந்த நாளில் அவர் தான் ஆண்ட நாட்டிற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவரை வரவேற்கும் விதமாக கேரளாவில் ஒவ்வொரு வீட்டிலும் ப+க்கோலம் போடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் மலையாளிகள் தங்கள் வீடுகளில் இந்தக் கோலத்தை போடுகிறார்கள். ஓவ்வொருவரும் தங்கள் வீட்டு முற்றத்தை பகலில் சாணத்தால் மெழுகி, பலவகைப் ப+க்களைக் கொண்டு அழகாக கோலமிடுவார்கள். கோலத்தின் நடுவில் குத்து விளக்கும் ஏற்றப்படும். அந்த விளக்கைச் சுற்றி பலவகையான காய் கனிகளை அழகாக அடுக்கி வைப்பார்கள். இந்தக் கோலம் ‘அத்தப்ப+க் கோலம்’ என்று அழைக்கப்படுகிறது.

பூக்களின் மேல் திருகாற்கரை அட்டனின் உருவத்தை வைத்து, அதன் முன்பு ஒரு வாழை இலையில் தேங்காய் உடைத்து வைத்து, தேங்காய் தண்ணீருடன் தும்பைப் ப+க்களையும் இட்டு, அதன் அருகில் பழத்தை வைப்பார்கள். பின்பு தும்பைப் ப+வால் அர்ச்சனை செய்வார்கள். மாலையில் இந்தக் கோலத்தைச் சுற்றி பெண்கள் தங்கள் பாரம்பரிய உடையுடன் ‘திருவாதிரைக் களி’ (களி – நடனம்) என்ற நடனத்தை ஆடுவார்கள். மேலும் இந்த பத்து நாட்களிலும், கைக்கொட்டிக்களி, மோகினி ஆட்டம், கோலாட்டம், ஓணக் களி போன்ற நடனங்களும் ஆடப்படும். இந்த நடனங்கள் பார்ப்பவர் உள்ளத்தைக் கவரும்.
 
    மக்களிடையே மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் இந்த தினத்தில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து பலவகையான காய் கனிகளையும் உணவு வகைகளையும் விருந்தினர்களுக்கு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அன்றைய தினத்தில் திருமால் உறையும் கோயில்களில் பலவகையான ப+ஜைகளும் நடத்தப்படுகின்றன. மேலும் இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக பலவித வீர விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. வேலைக்களி (சேரிப்போர்), ஓணப்பந்து, படகுப்போட்டி முதலியவற்றில் படகுப்போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றது. கேரளாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் போட்டியாளர்கள் வந்திருந்து, இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்படும் படகு ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்வார்கள். இதைக் காண பார்வையாளர்களாக உலகம் முழுவதிலிருந்து வெளிநாட்டவர்களும் வருவார்கள். வெளிநாட்டில் வசித்துவரும் மலையாளிகளும் கேரளாவிற்கு வந்திருந்து தங்கள் உறவினர்களுடன் இந்தப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள்.

    கேரளாவில் அதிகமாகக் கொண்டாடப்படும் ஓணம், சமண சமய சார்புடையது. என்றாலும் அங்கு ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி இஸ்லாமியர், கிறித்துவர்கள் என அனைவரும் ஒன்றுக் கூடி தேசிய விழாவாக இதைக் கொண்டாடி வருகின்றனர். வெளிநாடு வாழ் மலையாளிகள் இந்த தினத்தில் இந்த பண்டிகையை தாங்கள் இருக்கும் இடத்திலேயே கொண்டாடி வருகின்றனர். இலங்கையிலும் இந்த பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றது.

பழங்காலத்தில் சைவ சமய பண்டிகையாக இருந்த ஓணம், பிறகு வைணவம், சமணம், பொளத்தம் போன்ற மதத்தினரைச் சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக மாறியுள்ளது வரவேற்கத் தகுந்த விஷயமாகும்.

    தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நாகரிக வளர்ச்சியில் மக்கள் இந்த விழாவை பத்து நாட்களும் கொண்டாடுவதில்லை. மாறாக திருவோணத் திருநாளை மட்டுமே வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனாலும் ‘அத்தம்’ என்றுக் கூறப்படும் முதல் நாளை கேரளத்தில் இன்றும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வீட்டு முற்றத்தில் ப+க்கோலம் இடுவதையே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.

    மேலும் இந்தக் கலாச்சார திருவிழாவின்போது, சுற்றுலாத்துறையின் சார்பில் கதகளி உள்ளிட்ட கேரள கலாச்சாரத்தை வலியுறுத்தும் நாட்டியங்களும் இடம்பெறும். திருச்சூரில் பட்டம் கட்டிய யானைகளின் அணிவகுப்பு கண்ணைக் கவரும். திருக்காகரையில் உள்ள மகாபலியின் கோயில் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னும்.

 

_   சூர்யா சரவணன்   

by Swathi   on 30 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.