LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

வாஸ்து நாள்

 

பூமி பூஜை போட உகந்த நாள் 
வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்து வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, 
காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான 
முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே 
மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் 
பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். 
இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.
வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள 
முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை 
மேற்கொள்ளலாம்.தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.
உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்.தேய்பிறை நாட்களில் செய்வதை விட 
வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது.மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு 
கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை 
வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி 
ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.

பூமி பூஜை போட உகந்த நாள் :

 

     வாஸ்து நாளன்று பூமி பூஜை செய்வது விசேஷ பலன்களை அளிக்கும் என்பது தவறான கருத்து வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களாகிய நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐந்தையும் ஒருங்கிணைத்து அவற்றை நமக்கு சாதகமாக செயல்பட அல்லது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் விஞ்ஞான முறைப்படி கட்டிடங்களை அமைக்கும் முறையே ஆகும்.

 

     வாஸ்து நாளில் பூமி பூஜை செய்வதைவிட வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை அமைக்கும் முறையிலேயே மிக அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு உகந்த நாளில் முகூர்த்த நாளும் கூடி வரும் பட்சத்தில் அந்நாளுக்குரிய நல்ல நேரத்தில் மனைக்கு பூமி பூஜை செய்வது தான் முறை. இந்நாளுடன் வாஸ்து நாளும் ஒன்றி வந்தால் மேலும் சிறப்பாகும். 

 

     இரு நாட்களும் ஒன்றியமைந்தால் கூட இவ்விரு நாட்களுக்குரிய நல்ல நேரங்கள் ஒன்றி வருவது அவ்வளவு சுலபமல்ல.வருடத்திற்கு சுமார் 8 நாட்களே வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்வதைவிட மேற்கூறியதைக் கருத்தில் கொண்டு, அத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள முறைகளும் நல்ல நாளுடன் ஒன்றி வருவது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

              "செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளை விட வரிசைப்படி புதன், வெள்ளி, திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பூமி பூஜையை மேற்கொள்ளலாம்"

 

               "தூண்களுக்குரிய குழியை தோண்டுமிடத்தில் பூஜைக்குரிய குழியை எடுக்கக் கூடாது.உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் வரும் நாட்களை தவிர்ப்பதே மிக முக்கியம்"

 

                   "தேய்பிறை நாட்களில் செய்வதை விட வளர்பிறை நாட்களில் செய்வது சற்று நல்லது"

 

     மனை மற்றும் கட்டிடத்தின் தென்மேற்கு மூலைகளிலிருந்து மனையின் வட கிழக்கு மூலைக்கு இரு கோடுகளை வரைந்து கொள்ளுங்கள். மேலும் கட்டிடத்தின் வடகிழக்கு மூலையிலிருந்து மனையின் வடகிழக்கு மூலை வரை மூன்றாவதுக் கோட்டினை வரைந்து கொள்ளுங்கள். இம்மூன்று கோடுகளுக்கு இடையிலோ, ஒட்டியோ பூமி பூஜை செய்வதற்குரிய குழி, போர்வெல், கிணறு, நிலத்தடிநீர்த்தொட்டி ஆகியவற்றை அமைத்து விடக்கூடாது.

by Swathi   on 09 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.