LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

ஹோஸிமின்

மற்றொரு நாட்டின் உதவியை எதிர்பார்க்கின்ற

மக்கள் சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி இல்லாதவர்கள் .


ஆசியப் புரட்சியின் மாபெரும் தலைவர் ஹோஸிமின் ( Hochiminh ) ஆவார் . மூன்று பெரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர் . உலக முழுமைக்குமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகளில் போற்றுதலுக்குரியவர் . ஹோஸிமின் என்றால் வியட்நாமின் ஒளி என்று பொருள் . இவர் 1890 ஆம் ஆண்டு மே 19 அன்று வியட்நாம் நாட்டில் பிறந்தார் . இவரின் பெயர் நியூவென் சின் சுங் என்பதாகும் . இவரின் ரகசியப் பெயர்தான் ஹோஸிமின் . கிழிந்த ரப்பர் செருப்பு , நைந்துபோன கோட்டு , இடுங்கிய கண்கள் , ஒடிசலான உருவம் , அவர்தான் ஹோஸிமின் . ஆனால் வியட்நாம் நாட்டின் விடுதலைப் போராளி , புரட்சியாளர் , வியட்நாமின் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் . பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார் . அவ்வெற்றியால் வடக்கு வியட்நாம் கம்யூனிச நாடாக மாறியது .

வியட்நாம் போரை அவரது இறப்புவரையில் முன்னின்று நடத்தினார் .1946 முதல் 1964 ஆம் ஆண்டுவரை வியட்நாமின் அதிபராக இருந்தார் . போர் முடிவுக்கு வந்தவுடன் இரு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன . தெற்கு வியட்நாமின் தலைநகரமாக இருந்த சாய்கோன் நகரம் ஹோஸிமின் நினைவாக ஹோஸிமின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது . ஹோஸிமினின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது . இவர் 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று இயற்கை எய்தினார் .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.