LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூட்டு வலி (Joint Pain)

மூட்டு வலியை விரட்டியடிக்க சில கைவைத்தியங்கள் !!

40 வயதை கடந்து விட்டாலே மூட்டு வலி ஏற்படும் என்பதெல்லாம் அந்த காலங்க. இப்போதெல்லாம் இளம் வயதுள்ளவர்களுக்கும் மூட்டு வலி பிரச்னை ஏற்படுகிறது. 


மூட்டு வலி, மூட்டு அழற்சி (Osteo Arthritist), முடக்கு வாதம் (Rheimatoid Arthristis) என்று இரு வகைப்படுகிறது. 


மூட்டு அழற்சி, பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 


முடக்கு வாதம், எந்த வயதினருக்கும் வரலாம். இது பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.


மூட்டு வலி அவதியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகளைப் பற்றி இங்கு காண்போம் : 


நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி, ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிய உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும்.


இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினமும் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால்கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


வெதுவெதுப்பான தேங்காய் எண்ணையில் அல்லது கடுகெண்ணையில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வலி இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்தால் வலி குறையும். இது மூட்டு வலிக்கு உடனடித் தீர்வாகும்.


இரண்டு மேஜைக் கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி, ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.


பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும்.பின் மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தைச் சாப்பிடும்போது காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டு, புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.


ஒரு மேஜைக் கரண்டி பச்சைப் பருப்பு அல்லது பாசிப் பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேக வைத்து சூப்பாக நாளன்றுக்கு இரு முறை சாப்பிட வேண்டும்.


உணவுப் பழக்கம்..........


மூட்டு வலி உள்ளவர்கள் உணவுப் பழக்கத்திலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை...


* வாழைப்பழம் அதிகம் சாப்பிட வேண்டும்.


* காய்கறி 'சூப்' அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.


* கால்சியம் அதிகம் உள்ள பால், பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.


* காரமான வறுத்த உணவுகள், டீ, காபி, பகல் தூக்கம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மனக் கவலை, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

It is a great idea to treat pain with hydrocodone. Order this pills from buy-hydrocodone-vicodin.net with no prescription

by Swathi   on 03 Jun 2014  6 Comments
Tags: Joint Pain   Mootu Vali   மூட்டு வலி              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain மூட்டு வலி குணமாக வேப்பிலை எவ்வாறு பயன்படுத்துவது? | How to use Neem for cure joint pain
மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க.. மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..
மூட்டு, முழங்கால் வலியை எப்படி சரிசெய்வது? ஹீலர் பாஸ்கர் மூட்டு, முழங்கால் வலியை எப்படி சரிசெய்வது? ஹீலர் பாஸ்கர்
மூட்டு வலியை விரட்டியடிக்க சில கைவைத்தியங்கள் !! மூட்டு வலியை விரட்டியடிக்க சில கைவைத்தியங்கள் !!
மூட்டு வலி பற்றிய முழுமையான தகவல்கள் !! மூட்டு வலி பற்றிய முழுமையான தகவல்கள் !!
மூட்டு வலியால் அவதி படுபவரா நீங்கள் !! உங்களுக்கான உணவுகள் எது தெரியுமா !! மூட்டு வலியால் அவதி படுபவரா நீங்கள் !! உங்களுக்கான உணவுகள் எது தெரியுமா !!
கருத்துகள்
17-Sep-2020 01:19:37 sudhakar said : Report Abuse
I HAVE PUFFNESS IN LEFT KNEE JOINT BOTH ABOVE AND BELOW KNEE CAP. SPREAD UP TO THIGH (ONLY KEFT KNEE). WHAT IS HOME REMEDY AND PERMANT SOLUTION
 
17-Sep-2017 13:07:14 த. வீரமணி.D said : Report Abuse
சார், தங்களது பதிவுகளை காப்பி எடுக்க வழி சொல்லுங்கள் பண்ட்ஸ் உதவியுடன் த.வீரமணி
 
17-Sep-2017 13:07:03 த. வீரமணி.D said : Report Abuse
சார், தங்களது பதிவுகளை காப்பி எடுக்க வழி சொல்லுங்கள் பண்ட்ஸ் உதவியுடன் த.வீரமணி
 
17-Sep-2017 13:06:53 த. வீரமணி.D said : Report Abuse
சார், தங்களது பதிவுகளை காப்பி எடுக்க வழி சொல்லுங்கள் பண்ட்ஸ் உதவியுடன் த.வீரமணி
 
17-Sep-2017 13:06:36 த. வீரமணி.D said : Report Abuse
சார், தங்களது பதிவுகளை காப்பி எடுக்க வழி சொல்லுங்கள் பண்ட்ஸ் உதவியுடன் த.வீரமணி
 
25-Jun-2016 04:27:42 Arumugasamy said : Report Abuse
Super tips
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.