|
|||||
அரசியல் நேர்மை -ரா. ராஜராஜன் |
|||||
![]() அரசியல் நேர்மை என்ற சொல்லே, கேட்பதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கின்றது. இந்நிலை ஏற்பட்டால், பூமியிலே சொர்க்கம் என்ற ஒரு நிலையைத்தானே மக்கள் அடைவார்கள். ஒட்டுமொத்த மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதுதானே அரசியலின் இன்றியமையாத கோட்பாடு, மக்களின் வளமான வாழ்விற்குத் திட்டங்களை வகுத்து, அவற்றை நிறைவேற்றுதற்கான ஒரு பாதைதானே அரசியல் என்பது தன்னலம் பார்த்த பின்தானே மற்றவர் நலனை மனிதன் நினைக்கின்றான். மனிதனுடைய அன்றாட வாழ்விற்கும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்தான் இன்று அரசியல் இருக்கின்றது. தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் எண்ணத்திலும் நியாயமிருக்கிறது. ஆனால் பொதுநலம் என்பதே
தன்னலத்திற்குப் பின்தான், என்று அரசியல்வாதி நினைக்கின்ற போது தான், அது விபரீதமாக முடிகின்றது.
கல்வியில் புனிதம், அரசியல் நேர்மை என்றெல்லாம் பேசுவது, கேளிக்கையாகி விடுமோ என்ற அவலநிலை நிலவி வருகிறது, அரசியல் ஆதாயம்
என்பது, மாநில அரசியலாக இருந்தாலும் சரி, மத்திய அரசியலாக இருந்தாலும் சரி, உலக அரசியலாக இருந்தாலும் சரி, மிகச் சாதாரணமாக இருத்கின்றது.
வாரிசுகளின் அரசியல் என்று வருகின்ற போது, அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு, இன்னும் பலமடங்கு பெருகி விடுகிறது. அரசியல் தலைவர்களின்
வாரிசுகள், அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை, ஒரு குடிமகன் அரசியலில் வருவதற்கு எந்தெந்த தகுதிகளெல்லாம் உள்ளனவோ,
என்னென்ன உரிமைகளெல்லாம் உள்ளனவோ, அவையெல்லாம் ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ, மகளுக்கோ, நிச்சயம் உண்டு, தகுதியும், திறமையும்
சேவை வேட்கையும் கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ற நிலையில், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அது இருக்காது என்று எப்படிக்
கூற முடியும். ஆனால் அந்த நோக்கம், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சுயநலப் போக்கிற்காகவும் பயன்பட்டு விடக் கூடாது என்பதுதான்
கவனிக்கப்பட வேண்டியது.
தென்னாட்டு கார்ல் மார்க்ஸ் என்று கூறப்படும், தந்தை பெரியாரிடம் கேட்டால் அரசியல் ஒரு வெங்காயம் என்பார். உரிக்க உரிக்க ஒன்றமேயில்லை, இறுதி
என்று ஒன்றுமே இல்லை என்பது போல, அரசியல் என்பது ஒன்றுமில்லை என்று எடுத்துக் கொள்வதா? அல்லது வெங்காயமின்றி உணவில் எதுவுமில்லை
என்று எடுத்துக் கொள்வதா? யேல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அரசியல் என்பது என்ன? என்று அறிஞர் அண்ணாவிடம் வினவிய போது, அவரும்
அரசியல் என்பது ஒரு வெங்காயம் என்று இதே பதிலைத் தான் சொன்னார், தற்போதய மாணவரைப் பார்த்து, அரசியல் என்ன என்று கேட்டால், அரசியல் ஒரு
சாக்கடை என்பார்கள். வேண்டாதவற்றை வெளியேற்றும் சாக்கடை இல்லையேல், சுகாதாரம் என்னவாகும்? அதுபோல் சமுதாயத்தின் சீர் கேடுகளைக்
களைவது தான் அரசியல் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது வேண்டாத கழிவுகளெல்லாம் ஒன்று சேர்ந்து சாக்கடை இருப்பது போலத் தீயவைகளெல்லாம்
இணைந்தது தான் அரசியல் என்று எடுத்துக் கொள்வதா?
ஒட்டுமொத்த நலன் நோக்கிய, அரசியல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது அனைவரின்ன் விழைவு. இளைஞர்கள் மற்றும் முதியோர் அனைவரின்
கவலையும் இதுதான். அதாவது தற்போதய நிலையில் அரசியலில், நேர்மையும், தரமும் குறைந்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.
தொடர்ந்து சுயநலப் போக்கிலே சென்று கொண்டிருக்கும் அரசியல் போக்கில், ஒருமிகப் பெரிய சமுதாய பாதிப்பையும், இழப்பையும், ஏற்படுத்தி விடுமோ என்ற
கவலை பொது நலச் சிந்தனையாளர்களிடையிலும், சமூக ஆர்வலரின் மனதிலும் வேரூன்றி விட்டது. செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும்,
பாலுணர்வு பற்றிய செய்திகளும், வன்முறை பற்றிய செய்திகளும் சாதாரணமாக வெளி வருகின்றன. இதன் விளைவாக தொலைக்காட்சி மற்றும்,
திரைப்படங்களிலும் இதைப் போன்ற காட்சிகள் இடம் பெறுவது மட்டுமல்லாமல், மக்கள் இவற்றை விரும்பிப் பார்க்கக் கூடிய ஒன்றாக ஆகி வருகின்றது.
அரசு, மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில், லஞ்ச லாவண்யம் சட்டத்திற்குப் புறம்பான செய்தி என்பது சாதாரண செய்தியாகி விட்டது. தேர்தலில்
முறைகேடு, கள்ள வாக்குகள் மற்றும், வன்முறை இவையெல்லாம் வெளிப்படையான செயல்களாகி விட்டன.
விலைபோட்டு வாங்கவா முடியும் கல்வி என்று பாரதிதாசன் கூறியது போக, விலை போட்டு வாங்கத்தான் முடியும் கல்வி என்ற அவல நிலை உருவாகி
விட்டது. முறைகேடு, விதிமீறல், மனித உரிமை மீறல் இவையெல்லாம் தற்போதய சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. இந்துமத நம்பிக்கையாளர்கள்,
இதுதான் கலியுகமோ என்று புலம்புகிறார்கள், கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள், பைபிளில் சொன்னபடிதான் தற்போது நடக்கின்றது என்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் சாத்தானின் காலம் என்பது இதுதான் என்கிறார்கள்.
அரசியலில் எப்படியும் அதிகாரம் பெற்றுவிட வேண்டும் என்ற விழைவு, சில அரசியல்வாதிகளை, எதையும் செய்யத் துணிய வைக்கிறது. அரசியல் ஆதாயம்
என்பதன் மேல் இருக்கின்ற வெறி, தலைக்கு மேல் ஏறி அரசியல்வாதிகள் எதையும் செய்யத் துணிகிறார்கள், இதனால் தான், பல்வேறு சீர் கேடுகளின்
விளைநிலமாக அரசியல் மாறி யிருக்கிறது.
தனிமனிதனாக இருந்தாலும் சாரி, ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அல்லது மாநிலமாக இருந்தாலும் சரி,நாடாக இருந்தாலும் சரி, அரசியல் நேர்மை
என்பது பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. சமூக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் இவற்றின் மீதுள்ள நம்பிக்கைகள், சட்டதிட்டங்கள் விதிமுறைகளெல்லாம்,
சில கொள்கையின் அடிப்படையில் உள்ளது. கொள்கை என்பதற்து ஒரு நேரடி வரையறை கிடையாது, அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது.
கொள்கை என்பது உணர்வின் அடிப்படையிலமைந்தது.
நேர்மை என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கம், நேர்மையைப் பற்றி, அதுவும் அரசியல் நேர்மை பற்றிப் பரவலாகப் பேசப் படுகிறது. நடைமுறையில் நேர்மை
என்பது, ஒரு சிக்கலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் நேர்மைக் குறைவு, ஊழல், லஞ்சம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்,
குறுக்கு வழிகள் இவையெல்லாம் அரசியலில் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன, இதை ஒரு செய்தியாக நாள்தோறும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
என்பது தற்போது ஒவ்வொரு கட்சியின் ஆட்சி முடிவிலும் அல்லது ஒவ்வொரு ஆண்டும், எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால், ஆட்சியில் உள்ள கட்சிகளின்
ஊழல் அம்பலத்திற்கு வருவது வரலாற்று நிகழ்வாகி விட்டது.
கறுப்புப் பணம், கள்ளப்பணம், கள்ளச்சந்தை இவையெல்லாம் ஒழிந்து விட்டால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக மாறிவிடும். ஒரு ஆண்டு புழக்கத்தில்
உள்ள பணம் என்பது நம் நாட்டின் வருமானத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், கறுப்புப் பணம், கள்ளச் சந்தை இவை, தலை
விரித்தாடும் இக்காலச் சூழலில், கணக்கில் வராத பணங்கள், பல லட்சம் கோடியைத் தாண்டி விடுகின்றன, இவை ஒரு சில அரசியல் வாதிகள் மற்றும் பண
முதலைகளின் கைகளில் சிக்குண்டு கிடப்பதால், பொருளாதார வளர்ச்சிக்கு இவை ஒரு சிறிதும் பயன்படாத நிலை உண்டாகிறது. தற்காலத்தில் பல்வேறு
ஊடகங்கள் வாயிலாக, எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட சில செய்திகளை அம்பலத்திற்குக் கொண்டு வருகின்றது. வருமானவாரித் துறை அதிகாரிகளின்
கவனங்களுக்கு இவை சில நேரங்களில், சுரண்டலின் ஒரு பகுதி வெளிச்சத்திற்கு வருகின்றது, (இது ஒரு சிறந்த அறிகுறி என்று மக்கள் நினைப்பதுண்டு.
ஆனால் எதிர்க்கட்சிகள், இச்சூழ்நிலையில் ஆளும் கட்சியைக் கலைத்து, எதிர்க் கட்சிகள் தாங்கள் ஆட்சியில் அமர்ந்து மக்களின் பணத்தைச் சுருட்டச் செய்யும்
ஒரு முயற்சியே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்)
ஒரு சில சமயங்களில் வருமான வாரித்துறை அதிகாரிகளின் இல்லங்களிலேயே இது போன்ற தவறுகள் நடைபெற்று வருவதை நாம் செய்தித்தாள்களில்
படித்திருப்போம்.
'திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்கமுடியாது'
என்பது போன்ற ஒவ்வொருவரும், இது நமக்குண்டான பணி, நமது கடமை, இது மக்கட் பணி, நமது ஊதியம் இது தான், இதற்குத் தான் அரசாங்கம் நமக்கு
இவ்வளவு சலுகைகள் தந்திருக்கிறது என்று நினைத்து உழைத்தால், நிச்சயம் உண்மையான பொருளாதார வளர்ச்சியை நம்நாடு காணும்.
அரசியல் கலாச்சாரம் என்பதை மூன்று வகையாக அணுகி ஆராயலாம். 1.மக்களுடன் இணைந்த அரசியல் கலாச்சாரம்: அரசியல் எவ்வழியில் இயங்குகின்றது
என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று பொருள். அரசியலில் அரசியல் செயல்பாட்டில் தங்கள் பொறுப்பு என்ன? தங்களின் பங்களிப்பு என்ன என்று
உணர்ந்திருக்கின்றார்கள் என்று பொருளாகின்றது. மக்கள் அரசியல் செயல்பாடுகளில் பங்கு பெறுகிறார்கள் அதில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று பொருள்.
இம்முறையை மக்களுடன் இணைந்த அரசியல் கலாச்சாரம் என்று அழைக்கலாம்.
இரண்டாம் வகையில் மக்கள் அரசியல் முறைகளை, கலாச்சாரத்தை செயல்பாடுகளை நன்கு அறிந்து வைத்துள்ளனர். அரசியல் பற்றிய அறிவைப்
பெற்றுள்ளார்கள். ஆனால் அரசியலில் தங்களை முனைப்பாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்று அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் பற்றிய
உத்வேகமும், உணர்வும் இத்தகைய அமைப்புசார் மக்களுக்கு இருக்க வேண்டிய நியாயம் இல்லை.
மூன்றாம் வகையில், அரசியலில் என்ன நிகழ்கிறது என்பதே மக்களுக்குத் தெரியாது. அதில் ஈடுபாடோ ஆர்வமோ அல்லது பங்களிப்போ முற்றிலும்
அவர்களுக்கு இல்லை என்றாகிறது.
அரசியலை இந்த மூன்று கோணங்களில் நோக்கக் கூடிய மக்கள் உள்ளனர். இம்மூன்றும் முறையே எல்லா நாடுகளிலும் இடம் பெற்றுள்ளன. எந்த வகை
மக்கள் என்று எப்படி நிர்ணயம் செய்வது என்பது அவர்களுடைய, தனிப்பட்ட பின்னணி, அவர்கள் சார்ந்த பகுதியின் நிலை, சூழல்கள் மற்றும் பொது நிகழ்வுகள்
தொடர்பான அவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடு இவற்றைப் பொறுத்து அமையும். இந்தியாவில் இம் மூன்று வகையும் பரவியிருப்பதைக் காணலாம்.
அரசியலில் பங்களிப்புக் கலாச்சாரம் என்று வரும் போது அதை அல்மாண்ட், பாவல் என்ற அறிஞர்கள் இதை மூன்ற வகையாக அணுகுகிறார்கள்.
அரசியல் சார்ந்த அறிவு, விழிப்புணர்வு, அரசியல் பாதிப்பு மற்றும் அது தொடர்பான உணர்வுகள்.
இத்தகைய நிலையில், அரசியல் நிகழ்வுகள் பற்றிய கருத்து தொரிவித்தல் அதன் முடிவுகளை முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்துதல்.
அரசியல் சார்ந்த காரணிகள் யாவை? அவை சட்டமுறை நிர்வாகமுறை, செயல்படுதிறன், நீதி நிர்வாகம், அரசியல் கட்சிகள் அல்லது அணிகள், தேர்தல்
போன்றவை யாகும். இது தவிர வேறு ஒரு பிரிவையும் இங்கு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது அரசியல் நம்பிக்கை தற்போதய அரசியல்
அமைப்பு என்பதாகும். இவை தவிர அந்தந்த நாட்டைக் காப்பது போன்ற மனிதச் சுதந்திரம் பற்றி சிந்திப்போர் உள்ளனர். அரசியல் விழிப்புணர்வு பற்றி
ஆவேசம் கொள்வோர் உள்ளனர். தெற்காசியாவில் இருப்பதைப் போல, அடிமைத்தனத்திற்குக் குரல் கொடுப்போர் உள்ளனர்.
அரசியல் கலாச்சாரம் மக்களுக்குத்தானே இயற்கையாக உருவாகக் கூடிய அல்லது உணர்வின் வெளிப்பாடாக வர வேண்டிய ஒன்று, அதைத் திணிக்க இயலாது.
வேறு எவாரிடமிருந்தும் பெற்றுத் தர இயலாது, இயல்பாகத் தோன்ற வேண்டிய ஒன்றாகும். வரலாற்றின் அடித்தளத்திலிருந்து வரவேண்டிய ஒன்றாக
அரசியல் கலாச்சாரம் உள்ளது. ஒரு நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் அது தொடர்பான நாட்டின் வரலாறு, அந்த நாட்டின் சமூக மற்றும் பொருளாதார
நிலையை நிர்ணயித்துள்ளது.
அரசியல் உணர்வின் வெளிப்பாடு உருவாகிய விதம், நாட்டிற்கு நாடு வேறுபட்டு உள்ளது சுதந்திரம், சட்டத்தின் பிடியில் ஆட்சி இரண்டும் ஆங்கிலேயர்களின்
அடிப்படைப் பண்புகளாகும், இதன் விளைவால் தானே, ஆங்கிலேயர்களால் மன்னராட்சியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு எழுத்து வடிவமான
அரசியல் அமைப்பே இன்றி ஆங்கிலேயர்களால் மக்களாட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த வரலாறு சிறப்பானது. ஆங்கிலேய நாட்டிலிருந்து இடம்
பெயர்ந்தோர், கூட இதே உணர்வைப் பெற்றுதாதான் ஆங்காங்கே உரிமைக்குப் போராடியதோடு, தனி மனித சுதந்திரத்தையும் பெற முடிந்தது என்பது
ஆங்கிலேயர்களின் வரலாறு.
இந்தியாவில், அரசியல் தலைவர்களால் சுதந்திர வேட்கை உந்தப்பட்டு, காலப்போக்கில் அது சுதந்திர இயக்கமாக மாறியது. பெரும்பாலும், இந்திய சுதந்திரப்
போரில் மிதவாதப் போராட்டம், நாட்டுப்பற்று, நமது என்ற மேலான நோக்கில் தான் நடந்தேறியது.மேலாண்மைக் கொள்கைகள், ஆங்கிலேய அடித் தளத்திலிருந்து பெறப்பட்டதுதான், அது இந்திய ஆட்சி முறைக்கும், மக்களின் சூழலுக்கும் ஏற்ப மாற்றப்பட்டு நடைமுறை செய்யப்பட்டது. சட்டமுறை நீதி நிர்வாகம், உள்ளாட்சி இவையே ஆட்சி முறையின் தூண்களாகக் கருதப்பட்டன. பல்வேறு அரசியல் எண்ணங்கள் கொண்ட நாடு இந்தியா,
அரசியலில் நேரடியாக தொடர்புள்ளவர்கள், ஆர்வமில்லாதவர்கள் அரசியலை விட்டு முற்றிலும் விலகியுள்ளவர்கள் இப்படிப் பலதிறப்பட்ட மக்கள் நிறைந்த
இந்திய நாட்டிற்கு ஏற்ப அரசியல் ஆட்சிமுறை அமைந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர், இந்த அமைப்பு சிறிது சிறிதாக மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களைச் சந்தித்தது. பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பு
மாற்றங்களுக்கும் ஏற்ப ஆட்சிமுறை அவ்வப்போது மாற்றங்களைப் பெற்றது.
ஒரே மாதிரியான அரசியல் கலாச்சாரம், ஒரு நாட்டில் வேண்டும் என்பதில்லை. பொதுவாக ஒரு முறையும், அதைச் சார்ந்த உபமுறைகளும் இருக்கலாம்.
அமெரிக்காவில் உள்ள முறையை உற்று நோக்கிக் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வியறிவுள்ளவர்கள் மற்றும் வசதியானவர்கள் அடங்கிய மக்கள்,
அரசியலில் மிகுந்த ஆர்வத்தைக் காட்டாதவர்கள், மாறுபட்ட நடுத்தரம் மற்றம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் அரசியலில் ஆர்வம் செலுத்த
இயலாத நிலையில் அல்லது விருப்பம் இல்லாத சூழலில் இருப்பார்கள். இந்த நிலையை இந்தியா போன்ற நாட்டில் எதிர்பார்ப்பதற்கில்லை, இங்கு பலதரப்பட்ட
வகையைச் சேர்ந்த பல்வேறு எண்ணமும், ஆர்வமும் கொண்டவர்கள் இருப்பார்கள்.
இந்தியச் சூழலைப் பொறுத்தவரை, பல்வேறு துறை அரசியல் கலாச்சாரங்கள் அவ்வப்போது தோன்ற வாய்ப்புள்ளது. அவ்வாறுதான் நடைபெற்றும் வந்துள்ளது.
இவையெல்லாம் ஒரு பெரும்பான்மையான முன்னேறிய அரசியல் கோட்பாட்டை அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகா வண்ணம் செயல்படுகின்றன என்பது
அறிந்த செய்தி. இதைவிட்டு, மாறுபட்ட அமைப்புகளும், தீவிரவாதங்களும், அச்சத்தைத் தரக் கூடிய அமைப்புகளாக உருவாகி வருகின்றன.
வடகிழக்குப் பகுதியில் உள்ள அரசியல் சிந்தனை, நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுப்பதாக அமைந்துள்ளது.
சிவசேனா, தங்கள் உரிமையைக் கோரும் போராளி வர்க்கமாக காலிஸ்தானைப் பிரித்துக் கேட்டது இதே நிலையில் தான், அயோத்தியில் இராமர் கோயில்
கட்ட விசுவ இந்து பாரிஷத் இடம் கோரியது. இதே நிலையில் தான் மிக ஆணித்தரமாக மொழிப் பற்றைக் காரணமாக வைத்து அது அரசியலாக்கப்படடு தனி
மாநிலம் கோரிவருவதும் இதனால் தான், இவைதவிர, அரசியலுக்கு வெளியே பல பிரிவினைவாத சக்திகள் பல்வேறு காரணங்களைக் காட்டி
சிக்கல்களுக்கு மிகப் பெரும் காரணங்களாக இந்தியாவில் இருக்கின்றன.
சமதர்மக் கொள்கை, பல்வேறு கிராமப்புற விவசாயம் சார்ந்த புரட்சிகளை ஏற்படுத்தும் என்பது மறுக்க இயலா உண்மை. இதே நிலையில் தான் பல்வேறு
தொழிலாளர் இயக்கங்கள் தோன்றியுள்ளன. சர்வோதயக் கொள்கைகள், நில தானமற்ற கிராம நாச வேவைகள் பல அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இப்படி இந்தியா, கடந்து வந்த வரலாற்றுப் பாதையை உற்று நோக்குங்கால், பல்வேறு நிலையில், இந்தியா பிரிவினையை சந்திக்குமோ என்ற அச்சம் இருந்து
வந்தது. 1960 ஆம் ஆண்டு உலகின் அரசியல் விற்பன்னர்கள் இந்த அச்சத்தைத் தெரிவித்தனர் ஆனால் அதற்கு மாறாக இந்தியா ஒரு நிலையான
மக்களாட்சி நாடு என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. வளரும் நாடுகளின் வாரிசையில், மிகச்சிறந்த மக்களாட்சி நாடு என்ற சிறப்பை இந்தியா
பெற்றது. இந்தியாவில் ஒரு காலக்கட்டத்தில் அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த அரசை மக்கள் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரத்
தயாராக இல்லை. இதை எளிதில் மன்னிக்கவும் இல்லை, நீண்ட ஆண்டுகளுக்குப் பின்பே மீண்டும் அந்த ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அரசாங்கம்
தன்னிச்சையாகச் செய்யும் தவறுகளை மன்னிக்க, மக்கள் விரும்புவதில்லை.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் ஜனநாயக முறையை நடைமுறைப்படுத்துவதே இந்தியாவின் நடுவு நிலைமைக் கோட்பாடு ம்றறும் அரசியல்
கலாச்சாரத்தின் மிகச் சிறந்த சித்தாந்தமும் ஆகும். சமயம் சாரா நாடாக, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து வந்த போதும், சில காலக் கட்டத்தில்,
சமயம் சார்ந்த நாடாக தவறாகவும் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் பிரிவினைவாதத்திற்குத் தூண்டுகோல் இடப்பட்டது. ஆயினும், இதையெல்லாம்
தகர்த்து இந்தியா ஒரு சிறந்த மக்களாட்சி நாடு என்ற முத்திரையைப் பெற்றது.
மக்களை அணுகுகின்ற எந்த ஒரு தலைவரும் தங்கள் கட்சிகளின் சார்பாக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைக்கின்றார்கள், மக்களின் பிரச்சனைகளை
அடையாளம் கண்டு, அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கானத் தீர்வுகளை செய்து தருவதாக வாக்குறுதிகளை முன் வைக்கிறார்கள். மக்களும்,
அவர்களுக்கு வாய்ப்பளித்து தங்களின் ஒருமித்த ஆதரவைத் தந்து ஆட்சியில் அமர்த்துகின்றனர். ஆட்சிக்கு வந்ததும், அவர்சள் வாக்குறுதிகளை
மறக்கும்போதும், அல்லது மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தர மறுக்கும் போது தான், அது கலவரமாகவும் ஆட்சிக்கு எதிராகவும் அமைகின்றது.
மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தொரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளும், மக்களுக்கு ஆதரவு தருகின்றனரோ இல்லையோ, ஆளும் கட்சியைக் கலைக்கவும்,
பழிவாங்கவும் இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அதிகாரம் என்பது அரசின் உரிமை அரசின் உச்சகட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் நல்வாழ்வையும், அமைதியான வாழ்வையும் நடத்த, மக்களின்
இன்னல்களைத் தீர்க்க வேண்டும். அரசியல்வாதிகளும் மக்களின் நல்வாழ்விற்கானப் பிரதிநிதியாகத் தான் நாம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம் என்பதை
உணர்நது மக்கள் வாழ்வை உயர்த்த அந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தங்களின் தனிப்பட்ட வாழ்வை வளப்படுத்திக் கொள்வதாக
இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட அரசியல் நேர்மை நடைமுறைக்கு வருமானால், மக்கள் எந்த சலுகைகளையும் போராடிப் பெறத் தேவையில்லாமல் போகும்.
இந்தியா ஏழைகளற்ற வல்லரசு நாடாகும்.
தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் வேண்டும் என்ற அரசியல்வாதிகளின் எண்ணத்திலும் நியாயமிருக்கிறது. ஆனால் பொதுநலம் என்பதே தன்னலத்திற்குப் பின்தான், என்று அரசியல்வாதி நினைக்கின்ற போது தான், அது விபரீதமாக முடிகின்றது. கல்வியில் புனிதம், அரசியல் நேர்மை என்றெல்லாம் பேசுவது, கேளிக்கையாகி விடுமோ என்ற அவலநிலை நிலவி வருகிறது, அரசியல் ஆதாயம் என்பது, மாநில அரசியலாக இருந்தாலும் சரி, மத்திய அரசியலாக இருந்தாலும் சரி, உலக அரசியலாக இருந்தாலும் சரி, மிகச் சாதாரணமாக இருத்கின்றது. வாரிசுகளின் அரசியல் என்று வருகின்ற போது, அரசியல் வாதிகளின் சுயநலப் போக்கு, இன்னும் பலமடங்கு பெருகி விடுகிறது. அரசியல் தலைவர்களின் வாரிசுகள், அரசியலுக்கு வரக்கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை, ஒரு குடிமகன் அரசியலில் வருவதற்கு எந்தெந்த தகுதிகளெல்லாம் உள்ளனவோ, என்னென்ன உரிமைகளெல்லாம் உள்ளனவோ, அவையெல்லாம் ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ, மகளுக்கோ, நிச்சயம் உண்டு, தகுதியும், திறமையும் சேவை வேட்கையும் கொண்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்ற நிலையில், அரசியல்வாதிகளின் பிள்ளைகளுக்கு அது இருக்காது என்று எப்படிக் கூற முடியும். ஆனால் அந்த நோக்கம், அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சுயநலப் போக்கிற்காகவும் பயன்பட்டு விடக் கூடாது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. தென்னாட்டு கார்ல் மார்க்ஸ் என்று கூறப்படும், தந்தை பெரியாரிடம் கேட்டால் அரசியல் ஒரு வெங்காயம் என்பார். உரிக்க உரிக்க ஒன்றமேயில்லை, இறுதி என்று ஒன்றுமே இல்லை என்பது போல, அரசியல் என்பது ஒன்றுமில்லை என்று எடுத்துக் கொள்வதா? அல்லது வெங்காயமின்றி உணவில் எதுவுமில்லை என்று எடுத்துக் கொள்வதா? யேல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் அரசியல் என்பது என்ன? என்று அறிஞர் அண்ணாவிடம் வினவிய போது, அவரும் அரசியல் என்பது ஒரு வெங்காயம் என்று இதே பதிலைத் தான் சொன்னார், தற்போதய மாணவரைப் பார்த்து, அரசியல் என்ன என்று கேட்டால், அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். வேண்டாதவற்றை வெளியேற்றும் சாக்கடை இல்லையேல், சுகாதாரம் என்னவாகும்? அதுபோல் சமுதாயத்தின் சீர் கேடுகளைக் களைவது தான் அரசியல் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது வேண்டாத கழிவுகளெல்லாம் ஒன்று சேர்ந்து சாக்கடை இருப்பது போலத் தீயவைகளெல்லாம் இணைந்தது தான் அரசியல் என்று எடுத்துக் கொள்வதா?
அரசியலில் எப்படியும் அதிகாரம் பெற்றுவிட வேண்டும் என்ற விழைவு, சில அரசியல்வாதிகளை, எதையும் செய்யத் துணிய வைக்கிறது. அரசியல் ஆதாயம் என்பதன் மேல் இருக்கின்ற வெறி, தலைக்கு மேல் ஏறி அரசியல்வாதிகள் எதையும் செய்யத் துணிகிறார்கள், இதனால் தான், பல்வேறு சீர் கேடுகளின் விளைநிலமாக அரசியல் மாறி யிருக்கிறது. தனிமனிதனாக இருந்தாலும் சாரி, ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரி, அல்லது மாநிலமாக இருந்தாலும் சரி,நாடாக இருந்தாலும் சரி, அரசியல் நேர்மை என்பது பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. சமூக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் இவற்றின் மீதுள்ள நம்பிக்கைகள், சட்டதிட்டங்கள் விதிமுறைகளெல்லாம், சில கொள்கையின் அடிப்படையில் உள்ளது. கொள்கை என்பதற்து ஒரு நேரடி வரையறை கிடையாது, அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது. கொள்கை என்பது உணர்வின் அடிப்படையிலமைந்தது.நேர்மை என்பது கலாச்சாரத்தின் ஓர் அங்கம், நேர்மையைப் பற்றி, அதுவும் அரசியல் நேர்மை பற்றிப் பரவலாகப் பேசப் படுகிறது. நடைமுறையில் நேர்மை என்பது, ஒரு சிக்கலான சூழலைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அரசியல் நேர்மைக் குறைவு, ஊழல், லஞ்சம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், குறுக்கு வழிகள் இவையெல்லாம் அரசியலில் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன, இதை ஒரு செய்தியாக நாள்தோறும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது ஒவ்வொரு கட்சியின் ஆட்சி முடிவிலும் அல்லது ஒவ்வொரு ஆண்டும், எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தால், ஆட்சியில் உள்ள கட்சிகளின் ஊழல் அம்பலத்திற்கு வருவது வரலாற்று நிகழ்வாகி விட்டது. கறுப்புப் பணம், கள்ளப்பணம், கள்ளச்சந்தை இவையெல்லாம் ஒழிந்து விட்டால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக மாறிவிடும். ஒரு ஆண்டு புழக்கத்தில் உள்ள பணம் என்பது நம் நாட்டின் வருமானத்தின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், கறுப்புப் பணம், கள்ளச் சந்தை இவை, தலை விரித்தாடும் இக்காலச் சூழலில், கணக்கில் வராத பணங்கள், பல லட்சம் கோடியைத் தாண்டி விடுகின்றன, இவை ஒரு சில அரசியல் வாதிகள் மற்றும் பண முதலைகளின் கைகளில் சிக்குண்டு கிடப்பதால், பொருளாதார வளர்ச்சிக்கு இவை ஒரு சிறிதும் பயன்படாத நிலை உண்டாகிறது. தற்காலத்தில் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக, எதிர்க்கட்சிகள் இப்படிப்பட்ட சில செய்திகளை அம்பலத்திற்குக் கொண்டு வருகின்றது. வருமானவாரித் துறை அதிகாரிகளின் கவனங்களுக்கு இவை சில நேரங்களில், சுரண்டலின் ஒரு பகுதி வெளிச்சத்திற்கு வருகின்றது, (இது ஒரு சிறந்த அறிகுறி என்று மக்கள் நினைப்பதுண்டு. ஆனால் எதிர்க்கட்சிகள், இச்சூழ்நிலையில் ஆளும் கட்சியைக் கலைத்து, எதிர்க் கட்சிகள் தாங்கள் ஆட்சியில் அமர்ந்து மக்களின் பணத்தைச் சுருட்டச் செய்யும் ஒரு முயற்சியே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்) ஒரு சில சமயங்களில் வருமான வாரித்துறை அதிகாரிகளின் இல்லங்களிலேயே இது போன்ற தவறுகள் நடைபெற்று வருவதை நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம்.
-ரா. ராஜராஜன், கல்வியாளர் |
|||||
by Swathi on 05 Mar 2014 1 Comments | |||||
Tags: Arasiyal Arasiyal Nermai Honest in Politics R Rajarajan ரா. ராஜராஜன் அரசியல் நேர்மை | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|