LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

என்னதான் நடக்கிறது ஹாங்காங்கில் - விக்ரம்

தெற்காசிய நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்  தலைமை நகரம் ஹாங்காங். ஹாங்காங் என்றால் சீன கண்டனீஸ் மொழியில் "நறுமணம் வீசும் துறைமுகம்" (Fragrant Harbor) என்று அர்த்தம்.  செழிப்பும், அமைதியும், வியப்பும், அசுர வளர்ச்சியும் நிறைந்த நகரம் என செய்தியால் அரியப்பட்ட ஹாங்காங் . யார் கண்பட்டதோ இப்போது தினமும் போராட்டம் பற்றிய செய்திகளால் உலகின் பலரின் கவனத்தையும் கவலையையும் ஈர்த்துள்ளது.
 
1800களில் சீன தேயிலைக்கு பிரிட்டனில் ஏக கிராக்கி. அதன் சுவைக்கு ஆங்கிலேயர்கள் கிட்டதிட்ட அடிமையாகவே ஆனார்கள். வெள்ளிக்  கட்டிகளைக்  கொடுத்து வாங்கும் நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டது. இதை மாற்ற நினைத்து பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காசு கொடுத்து பயிர் செய்த ஓப்பியம் என்னும் போதை பொருளை ஹாங்காங் வழியே சீனாவில் விற்கத்  தொடங்கியது. இது ஓப்பியம் யுத்தத்தை தொடக்கியது. 1842 சமயத்தில் நிதி நெருக்கடியால் போர் செய்ய முடியாமல் தவித்த சீனாவிடமிருந்து 99 ஆண்டு ஓத்திகைக்கு கவ்ளூன் என்னும் பகுதியை பெற்றது பிரிட்டன். ஹாங்காங்கின் அசுர வளர்ச்சியில் இரண்டும் இனைந்தே வளர்ந்தது.
 
99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு நெருங்குவதற்கு முன்பே, 1980-களின் முற்பகுதியில், பிரிட்டனும் சீனாவும் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.  சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, 'ஹாங்காங் பகுதி அனைத்தையும் சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டும்' என்று வாதிட்டது. இருதரப்பினரும் 1984-ம் ஆண்டில் ஓர் ஒப்பந்தத்தை எட்டினர். இதன்படி, 1997-ம் ஆண்டு முதல் 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற கொள்கைமூலம் ஹாங்காங்கை சீனாவிடம் ஓப்படைக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
 
1997-ல் ஹாங்காங், 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற கொள்கைமூலம் சீனாவின் ஒருபகுதியாகவே இணைந்தது. இந்த நிலையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங், "குடியிருப்பாளர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும். தவிர, வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்த்து, அதிக அளவில் சுயாட்சியை அனுபவிக்கும்" என்று அந்தக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளது.
 
ஹாங்காங்கில் குற்றவாளிகள் (எனச் சந்தேகிக்கும் நபர்களை) பரிமாற்ற ஓப்பந்தம் இல்லாத சீனா, மக்காவ், தைவான் போன்ற நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டுவந்தது.  வெளிப்படையான சட்டம் மற்றும் நீதித்துறை அமைப்புக்கு பழக்கப்பட்ட ஹாங்காங் வாசிகளுக்கு  சீனாவின்  சட்டம் மற்றும் நீதித்துறை செயல்பாடுகளில் அச்சம் எழுந்தது தான் இந்த  போராட்டத்தின் தொடக்கப் புள்ளி. இந்த குற்றவாளிகள் பரிமாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு எதிராகத்தான் இப்போது ஹாங்காங்கில் கடந்த ஜூன் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.
 
 
இந்த போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 1500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போராட்டம் வலுப்பெற்ற பிறகு ஹாங்காங் செயல் தலைவர் மேதகு கேரீ லாம், இந்த சட்டம் நிரைவேற்றப்பாடாமல்   ஒத்திவைப்பதாக அறிவித்தும் பேராட்டம் ஓய்ந்தபாடில்லை. போராட்டக்காரர்கள் புதிய கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர்.
 
வார விடுமுறை நாட்களின் முதல் நாள் மாலையே நகரின் முக்கிய அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், எம்.டீ.ஆர் எனும் மெட்ரோ ரயில் நிலையங்கள்,  விமான நிலையம் அதிக பொது மக்களும், சுற்றுலா பயணிகள் கூடும் வியாபார பகுதிகளில் கருப்பு உடை முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் கூட்டமாகக் குவியத் துவங்கி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியும், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். தன்னிடம் உள்ள  லேசர் கருவி  மூலம் லேசர் கதிர்களைப் பாய்ச்சி தங்களின் முகங்களை அறியும் அரசின் தொழில்நுட்பத்தை செயல் படவிடாமல் தப்பிக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இவர்களை எச்சரிக்கை விடுத்தும், கண்ணீர்ப் புகை வீசியும்,  கலைக்கிறதும், கைது செய்தும்  வருகிறது  காவல் துறை.
 
கடந்த ஜூன் மாதம் இந்த போராட்டம் தொடங்கியதிலிருந்து சுற்றுலா, சில்லரை வணிகத்தை நம்பியுள்ள பல நிறுவனங்களைக்  கொண்ட நாடான ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இதனால் அதிக பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
மனித நேயத்துக்கும்,நேசத்துக்கும்,  கடின உழைப்புக்கும் பேர் போன ஹாங்காங் மக்கள் விரைவில் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நகரின் அமைதியையும், வீழ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையையும், பொருளாதாரத்தையும்,  வளர்ச்சியையும் மீண்டும் அடைவார்கள் என்பதே இங்குள்ள அனைவரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக உள்ளது. 
 
-ஹாங்காங்கிலிருந்து   விக்ரம் சதீஷ் 
by Swathi   on 20 Oct 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
21-Oct-2019 04:15:39 sundar said : Report Abuse
மிக தெளிவான விளக்கம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.