LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- கல்வி

மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இலவச ஒதுக்கீடு!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது?

RTE (Right to Education) - இலவச கட்டாய கல்வி சட்டம் விழிப்புணர்வு நிகழ்வு காணொளி மற்றும் விரிவான கேள்வி பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...

காணொளி: https://www.facebook.com/TN.ilayathalaimurai/videos/1073599572778738/
புகைப்படங்கள்: https://www.facebook.com/TN.ilayathalaimurai/posts/1073586696113359

தமிழகத்தில் உள்ள சுமார் 10000 தனியார் மெட்ரிக் பள்ளிகளில், ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க எல்.கே.ஜி அட்மிஷன் நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் பெயர்கள் & அவற்றில் ஒதுக்கப்பட்ட இடங்கள் பற்றிய தகவல்களை கீழ்கண்ட இணையத்தளத்தில் காணலாம்.

http://tnmatricschools.com/rte/rtehome.aspx              
IMS Customer Care: 044-28549253
http://tnmatricschools.com/rte/rteschoollist.aspx

1. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

துப்புரவாளர் குழந்தைகள் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு முன்னுரிமை உள்ளது. ஆண்டு வருமானம் 2 லட்சம் குறைவாக உள்ளவர்கள் அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் குழந்தைகள் இலவசமாக படிக்க முடியும்.

2. என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது?

குழந்தையின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்று, வருமான அல்லது ஜாதி சான்றிதழ், ஆதார் எண்

3. ஒரு பள்ளியில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருந்தால் என்ன செய்வார்கள்?
குலுக்கல் முறையில் தேர்வு செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் 10 பேரை காத்திருப்பு பட்டியலிலும் (Waiting List) வைத்திருப்பார்கள். விண்ணப்பிக்கும் போது, ஒரு பள்ளியில் மட்டும் விண்ணப்பம் செய்யாமல் 5 பள்ளிகள் வரை விண்ணப்பிக்கலாம். ஒருவேளை ஒரு பள்ளியில் கிடைக்காவிட்டாலும் அடுத்த பள்ளியில் கிடைக்க வாய்ப்புள்ளது.

4. எல்.கே.ஜி தவிர வேறு எந்த வகுப்பிலும் இந்த திட்டம் மூலம் சேர்க்க முடியாதா?

முடியாது. எல்.கே.ஜி இல் சேர்ந்தால் 8 ஆம் வகுப்பு வரை, அதே பள்ளியில் இலவசமாக படிக்கலாம். இடையில் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பின், சேரக்கூடிய பள்ளியில் இடம் இருந்தால் இதே சலுகையை அங்கும் பெறலாம்.

5. வேறென்ன கட்டணங்கள் பள்ளியில் கேட்பார்கள்?
தங்கள் குழந்தை படிப்பிற்கான கல்வி கட்டணம் அரசே செலுத்தும். அதாவது டெர்ம் பீஸ் / டியூஷன் பீஸ். அது தவிர, நோட்டு புத்தகங்கள், சீருடை போன்றவற்றிற்கு கட்டணம் கட்ட கூறுவார்கள். இதுபோன்ற இதர கட்டணங்களை கட்ட இயலாதவர்கள் தயவுசெய்து தனியார் பள்ளிகளில் சேர வேண்டாம்.

6. வேறு ஏதெனும் விதிமுறைகள் உள்ளனவா?

தாங்கள் வசிக்கும் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளில் மட்டுமே சேர்க்க முடியும். உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்குமாயின் அதற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

7. 2018 ஆம் ஆண்டு எப்போது விண்ணப்பிக்கலாம்? முடிவுகள் எப்போது தெரியும்?
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 21 தேதி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

8. கல்விக்கட்டணத்தை கட்ட சொல்லி பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்தால் என்ன செய்வது?

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மெட்ரிக் ஆய்வாளர், மெட்ரிக் இயக்குனர் ஆகிய அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். https://www.chiefeducationalofficer.in/

9. தேவையான மக்களை கண்டறிய என்ன செய்யலாம்?
குறிப்பிட்ட பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு பகுதியிலும் ஏழை மக்கள் வாழும் பகுதிக்கு சென்று துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு செய்யலாம். காவல்துறை அனுமதியோடு தெருமுனை கூட்டம் நடத்தலாம். 

10. விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய என்ன வேண்டும்?
இன்டர்நெட் வசதி கொண்ட அன்ட்ராய்ட் மொபைல் வேண்டும். camscanner என்ற சாப்ட்வேர் மூலம் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளலாம். online மூலம் தகவல்களை பூர்த்தி செய்து பின்னர் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பயனாளர்களிடம் அளிக்கலாம்.

நன்றி, இளையதலைமுறை, சமூக விழிப்புணர்வு அமைப்பு, தொடர்பு எண்: 9962265231

by Swathi   on 23 Apr 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
08-Nov-2019 06:39:32 சாண்டி said : Report Abuse
Education is the most important thing which mold the brain of the child. It is necessary to enroll the kid in the best school. Top 10 schools in Vellore
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.