LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க

ட்விட்டரில் உருவாக்கிய கணக்கினை எவ்வாறு மூடுவது? மறுபடி எப்படி மீட்பதென இந்த பதிவில் காண்போம். முன்பு ட்விட்டர் கணக்கு என்னென்ன காரணங்களால் முடக்கப்படலாம், அப்படி முடக்கப்பட்டால் எப்படி மீட்பதென விளக்கியிருந்தோம்.

உங்களது ட்விட்டர் கணக்கை மூடுவதற்கு https://twitter.com/settings/profileட்விட்டர் Profile Settings பக்கத்திற்கு சென்று அப்பக்கத்தின் கீழே இருக்கும் Deactivate My Account என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ட்விட்டர் ஒரு Warning Message காட்டும், உண்மையில் உங்கள் கணக்கை மூட விரும்புகிறீர்கள் எனில் Okay, Fine, Deactivate My

Account என்பதை தேர்வு செய்யவும்.

சிலர் தங்கள் ட்விட்டர் பெயரை, மின்னஞ்சலை மாற்ற கணக்கையே மூடி வேறு ஒன்று புதிதாக துவங்குகிறார்கள், இது அவசியமல்ல, அதே Profile Settings பக்கத்திலேயே இவற்றை மாற்றிக் கொள்ளலாம். சிலர் Spam DM களால் பாதிக்கப்படும் போது கணக்கை மூடுகிறார்களாம், அதுவும் அவசியமே அல்ல. நாம் சரி செய்து கொள்ள முடியும். ட்விட்டரில் சில நேரம் நாமே நம் கணக்கை மூடவோ, அல்லது நமது கணக்கின் விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலம் நம் கணக்கு மூடப்படவோ நிகழலாம். 30 நாட்களுக்குள் என்றால் SignIn பக்கத்தில் நம் பயனர் பெயர், கடவு சொல்லைக் கொடுத்தே மீண்டும் உயிர்ப்பித்து விடலாம். உங்கள் ட்விட்டர் கணக்கை மூடிய 30 நாட்கள் வரை அதே பெயரில், அதே மின்னஞ்சலில் வேறு ஒருவர் கணக்கு துவங்க முடியாது. மற்றும் 6 மாதங்களுக்குள் கணக்கை மீட்டு விட வேண்டும். இல்லையெனில் ஆறு மாதங்களுக்கு பின்னர் நம் கீச்சுகள், கணக்கு மொத்தமும் அழிக்கப் பட்டு விடும்.

மூடி விட்ட கணக்கை மீட்பதற்கு இந்த பயனர் படிவத்தை பூர்த்தி செய்து https://support.twitter.com/forms/general Sumbit பொத்தானை சொடுக்கவும்.

Regarding : Account deactivation/restoration

Subject : Reactivate my @—— account

Message box : கணக்கை மூடிய காரணம், மீண்டும் பெற விரும்புவதன் காரணத்தை கூறவும்.

Full name : தங்களின் முழு பெயர் ஆங்கிலத்தில்

Twitter UserName : @—– உங்கள் ட்விட்டர் பயனர் பெயர்

Email Address: கணக்கு துவங்குகையில் கொடுத்த மின்னஞ்சல் முகவரி

மேலும் நீங்கள் அந்த ட்விட்டர் கணக்கை உருவாக்க கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து restore@twitter.comஎன்ற முகவரிக்கு திரும்ப Activate செய்யக் கேட்டு வேண்டுகோள் மின்னஞ்சல் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும்.

Subject : Restoring my @—– account

Mail Body: நீங்கள் கணக்கை மூடிய காரணத்தையும், தற்போது திரும்ப பெற விரும்புவதையும் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். பதில் மின்னஞ்சல் அனுப்புவார்கள், மேலும் ஏதும் தகவல் கேட்டால் கொடுங்கள். அதிகபட்சம் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் நமது கணக்கை மீட்டு விடலாம்.

மற்றொரு கணக்கிலிருந்து ட்விட்டரில் @Support தனை பின்பற்றி அவர்களுக்கு Direct Message மூலம் ReActivate செய்யக் கோரலாம்.உதாரணமாக, “dm @support Hello, the account @userID has been deactivated, can you get it back please? Thanks”

நினைவில் கொள்க ட்விட்டர் கணக்கை மூடுவது மறுபடி மீட்டுவது இதெல்லாம் ஒரு முறை நடக்கலாம். மறுமுறை நடக்க வாய்ப்பில்லை. இழந்தால் இழந்தது தான். த்விட்டரின் விதிமுறைகளை மீறி இருந்து, அதனால் உங்கள் கணக்கு Suspend ஆகாமல் நேரடியாக Deactivate ஆகி இருந்தால் மீட்பது சிரமம் தான். ட்விட்டர் ஸ்பாம் கணக்குகளை தேடி தேடி அழித்து வருகிறது.

சரி, உங்கள் Twitter Social Media Identity யை முழுதுமாக மாற்றிட விரும்புகிறீர்கள் எனில், Profile Settings பக்கத்தில் ட்விட்டர் பயனர் பெயர் மற்றும் மின்னஞ்சலை மாற்றி விட்டு ஒரு வாரம் பயன்படுத்தவும். ட்விட்டர் தனது தகவல் தரவுகளை மாற்றிட ஆகும் காலம் இது. பின்னர் உங்கள் கணக்கை அழிக்கலாம். இதன் மூலம் நம் உருவாக்கிய twitter handle, email தனை ட்விட்டர் தளத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும். இப்போது புதிய பெயரில் உள்ள கணக்கே அழிந்திருக்கும். பழைய பெயரில் நீங்கள் வேறு ஒரு புது கணக்கை துவங்கி கொள்ளலாம். ட்விட்டரில் அழித்தாலும் கூகிள் போன்ற தேடல் தளங்களின் தரவுகளில் நீக்குவது கடினம். Page Not found என வந்தால் மட்டுமே Index லிருந்து கூகிள் உங்கள் பக்கத்தை நீக்கும். https://www.google.com/webmasters/tools/removalsகூகுளின் இந்த பக்கத்தில் நம் மூடப்பட்ட ட்விட்டர் கணக்கை அதன் Index லிருந்து நீக்க கேக்கலாம்.

ம். சரி இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ட்விட்டர் பயனர் பெயரானது நம் Social Media Identity அதை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும். நம் கீச்சுகளின் மூலம் அந்த பெயருக்கு ஒரு கூகிள் தேடல் மதிப்பை தருகிறோம். பின்னாளில் அதை மாற்றினால் நாம் சேர்த்து வைத்து அந்த மதிப்பெண்களை கைவிட்டு புதிதாக துவங்க வேண்டும்.

பதிவு : @karaiyaan

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: Close Twitter Account   Twitter Account   ட்விட்டர் கணக்கு   How to Recover Deleted Twitter Account   Recover Twitter Account   Delete Twitter Account   ட்விட்டர் கணக்கை மூட  
 தொடர்புடையவை-Related Articles
ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள் ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்
பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க
ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க
உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்? உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்?
நுழைவாயில் நுழைவாயில்
புதிய குருவி புதிய குருவி
வடிவேலுவை தொடந்து நடிகர் சந்தானமும் வந்துவிட்டார் !! வடிவேலுவை தொடந்து நடிகர் சந்தானமும் வந்துவிட்டார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.