LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

வாரிசுச் சான்றிதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

ஒருவர் இறந்த பின்பு அவரின் சொத்துக்களை பிரச்சினையில்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமாகும்


வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?


ஒருவர் அல்லது ஒரு குடும்பத் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணத்தையோ பெறுவதற்கு இறந்தவரின் வாரிசுதான் என்ற சான்றிதழ் வேண்டும். இந்தச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.


வாரிசுச் சான்றிதழ் எப்போது அவசியமாகிறது?


நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசுப் பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்கள் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.


எங்கே விண்ணப்பிப்பது?


வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கிறது.

வாரிசுச் சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிடச் சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சியரால் வழங்கப்படும்.


என்னென்ன ஆவணங்கள் தேவை?


இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் 


வாரிசுகளின் இருப்பிடச் சான்றிதழ்


எவ்வளவு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?


ஒருவர் இறந்து எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.


ஒருவர் இறந்து 30 நாட்களுக்குள் இறப்பைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உடனடியாக இறப்பைப் பதிவு செய்ய முடியாத நிலையில் அதற்கான காரணத்தைத் தெரிவித்து ஒருவருடத்திற்குள் தாமதக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்திருந்தால் அருகிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே சான்றிதழ் பெறமுடியும்.


ஒருவேளை பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் வருவதற்கு முன் இறந்திருந்தால் அவரின் இறப்புப் பதிவு செய்யப்பட்டிருக்காது. அப்படி இருக்கும்பட்சத்தில் அவரின் இறப்புப் பதிவு செய்யப்படவில்லை என்ற சான்றிதழைப் பதிவுத்துறையில் பெற்று நீதிமன்றத்தில் கொடுத்தால் நீதிமன்றம் இறப்புச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிடும்.


விண்ணப்பித்து எத்தனை நாட்களில் கொடுக்கப்படும்?


விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் தாமதமாவதற்கான காரணத்தைக் கூற வேண்டும்.


எப்போது மறுக்கப்படும்?


இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருப்பது, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவது, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.


இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate)


இறந்த நபரின் பெயரிலுள்ள முதலீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வமான உரிமை இருக்கிறது என்பதைக் காண்பிக்க ஒருவர் நீதிமன்றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.


எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம். ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந்த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குகள்/முதலீடுகள் முதலியவற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட்டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்களா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத்தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்களில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.


அந்த நிறுவனங்களில் எவ்வளவு முதலீடு/பங்குகள் உள்ளது என்பதை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத்தினால் நீதிமன்றம் அவர்களுக்கு இறங்குரிமை சான்றிதழ் வழங்கும்.


ஒருவர் காணாமல் போயிருந்தால்..?


ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டிருந்தாலும், அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எவ்விதத்திலும் பாதிக்காது. அந்தக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், செயல்முறைகள் வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்’ என்று சான்றுகளை அளித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.

by Swathi   on 21 May 2014  93 Comments
Tags: Heir Certificate   வாரிசு சான்றிதழ்   Varisu Certificate              
 தொடர்புடையவை-Related Articles
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி? வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?
வாரிசுச் சான்றிதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி ? வாரிசுச் சான்றிதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
கருத்துகள்
09-Feb-2021 15:43:51 Nepplean said : Report Abuse
Fyri
 
28-Nov-2020 09:28:40 ARUN said : Report Abuse
என் அப்பா ஒரு மாதம் முன் இறந்து விட்டார், அவருக்கு இரண்டு மனைவி. நான் முதல் மனைவியின் மகன். இரண்டாவது திருமணத்திற்கு சான்று இல்லை. அவர்களும் வாரிசு சான்றிதழில் இணைய வேண்டும் என கேட்கிறார்கள்.
 
12-Nov-2019 04:02:48 Amirth said : Report Abuse
Engalathu varisu certificate il thavaruthalaga oru peyar serkavilla so athai cencel seiyamudiyuma allathu peyar serka முடியுமா?
 
25-Oct-2019 10:02:34 Kanthasamy said : Report Abuse
குடும்ப அட்டையில் எனது பெரியப்பா பெயர் சோர்ந்து உள்ளது அவர் இறந்து 10ஆண்டுகிறது அவர் இறப்பு பதிய வில்லை எனது தந்தையின் எனக்கு வாரிசு சான்றிதழ் பெற முடியுமா
 
29-Sep-2019 06:02:11 த. தமிழரசன் said : Report Abuse
என்னுடைய தாத்தா இறந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது என் பாட்டியும் இறந்து விட்டார் என் தாத்தாவிற்கு இறப்பு சான்றிதழ் நீதி மன்றம் மூலமாக வாங்கினேன் இப்போது வாரிசு சான்றிதழ் வாங்க என் பாட்டி இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டுமா எப்படி வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும் சொல்லுங்கள். என் தாத்தாவிற்கு 2 ஆன் 2 பெண் உள்ளனர்.
 
06-Jul-2019 11:41:23 Meena said : Report Abuse
THATHA IRANTHUTANGA... VARISU CERTIFICATE APPLY PANOM ENGA PATI..ENGA AMMA VARISU NU... ENGA PATI AADHAR CARD LA AGE THAPPA KUDUTHURUKANGA NU REJECT PANATANGA.. AADHAR CENTERA AGE MATHA MUDIYATHUNU SOLTITANGA... AADHAR CHANGE PANNA PROOF ILLA... ELLAM LAIYUM AGE THAPPA IRUKU... ENA PANALAM VERA VALI ENNa
 
05-May-2019 05:31:07 Sree vidhya said : Report Abuse
எனது தாயார் ஆறு மாதம் முன்பு தவறிவிட்டார். நான் E-service மூலமாக வாரிசு சான்றிதழ் வேண்டி.பதிவு செய்தேன். (05.04.2019). இன்னும் எனக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. RI யிடம் கையொப்பம் பெற காத்து இருப்பதாக கூறுகின்றனர். விரைவில் சான்றிதழ் பெற எதேனும் வழிகள் உள்ளதா? இந்த சான்றிதழ் இருந்தால் தான் PF பெற முடியுமா? (Private company) யில் வேலை செய்தார். நன்றி.
 
28-Mar-2019 15:52:37 Mariyal said : Report Abuse
Varisu Certificate thulaithu vittaal online il edupathu epadi?????
 
15-Mar-2019 09:47:38 P.pattaiyan said : Report Abuse
என்னது மனைவி 2011 ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு 2மகன்,1மகள் உள்ளனர்,மகன்கள் இருவரும் எனக்கும்,மகளுக்கும் விட்டு விட்டு வாரிசு சான்றிதழ் எடுத்து விட்டார்கள் போல் இருகிருது.வாரிசு எடுத்து விட்டார்களா என எப்படி தெரிந்து கொள்வது. தாலுகா அலுவலகதில்ழும் விண்ணப்பம் கொடுக் கப்பட்டது.பதில் ஏதும் சொல்லம்மாடிங்கர்கள்.
 
13-Mar-2019 11:05:19 Saravanan said : Report Abuse
Yenga thatha Ku 2 pasanga 1 ponnu yenga Appa death aitaru so yenga Appa oda death certificate rain flood varum bothu kanama poiduchi ipo yenga Appa death aana certificate kekuranga,seri online la iruka patha athula pathivu pannala yenga kitta xerox tha irruku yenna pandrathu theriyala ipo original tha kekuranga yenna pannalam sollunga ,ipo seekirama Appa death certificate tharala na yenga thaha unga name poda matta solluranga
 
06-Mar-2019 11:19:33 Timothy said : Report Abuse
எனது மாமானார் இறந்த உடனே என் மாமியாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க அப்ளை செய்தேன். ஆனால் முதல் மனைவியின் பிள்ளைகள் கொடுக்க கூடாது என்று தடைசெய்து வைத்துள்ளார்கள் ஆனால் முதல் மனைவிக்கு விவாகாரத்து ஆன நோட்டீஸோடு அப்ளை செய்தேன் ஆனால் எல்லா ஆதாரங்களும் கொடுத்தும் VAO Ri அவர்களும் விசாரனை செய்தும் கொடுக்கவில்லை அடுத்து என்ன செய்வது
 
19-Dec-2018 06:03:10 தன்ராஜ் said : Report Abuse
ஒரு குடும்பத்தில் 3 பேரு அவர்களில் தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டார்கள் அவர்களில் மகளுக்கு தாய்க்கு வாரிசு சான்றிதாள் தேவை ஆனால் அவர்களின் தந்தையும் வாரிசாக வர முடியுமா? ஆனால் அவர்களின் தந்தையும் இறந்து 4 வருடங்கள் ஆகிறது இதற்கு என்ன செய்ய?
 
19-Dec-2018 06:03:00 தன்ராஜ் said : Report Abuse
ஒரு குடும்பத்தில் 3 பேரு அவர்களில் தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டார்கள் அவர்களில் மகளுக்கு தாய்க்கு வாரிசு சான்றிதாள் தேவை ஆனால் அவர்களின் தந்தையும் வாரிசாக வர முடியுமா? ஆனால் அவர்களின் தந்தையும் இறந்து 4 வருடங்கள் ஆகிறது இதற்கு என்ன செய்ய?
 
05-Dec-2018 10:17:20 ராஜ் பி said : Report Abuse
எனக்கு வாரிசு சான்று விபரங்கள் தேவை நான் இ சேவையில் பணிபுரிகிறேன்
 
29-Nov-2018 13:43:43 George said : Report Abuse
எனது மாமனார் இறந்த பிறகு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டது, பின்னர் வாரிசு சான்றிதழ் பெறும்படி அனுமதி கோரினோம், ஆனால் எனது மாமனாரின் பெற்றோரின் தகவல் கேட்கப்பட்டது அவர்கள் இறந்தபடியால் நே‌ாட்டரி மூலம் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்போது அநுகினால் இன்னும் சரியான பதில் இல்லை. தயவுசெய்து பதில் கூறவும்
 
29-Nov-2018 13:43:04 George said : Report Abuse
எனது மாமனார் இறந்த பிறகு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டது, பின்னர் வாரிசு சான்றிதழ் பெறும்படி அனுமதி கோரினோம், ஆனால் எனது மாமனாரின் பெற்றோரின் தகவல் கேட்கப்பட்டது அவர்கள் இறந்தபடியால் நே‌ாட்டரி மூலம் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்போது அநுகினால் இன்னும் சரியான பதில் இல்லை. தயவுசெய்து பதில் கூறவும்
 
29-Nov-2018 13:42:54 George said : Report Abuse
எனது மாமனார் இறந்த பிறகு இறப்பு சான்றிதழ் பெறப்பட்டது, பின்னர் வாரிசு சான்றிதழ் பெறும்படி அனுமதி கோரினோம், ஆனால் எனது மாமனாரின் பெற்றோரின் தகவல் கேட்கப்பட்டது அவர்கள் இறந்தபடியால் நே‌ாட்டரி மூலம் உரிய விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்போது அநுகினால் இன்னும் சரியான பதில் இல்லை. தயவுசெய்து பதில் கூறவும்
 
11-Nov-2018 16:55:00 கோபாலகிருஷ்ணன் said : Report Abuse
வணக்கம், என் பெயர் கோபால கிருஷ்ணன் எனது குடும்பத்தில் நான் மட்டுமே உள்ள நிலையில் வாரிசு சான்றிதழ் தேவை. இதில் என்னவென்றால் அண்ணன் இறந்து 6 வருடங்கள் ஆயிற்று போஸ்ட் மாடெர்ம் ரிப்போர்ட் மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளது ஆனால் அந்த சமயத்தில் இறப்பு சான்றிதழ் வாங்க வில்லை. அம்மா காணாமல் போய் 8 வருடங்கள் ஆயிற்று அவர் காணாமல் போன மறு தினங்களில் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனலில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார் நாங்களும் புகார் அளித்துளோம் அனால் இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் எனது அப்பா 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் அவருக்கு இறப்பு சான்றிதழ் உள்ளது. ரேஷன் கார்டில் அப்பாவின் பெயர் அம்மாவின் பெயர் அண்ணாவின் பெயர் நீக்கம் பண்ண நிலையில் ரேஷன் கார்டில் எனது பெயர் மட்டுமே உள்ளது அதை வைத்து வாரிசு சான்றிதழ் வாங்க இயலுமா இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்.. மற்றும் வாரிசு சான்றிதழ் வாங்க என்ன செய்வது ஒரு தீர்வு கூறுங்கள்...
 
10-Oct-2018 16:51:25 shyamala said : Report Abuse
என் அப்பா 2015 இறந்துவிட்டார் .என் அப்பாவின் வாரிசாக என் அம்மா ,நான்,அக்கா ,தம்பி மற்றும் என் அப்பாவின் தாய்(பாட்டி) ஆகியோர் வாரிசு செர்டிபிகேட் இருக்கிறது.என் அப்பாவின் அம்மா பெயர் வாரிசு செர்டிபிகேட்ல் remove பண்றதுக்கு வழி சொல்லுங்க please
 
10-Aug-2018 13:02:08 priya said : Report Abuse
என் அப்பா இறந்து 2013 விட்டார் . என் அப்பாவின் வாரிசாக நான் , என் அம்மா மற்றும் என் அப்பாவின் அம்மா(என் பட்டி) இருக்கிறார். இப்ப நாங்க வாரிசு சான்றிதழ் எடுக்க வேண்டும். வாரிசு ceritficate நானும் என் அம்மாவும் மட்டும் தான் வாரிசு என வர வேண்டும். எனது அப்பாவின் அம்மா(என் பட்டி) வாரிசாக வர கூடாது. Is there any possibility to get only me and mom name in heir certificate . தயவு செய்து வலி இருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
 
25-Jul-2018 13:51:34 saravanan said : Thank you
என்னுடைய அப்பா இறந்து விட்டார் நாங்கள் வாரிசு சான்று வாங்கிவிட்டோம் ஆனால் அதில் என்னுடைய பெயர் சரவணன் என்பத்திற்க்கு பதிலாக சரவணகுமார் என்று உள்ளது இதை எப்படி மாற்றம் செய்ய வேண்டும்.எனக்கு உதவுங்கள்.
 
19-Jul-2018 05:39:33 Logesh said : Report Abuse
Varisu certificate tholainthu vittathu. Xerox copy ponra entha oru detailum illai. Varisu certificate eduthu 1 year agirathu. Enna seivathu
 
18-Jul-2018 16:57:56 ANAGHA said : Report Abuse
என் அப்பா இறந்து ஒன்னு அண்ட் ஹலஃ மோந்து தான் ஆகுது ஆனால் லீகல் ஹிர் அப்ளை பன்னிருந்தோம் ஆனால்அது இன்னு வர வில்லை . அது அப்ளை பண்ணி ஒரு மாதம் ஆகிவிட்டது இப்போ மறுபடியும் அப்ளை பண்ணா எப்போ வரும் .பட் அவர்க்கு சொத்து ஒன்றும் கிடையாது ஆனால் அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை ஓருடரு இருக்கிறது .அந்த குழந்தை இப்பொழுது கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கிறாள் .
 
16-Jul-2018 15:32:30 Dinesh Kumar S said : Report Abuse
நான் என் அப்பாவின் வாரிசு certificate வாங்க என்ன செய்ய வேண்டும். எனக்கு ஒரு அண்ணன் ஓரு அக்கா உள்ளார்.ஆனால் என் அக்காவிடம் பேச்சுவார்த்தை இல்லை எனவே நான் எப்படி விண்ணப்பது. Pls advice me.
 
13-Jul-2018 07:28:42 Esakkiraj said : Report Abuse
Heir certificate missing,how to get ?,my father died in 3.11.2003,
 
13-Jul-2018 04:01:07 chandrasekaran said : Report Abuse
Heir certificate missing. how to online download heir certificate. Kindly reply sir.
 
06-Jul-2018 16:06:48 Rajendran said : Report Abuse
என் தாய் தந்தை இறந்து 21ஆண்டுகள் ஆகுறது . இறப்பு சான்றிதழ் உள்ளது ஆனால் வாரிசு சான்றிதழ் வாங்கவில்லை . நாங்கள் மொத்தம் , 5 போ், எனது உடன் பிறந்தவர்களில் ஒரு அக்காவும், ,ஒ௫ அண்ணானும் ,இறந்துவிட்டாா்கள், நாங்கள் ரெண்டு ஆண்கள் ஒரு பெண் இருக்கிறோம் நாங்கள் மூன்று பேர் மட்டும் எப்படி வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும்.. 7010582267
 
27-Jun-2018 18:07:06 Vel said : Report Abuse
How much rupees for legalheir certificate
 
12-Jun-2018 14:33:28 Ramya said : Report Abuse
En appa eranthutanga avunga death certificate oru address la eruku enga rationcard oru address la eruku ippo enna pandrathu eppadi entha address la apply pandrathu
 
05-Jun-2018 08:53:23 GUNASEELAN said : Report Abuse
மனைவி மரணம் வாரிசு செர்டிபிகாடே வாங்குவது எப்படி
 
02-Jun-2018 06:12:38 கல்பனா. ஜே said : Report Abuse
என் தந்தை 1994 வருடம் இறந்துவிட்டார். தாயார் 2001 வருடம் இறந்தார். எனக்கு நான்கு அக்காக்கள். இரண்டு அண்ணன்கள். அண்ணன்களிடம் பேச்சு வார்த்தை இல்லை. அண்ணன்களின் டாக்குமெண்ட்ஸ் இல்லாமல் என் தந்தையின் வாரிசு செர்டிபிகாடே பெறுவது எப்படி. விளக்கம் வழங்கவும். நன்றி.
 
19-Apr-2018 06:04:25 கண்ணன் said : Report Abuse
ஐயா வாரிசு சான்று நகலை வைத்து உண்மை சான்றிதழை வாங்க முடியுமா
 
18-Apr-2018 07:47:37 ந.கோவிந்தசாமி said : Report Abuse
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்தால் முதலில் மனைவி, பிள்ளைகள், தாய் வாரிசுகளாக வருகிறார்கள். தாய் இறந்தால் அதேபோன்று வாரிசுதாரர்கள் வருகிறார்கள். திருமணமான / திருமணமாகாத மகன் இறந்தால் தாய் மட்டுமே வாரிசுதாரராக வருகிறார். ஆனால் திருமணமாகாத மகள் இறந்தால் தாய், தந்தை (உயிருடன் இருந்தால்) ,இருவருமேதான் வாரிசுதாரராக வருவார்கள் என்பது என்னுடைய கருத்து. ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் தாய் மட்டும்தான் வாரிசு என கூறுகிறார்கள். தி இந்து succession act 1956 -ல் கிளாஸ் 3 -ல் தாய், தந்தை இருவரும்தான் வாரிசு என்று உள்ளது சரிதானா
 
11-Apr-2018 08:31:55 ரமேஷ் said : Thank you
என் பாட்டி ( அப்பாவுடைய அம்மா ) என்னுடைய பெயருக்கு உயில் ( இடம் + வீடு ) எழுதி வைத்துள்ளார் . (1998 வருடம் ). தற்போது பாட்டி இறந்து விட்டார் (2018 ஜனவரி ). அப்பா இருக்கிறார் . வீட்டு வரி, மின் இணைப்பு பெயர் மாற்ற .. வாரிசு சான்றிதழ் கேக்கிறார்கள் ... Online எப்படி விண்ணப்பித்து பெறுவது .? ( சூலூர் தாலுகா) Web Address Plz ..
 
10-Apr-2018 03:08:40 Praveen Kumar said : Report Abuse
Enga appa Voda thambi eranthutanga aavaruku kalyanam aagala. Aavaru oru government employee avaru varisu ennoda peru saykalam irrukum bothey eranthutaru. Eppo varisu certificate apply pannalam ma . Aavaru office la apply paniruntha avaru job unaku vanthurukum nu sonnan ga athavuthu try panni paru nu sonnan ga Na eppo enna pannurathu sollunga sir plz....
 
28-Mar-2018 14:07:07 கி சந்திரசேகரன் said : Report Abuse
எனது மாமனார் இறந்தவுடன் வாரிசு உரிமை சான்றிதழ் பெறப்பட்டது. ஆனால் அது முழுவதும் தமிழில் வழங்கப்பட்டது. அதை வருமான வரி துறையில் வாரிசு பதிவு செய்த பொழுது, எங்களது பதிவு நிராகரிக்கப் பட்டது. காரணம் சான்றிதழ் பிராந்திய மொழியில் இருந்தால் பரீசலனை செய்யப்பட மாட்டாது. ஹிந்தி அல்லது ஆங்கில மொழியாக்கம் செய்து நோட்டரி பப்ளிக் அஃபிடவிட் தாக்கல் செய்ய அறிவுத்தப்பட்டுள்ளது. இனி வாரிசு சான்றிதழ் இரு மொழிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட வேண்டும். பெற்றுள்ள சான்றிதழை மாற்றி வழங்க வழி செய்ய வேண்டும் .
 
15-Mar-2018 09:39:34 radha said : Thank you
i am radha. my daddy death before 13years.we have six daughters.We have already received heir(varisu) certificate.But that certificate one sister name changed.So how to change name heir cetificate.
 
11-Mar-2018 08:56:12 அமல் ராஜ் said : Thank you
இப்போது வாரிசு செர்டிபிகேட் ONLINE அப்ளை பண்ணலாம் . இ SERVICES சென்டர் IKKU செல்லவும்.
 
03-Mar-2018 12:33:48 V ஸ்ரீனிவாசன் said : Report Abuse
எனது மனைவியின் பெயரில் வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தேன். எனது மனைவியின் தகப்பனார் மறைந்து முப்பது வருடங்கள் ஆகி விட்டது. நாங்கள் விண்ணப்பித்த பதினைந்து நாட்களில், தாலுகா அலுவலக அதிகாரி எங்கள் இல்லத்திற்கு வந்து எதற்காக இவ்வளவு நாட்கள் கழித்து வாரிசு சான்றிதழ் விண்ணப்பித்தீர்கள் என்று கூறி நாங்கள் விண்ணப்ப படிவம் செல்லாது என்று கூறி சென்று விட்டனர். அவர்கள் சொல்லுவது சரியா ? நாங்கள் வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கவே முடியாதா? தயவு செய்து பதில் கூறவும்.
 
02-Mar-2018 11:38:55 செந்தில்குமார் said : Report Abuse
என் தாய் தந்தை இறந்து 23ஆண்டுகள் ஆகுறது . இறப்பு சான்றிதழ் உள்ளது ஆனால் வாரிசு சான்றிதழ் வாங்கவில்லை . எனது உடன் பிறந்தவர்கள் நான்கு அக்கா திருமணம் ஆனவர்கள் .நான் எப்படி வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும். please share with your valuable points.
 
09-Feb-2018 16:43:22 Sudharsan said : Report Abuse
My grandfather is step father of my father, my grandfather has no children .we are the guardian. can we get legal heir certificate
 
24-Jan-2018 13:25:35 murali d said : Report Abuse
வாரிசு சந்தித்தலை வாங்கிவிட்டோம் அனால் இன்னுஒரு காபி தேவைப்படுகிறது அதை எப்படி ஆன்லைன் ல வாங்க முடியம். ப்ளஸ் உதவுங்கள்
 
04-Jan-2018 05:05:48 முத்துகணேசன் said : Thank you
என் அம்மா க்கு ஒரு தம்மி இருக்கிறார். இப்பொழுது என் அம்மா க்கு வாரிசு செர்டிபிகேட் தேவைப்படுகிறது. அம்மா க்கும் அவர் தம்மி க்கும் சின்ன பிரட்சனை. கிராம நிர்வாக அதிகாரி என் அம்மா க்கு வாரிசு செர்டிபிகேட் தர மறுக்கிறார். என் அம்மா வின் தம்மி இம் வர வேண்டும் என சொல்கிறார். என் அம்மா வின் தம்மி வர மறுக்கிறார். இதற்க்கு நிரந்தர தீர்வு கொடுங்கள். நன்றி
 
27-Dec-2017 13:31:35 pothumraja said : Report Abuse
Yen amma iranthu 4months aguthu naan varisu certificate apply pannen bt vao unga appavuku rendu wife irukanga athanala avangaloda varisaum add pannanum nu solranga yen amma yen name la nominee ya bank la 40000 rupees potrukanga atha eduka bank la varisu certificate kekuranga pleas help pannunga
 
27-Dec-2017 11:52:10 SHANMUGASUNDARAM said : Report Abuse
நன்றி. வருவாய்த்துறை ஆபீஸ் ஒரு நபர் சான்றிதழ் பெறுவது எப்படி வழி காட்டவும்.
 
27-Dec-2017 11:51:58 SHANMUGASUNDARAM said : Report Abuse
நன்றி. வருவாய்த்துறை ஆபீஸ் ஒரு நபர் சான்றிதழ் பெறுவது எப்படி வழி காட்டவும்.
 
18-Dec-2017 12:00:14 Ramesh said : Report Abuse
என் அம்மா இறந்து 6 மாதங்கள் ஆகிறது.என் தந்தை இறந்து 25 வருடங்கள் ஆகிறது. என் அப்பா டெத் சான்று வாங்க வில்லை. நான் வாரிசு சான்று எப்படி பெறுவது ப்ளீஸ் ஹெல்ப்
 
29-Nov-2017 05:58:55 B.Ramesh said : Thank you
எனது அப்பா அரசு பணியில் இருந்து மறைந்தவர் .எனது அப்பா பணியை நாங்கள் யாரும் பெறவில்லை .ஆனால் நாங்கள் அவருடைய இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வைத்திருக்கிறோம் எங்களுக்கு எப்படி பணி பெறுவது என்று தெரியவில்லை .தயவு செய்து கூறுங்கள் .
 
24-Nov-2017 08:11:23 சந்திரசேகர் said : Report Abuse
எனது அப்பா இறந்து விட்டார் .எங்களுடன் பாட்டி வசித்து வருகிறார் . தாத்தாவிற்கு பாட்டிக்கும் விவாகரத்து 45 வருடங்களுக்கு முன்பு ஆகிவிட்டது . தற்பொழுது வாரிசு சான்றிதழ் வாங்கும் பொழுது தாத்தா உயிருடன் உள்ளதால் அவர் பெயரை சேர்க்கவேண்டும் என்கிறார்கள் . ஆனால் எங்களிடம் விவாகரத்து சான்றிதழ் இல்லை . எப்படி வாரிசு சான்றிதழ் பெறுவது ?
 
20-Nov-2017 04:30:05 G.v. செந்தில் குமார் said : Report Abuse
எனது தந்தை இறந்து எட்டு வருடங்கள் ஆகிறது நாங்கள் வாரிசு சான்று பெற்றுவிட்டோம் எனது தந்தைக்கு முதல் மனைவின் பெண் வாரிசுசான்று கேட்கிறார்கள் அவர்களுக்கு தனியாக கொடுப்பார்களா
 
20-Nov-2017 04:28:39 G.v. செந்தில் குமார் said : Report Abuse
எனது தந்தை இறந்து எட்டு வருடங்கள் ஆகிறது நாங்கள் வாரிசு சான்று பெற்றுவிட்டோம் எனது தந்தைக்கு முதல் மனைவின் பெண் வாரிசுசான்று கேட்கிறார்கள் அவர்களுக்கு தனியாக கொடுப்பார்களா
 
16-Nov-2017 10:04:49 R. Sreedharan said : Report Abuse
எனது அம்மா இறந்து 15 வருடங்கள் ஆகிறது . அம்மா , அப்பாவின் இறப்பு சான்றிதழ் உள்ளன. நான் வாரிசு சான்று வாங்க என்ன செய்ய வேண்டும். 10 வருடங்கள் மேல் சென்றால் கோர்ட்டில் வாங்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள். நான் வாரிசு சான்றுதல் வாங்க தயவு செய்து கூறுங்கள்
 
14-Nov-2017 06:19:07 மென்னப்பன் said : Report Abuse
எனது சகோதரர்கள் வாரிசு செர்டிபிகாடே பெற்று கொண்டு அதை என்னிடம் தர மறுக்கிறார்கள் .உனக்கு தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று சொல்கிறார்கள் .எனக்கு வாரிசு செர்டிபிகாடே வேண்டும் அதற்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் .9500491298
 
08-Nov-2017 07:43:03 சிவகுமார் D said : Report Abuse
எனது மனைவியின் வாரிசு செர்டிபிகேட் தமிழில் உள்ளது அதை ஆங்கிலத்தில் பெற என்ன வழிமுறை
 
27-Oct-2017 08:21:08 லட்சுமி.N said : Report Abuse
என் அப்பா இறக்கவில்லை ஆனால் நான்கு மகள் ஒரு மகன் உள்ளனர். எல்லோருக்கும் முப்பது வயது ஆகிவிட்டன இன்னும் சொத்துக்கள் பிரிக்கவில்லை ஆதனால் எங்களால் வாரிசு சான்றிதழ் எடுக்க வழி சொல்லுங்கள்
 
17-Oct-2017 07:54:01 swarnambiga said : Report Abuse
எனது தகப்பனாரின் இறப்பு சான்றிதழை வைத்து ஆன்லைன்னில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?
 
16-Oct-2017 09:04:25 venkateswari said : Thank you
என் கிரண்டப இறந்து 10 years ஆகிறது எப்படி வாரிசு செர்டிபிகாடே எடுப்பது எவ்வளவு செலவு ஆகும் அதற்கான வழிமுறை என என்பதை சொல்லுங்கள்
 
16-Oct-2017 09:01:02 venkateswari said : Report Abuse
என் கிரண்டப இறந்து 10 years ஆகிறது எப்படி வாரிசு செர்டிபிகாடே edupathu
 
15-Oct-2017 05:06:17 selvaraj said : Report Abuse
Nan
 
09-Oct-2017 11:59:41 கோட்டைச்சாமி said : Report Abuse
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு கட்டணமாக எவ்வளவு செலுத்த வேண்டும்
 
19-Aug-2017 07:27:28 சுகன்யா said : Report Abuse
என் மாமனார் இறந்து வாரிசு சான்றுதல் கிடைத்தது ஒன்று மட்டும். மேலும் ஒரிஜினல் வாங்க என செய்வது...
 
19-Aug-2017 07:24:09 சுகன்யா said : Report Abuse
என் மாமனார் இறந்து வாரிசு சான்றுதல் கிடைத்தது ஒன்று மட்டும். மேலும் ஒரிஜினல் வாங்க என செய்வது...
 
07-Aug-2017 05:13:26 Painthamizh said : Report Abuse
ஏன் அப்பா இறந்து சுமார் 10 வரூடங்கள் ஆனது .நான் வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும். ஏற்கனவே வாரிசு சான்றிதழ் வாங்கியது காணமல் போனது. இப்பொழுது நான் புதிதாக தாலூகா அலூவலகதில் மனு கொடுத்து மேற்படி அவர்கள் கூறும்படீ சான்று வாங்க வேண்டூமா அல்லது பழைய ஆவணங்கள் கொண்டு வாங்கமூடீயுமா ஏன தெரிய வேண்டும்.
 
07-Aug-2017 03:30:34 Sudhakar said : Report Abuse
My father dead has 10 yrs before. we have death certificate & legal certificate.but 2 yrs before we lost our legal certificate.now we want legal certificate.How to get the legal certificate.pls give proper solution.
 
06-Aug-2017 18:16:09 Karthikeyan said : Report Abuse
En appa erathu 20 yrs achi enga amma erathu 2 yrs achi. Eppo En appa Ku 1 ground iruku atharku enga appa perula varisu sanrudhal vaganuma illa amma perula varisu sanrudhal vaganumanu Therila so soluga
 
27-Jul-2017 15:05:45 வெங்கடேசன் said : Report Abuse
என் தந்தை இறந்து இறப்பு சான்றிதழ் வாங்கிவிட்டடோம் மற்றும் வாரிசு சான்றித வாங்கிவிட்டோம் இரண்டு வருடங்கள் முன் சான்றிதழ் தொலைத்து விட்ட்து இப்போது எப்படி வாங்குவது
 
12-Jul-2017 13:50:05 raja said : Report Abuse
என் அப்பா இறந்து 3 வருடம் ஆகிறது சொந்த ஊர் தமிழ்நாடு நாங்கள் இருப்பது பெங்களூர் அப்பா இறந்தது பெங்களூர் இறப்பு சான்றிதழ் பெங்களுரில் எடுத்தது இப்போது வாரிசு சான்று எடுப்பதற்கு எங்கு செல்வது அப்பாவின் பெயரில் நிலம் தமிழ்நாட்டில் உள்ளது அதை அம்மாவின் பெயருக்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்
 
26-May-2017 22:54:44 N .Mohanaganapathi said : Report Abuse
வாரிசு செர்டிபிகாடே apply
 
02-May-2017 07:52:35 arif said : Report Abuse
ஒரு மாதத்தில் கிடைக்க வில்லை என்றல் எங்கு புகார் அளிக்கவேண்டும்
 
28-Apr-2017 11:38:24 S.SHANMUGANANTHAM said : Report Abuse
நாங்கள் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி திருவரும்பூர் நவல்ப்பட்டு அண்ணாநகர் பகுதி 2ல்m/13 வசித்துவ ருகிறோம் எனது தந்தை R.sivasankaran அவர்கள் கடந்த 24:02:2003அன்று இறந்து போனார்கள்.பதிவு செய்தது 03:03:2003 பதிவு எண்.10: ஆக எங்களது குடும்ப வாரிசு சான்றிதழில் எனது பெயரை தவறுதலாக சண்முகசுந்தரம் என்று அச்சாக்கி வழங்கப்பட்டுள்ளது எனது உண்மையான பெயர்S.சண்முகானந்தம் வாரிசு சான்றிதழ் ப.மு.எண்4966/200(ஆ6) நாள்.19:05:2003 C A No.218/03 dated.22:5:03 HEAD QUATERS DEPUTY TAHSILDAR TRICHIRAPALLI த.அய்யப்பன்.ஆகவே தற்போது எனது தந்தை அண்ணா நகர் நவல்ப்பட்டு திருச்சியில் ஹவுஸிங்போர்ட் TNUDP ல் ப்ளாட் ஒன்று தவணை முறையில் வாங்கி பணம் அனைத்தும் கட்டிமுடித்தாகிவிட்ட நிலையில் எனது அம்மா பெயருக்கு ப்ளாட்டை மாற்றுவதுக்கு HOUSING BOARD MANNARPURAM TRICHY OFFICEல் SALE DEED ஆக்குவதற்க்கு வாரிசு சான்றிதழில் எனது பெயர் தவறுதலாக உள்ளாதாள் எனது அம்மாவை எனதுபெயரை மாற்றிவறுமாறு திருப்பி அனுப்பி விட்டனர் ஆகவே எனது உண்மையான பெயரை மாற்றுவதற்க்கு தகுந்த முறையான வழியை சொல்லுங்கள் ஐய்யா.
 
27-Apr-2017 02:35:53 கயற்கண்ணி said : Report Abuse
என் கணவர் இறந்து விட்டெர் என் கணவர் தந்தையும் இறந்து விட்டெர் என் கணவர் தந்தைக்கு ஒரு கெர்ண்டு இடம் உள்ளது அவர் இறக்கும் முன்னே அதை இருட்டாக பிரித்து விட்டெர், ஓன்று அவர் மனைவிக்கும் மேட்டூர் ஓன்று தன் கணவருக்கும், என்னக்கு மூன்று மகள் உள்ளனர் முத்துல மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது இன்னும் இரண்டு மகளுக்கு திருமணம் ஆகவில்லை என் கணவன் இறந்தபின் நான் யாருடைய உதவில்லாமல் நான்காப்பாற்றி வருகிறேன் , என் கணவருடைய அம்மாக்கு உள்ள சொத்தை விட்டூர் விட்டெர் , என் கணவருடைய சொத்தை என்னால் விற்க முடியவில்லை என் கணவருடைய அம்மா அதில் ஒரு பாதி எனக்கு கொடு கேட்கிறார்கள் எனக்கு திருமணம் ஆகாமல் இரண்டு மகள் உள்ளனர் , நான் எங்கையும் வேலை செய்யவில்லை என்னால் எப்படி மகளுக்கு திருமணம் செய்யமுடியும் ,என் கணவருடைய அம்மா இல்லாமல் என்னுடைய கணவர் சொத்தை விற்க முடியமா, ப்ளீஸ் அப்டேட்
 
07-Apr-2017 03:07:48 gunasekaran said : Report Abuse
my dad died so how to apply varisu certificate through online
 
19-Mar-2017 09:25:29 Leelawathi ட/ஓ Nallathamby said : Report Abuse
Sir I'm living abroad I need legal heir certificate how I can do that in overseas I've my father death certificate he passed away 29 years ago. I have a sister who also living abroad please advise me how to get it thanks
 
17-Feb-2017 13:30:39 Ramya said : Report Abuse
Sir, I live in abroad, my family lives in India. My father passed away 4 years back. Now we plan to get legal heir certifcate. Is it mandatory i shoulb be in person to meet the counciller for certificate or my brother can submit my documents and get this certificate. Incase if i am not able to come India for applying ,any procedure through indian embassy can i apply for legal heir. My brother is in india and now i am in abroad. Pls help me to clear thus
 
14-Feb-2017 05:50:11 சதீஷ்குமார் said : Report Abuse
எனது பாட்டி இறந்து 35 வருடங்கள் ஆகின்றது . அவர் இறந்ததற்கான இறப்பு சான்று எங்களிடம் உள்ளது . அதை வைத்து நாங்கள் தற்போது வாரிசு சான்று பெற முடியுமா . இறந்து 35 வருடங்கள் ஆனதால் அதற்கு நாங்கள் எதுவும் கோர்ட் இல் சான்று வாங்க வேண்டுமா ? நன்றி
 
09-Feb-2017 21:50:38 Palanisamy said : Report Abuse
வாரிசு செர்டிபிகேட் எப்படி பெறுவது என்பதை மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி
 
10-Jan-2017 03:51:00 anu said : Report Abuse
enathu Patti uyil eluthi Ullar ennavenral Nan irantha piraku en sothukkal enathu aan varisugalukku enru anal en Athai magankal engalutayathu enru Athai patril matrikontarkal enna செய்வது
 
06-Jan-2017 09:03:29 AYYASAMY said : Thank you
EN பாட்டி இறந்துவிட்டார் அவருக்கு ரெண்ட் மகன் ஒரு பொன்னு, பொன்னு இறந்துவிட்டார் அப்போ பொன்னு பதில் யாரை வாரிசாக போடவேண்டும்
 
26-Dec-2016 06:10:21 Praveen said : Report Abuse
எனது பாட்டி இறந்து 50வருடம் ஆகிறது.இறப்பு சான்று இல்லை எவ்வாறுபெறுவது..
 
23-Dec-2016 00:21:04 விஜயகுமார் said : Report Abuse
எனது தாத்தா இறந்து 36 வருடங்கள் ஆகிறது நான் ANGU விண்ணப்பிக்க வேண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில அல்லது கோர்ட்டிலேயே
 
17-Dec-2016 04:54:12 V . Ramkumar said : Report Abuse
எனது முப்பாட்டனார் avargal (நான் 4 தலைமுறை) Avar உடைய வாரிசு செர்டிபிகாடே தொலைத்து பொய் விட்டது.மறுபிடியும் செர்டிபிகாடே vaanga என்ன செய்ய வேண்டும்.
 
15-Dec-2016 05:28:52 வள்ளியம்மாள் said : Report Abuse
வாரிசு சான்றிதழ்
 
14-Dec-2016 05:53:05 gopi said : Report Abuse
எனது தந்தை 2000 _ம் ஆண்டில் காலமானார். எனது தந்தைக்கு இரண்டு பெயர்கள் உண்டு அதில் உண்மையான பெயர் சந்திரசேகர் அதை மட்டும் கொண்டு மரண சான்றிதழ் ஆதரப்படி பழனிநாதன் என்கிற சந்திரசேகர் என்ற பெயரில் உள்ளது அதற்க்கு வெரூ ஆவணம் இணைக்க vendum
 
01-Dec-2016 04:12:11 தங்கராஜ் said : Report Abuse
இறந்து போனவரின் மனைவி மறுமணம் மேற்கொண்டு முதல் கணவருக்கு வாரிசு சான்றிதழ் விண்ணப்பம் செய்ய முடியுமா? எங்களது கிராம நிர்வாக அலுவலருக்கே தெரியவில்லை. நான் என்ன செய்வது தயவு செய்து கூறுங்கள்.
 
24-Nov-2016 06:56:15 Gowsigan said : Report Abuse
கருணை அடிப்படையில் வழங்க படும் ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற வழிமுறைகள் பற்றி தயவு செய்து கூறவும்
 
24-Nov-2016 04:08:37 Gowsigan said : Thank you
தொலைந்து போன வாரிசு சான்றிதழ் பெற வழி கூறவும்
 
10-Nov-2016 00:36:46 ரேணுகா said : Report Abuse
என் தாத்தாவும் மாமாவும் நான் பிறக்கும் முன்பே இறந்து விட்டார்கள். அவர்கள் இறந்த தேதி எனக்கு தெரியாது. நான் எப்படி அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குவது?
 
07-Aug-2016 02:26:19 ஜி.kirubakaran said : Report Abuse
நான் எனது அப்பஆக்கு 5aavathu பிள்ளை 2annankal 2akkakkal எனது இரண்டாவது அண்ணாக்கு சொத்துக்களை எழுதி வைத்து விட்டார். எனது முதல் அண்ணனுக்கும் எனக்கும் ஒரு நிலத்தை சமமாய் பிரித்து தருவதாக சொல்லி இதுவரை பிரித்து தரவில்லை கேட்டால் எப்பொழுதும் எழுதி தர மாட்டேன் என கூறுகிறார் அவர் ஒரு முத்திரை தாளில் அது இருவருக்கும் சொந்தம் வங்கியிலிருந்து பத்திரத்தை எடுத்தவுடன் இருவருக்கும், எழுதி தந்துவிடுகிறேன் என எழுதி தந்துருகிறார் அவரிடம் சொத்தை எப்படி எழுதி வாங்குவது, சட்டப்படி எதாவது செய்ய முடியுமா தயவுசெய்து கூறுங்கள் முத்திரைதaaலை ரேகிச்டேர் செய்யவில்லை.
 
16-Jun-2016 04:58:32 ர.அறிவழகன் said : Report Abuse
எனது முப்படனர் அவர்கள் (நன் 5அம் தலைமுறை வாரிசு) 6எகர் நிலம் வங்கி உள்ளார் எனது தலைமுரைனர் அனைவரும் அதனை அனுபவித்து வந்தனர் 1960 வரை அதன் பின்னர் அந்த நிலத்தை எனது தாத்தாவின் மாமனார் அதனை அனுபவித்து வருகின்றனர் அவர்கை அந்த நிலாத எங்களிடம் ஒப்பட்டைக மாறுகின்றனர் எனவே நன் நிதி மன்றத்திற்கு செல்லலாம் என்று உள்ளேன் அதற்கு ந எனது முப்படனர் வலியல் வந்தவன் என வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி , அந்த நிலம் 1971 வரை எனது முப்படனர் பெயரில் தன இருந்திரகிறது நன் அவர் வாரிசு என வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி
 
22-Sep-2015 03:37:48 N PALANI said : Report Abuse
Respected sir,myfather experied 1978 but still date not get legalhair certificate my father property dividing 2001 now i will try to patta but tasildar office asking legalhair certificate.so how is get legalhair certificate &legalhair certificate is must please clerfication.thank you N.PALANI
 
23-Jun-2015 23:59:09 புவனேஸ்வரி p said : Report Abuse
என் அப்பா விபத்தில் மே 13 2015 மரணம் அடைத்தார் அவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு ஒரு பொண்ணு இரண்டு மகன்கள் இரண்டாம் மனைவிக்கு நான்கு மகள்கள். நான் இரண்டாம் மனைவின் மகள் என் அப்பா கடந்த 25 வருடம் எங்களுடன் தான் வாழ்ந்து வருகிறார் முதல் மனைவி வேண்டாம் என்று எங்களுடன் தான் இருக்கிறார். ஆனால் முதல் மனைவின் பிள்ளைகளின் நல்லது கெட்டதை என் அம்மா அப்பா ரெண்டு பேரும் சேந்து தான் பார்ப்பார்கள் . என் அப்பா அம்மா கு இது வரை உள்ள கடன் 500000 இருக்கு . அப்பா கரூர் நகராச்சி ல துப்புரவு பணி செய்தார். அவருக்கு வரும் பணத்தில் அவர்கள் கடனை அடைக்க மாட்டோம் பணத்தை இரண்டாக பிரிக சொல்றாக , என் அம்மா உம் துப்புரவு பணி தான் செயராக இன்னும் எனக்கு திருமணம் செய்யணும் அப்புறம் என் தங்கை கு வளைகாப்பு செய்யணும் இப்படி நெறைய கடைமைகள் என் அம்மாக்கு உள்ளது . இவளுவும் பாத்துட்டு அவர்கள் கடன் எப்படி அடைக முடியும். வாரிசு சான்றிதழ் எப்படி நாங்க எழுதி கொடுகணும். அப்பா பணம் எங்களுக்கு கிடைக்குமா ?
 
17-Feb-2015 13:22:36 கோபாலகிருஷ்ணன் said : Report Abuse
என் அப்பா மரணம் அடைத்து பிப்டீன் வருடிங்கள் ஆகுது. ஹொவ் டு அப்பலி வாரிசு செர்டிபிகாடே பிளஸ் பிளஸ் (9841370848)
 
17-Feb-2015 06:11:15 ponnudurai said : Report Abuse
நன்றி உங்கள் thagavaluiku மிக்க நன்றி varisu certificate explain eppadi iruiku
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.