என்னத்தான் சாப்பிடாலும் எனக்கு உடல் எடை ஏறவே இல்லை என பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உடல் எடை குறைவாக உள்ளவர்கள், உடல் எடையை அதிகரிக்க உதவும் பல வகையான உணவுகள் இங்கே பட்டியலிட்டப்பட்டுள்ளது. அதைப் படித்து உணவில் சேர்த்து, உடல் எடையை அதிகரித்து, அழகான உடலமைப்பைப் பெறுங்கள்.
வாழைப்பழம்
உங்களுக்கு வேகமாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், தினமும் இரண்டு அல்லது கூடுதல் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். வாழைப்பழங்களில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது. மேலும் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இது உடனடி சக்தியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை அதிகரிக்கவும் உதவி புரியும்.
முந்திரி
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கை முந்திரி பருப்பை சாப்பிடுங்கள். அதிலுள்ள முக்கிய எண்ணெய்கள், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். மேலும் அணுக்களின் அடுக்குகளில் உய்வூட்டி, சருமம் மென்மையானதாக வைத்துக் கொள்ள உதவும்.
உலர் திராட்சை
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கை உலர் திராட்சையை சாப்பிட்டால், உடலில் ஆரோக்கியமான கலோரிகள் நிறையும். மேலும் நார்ச்சத்தும் தேங்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, ஆரோக்கியமான கலோரிகளை அதிகரிக்கும். இதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
சால்மன் மீன்
தினமும் ஒன்று அல்லது இரண்டு சால்மன் மீன்களை சாப்பிடுவதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்தானது உள்ளிறங்கி, உடல் எடை அதிகரிக்கச் செய்யும். மேலும் அதிலுள்ள இன்றியமையா எண்ணெய்கள் சோம்பலில் இருந்து காத்து, தேவையான நல்ல கொழுப்பை உள்ளிறங்கச் செய்யும்.
இறால்
கடல் உணவு பிரியர்களா? அப்படியானால் தினமும் இரண்டு முறை இறால்களை சாப்பிடலாம். அதிலுள்ள வளமான ஊட்டச்சத்தும், அத்தியாவசிய அமிலங்களும், உடலில் கலோரிகளை தங்க வைத்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கோழியின் நெஞ்சுக்கறி
கோழியின் நெஞ்சுக்கறியை க்ரில் செய்து, மயோனைஸ் தடவி மதிய உணவோடு சாப்பிடலாம். இது சுவைமிக்க உணவாக மட்டுமல்லாமல், உடல் எடை கூடவும் உதவி புரியும்.
முட்டை
உடல் எடை அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து மற்றும் அமினோ அமிலம் கலந்துள்ள முட்டைகளை சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், அதிக அளவில் நல்ல கொழுப்பிணியும், ஆற்றல் மிக்க கலோரிகளும் நிறைந்துள்ளது. ஆகவே தினமும் இரண்டு முட்டைகள் உண்டால், உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம்.
சீஸ்/பாலாடைக் கட்டி
நுரைமிக்க பாலில் செய்யப்பட்ட பாலாடைக் கட்டிகளில், சைவ உணவு உண்ணுபவர்களுக்கு கரைகின்ற புரதச்சத்தானது அதிகம் உள்ளது. புரதம் அதிகம் உள்ளதால், உடம்பில் போதுமான கலோரிகளை கொடுக்கும். அதனால் வேகமாக உடல் எடை அதிகரிக்கும்.
கைக்குத்தல் அரிசி
கைக்குத்தல் அரிசியில் போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே சீரான முறையில் கைக்குத்தல் அரிசியை உண்டால், உடலில் கார்போஹைட்ரேட்டானது சேமித்து வைக்கப்பட்டு, வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பாஸ்தா
ஒரு கிண்ணத்தில் சுவைமிக்க பாஸ்தாவை போட்டு சாப்பிட்டால், அது திருப்தியான உணவாக அமையும். அதிலும் இது வயிற்றை மட்டும் நிரப்பாமல், அதிலுள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட் உடலில் ஊட்டச்சத்தை ஏற்றி, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பீன்ஸ்
விலங்கில் உள்ள புரதச்சத்துக்கு நிகராக விளங்குகிறது பீன்ஸ். அதனால் அதனை சைவ உணவு உண்ணுபவர்கள் தேர்ந்தெடுக்கலாம். நல்ல சாஸ் உடன் அதை சமைத்தல், அதில் 300 கலோரிகள் அடங்கியிருக்கும். வேண்டுமெனில் அதனுடன் சில பீட்டா ரொட்டிகளையும் சேர்த்துக் கொண்டால், சுவைமிக்க உணவாக அது அமையும். இது உடல் எடையையும் அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில், போதுமான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலப்புச்சீனி உள்ளது. இதனை உணவில் அதிகமாக பயன்படுத்தினால், சத்தான கொழுப்பாக உடலில் படியும். அதிலும் அவித்த அல்லது வேக வைத்த உருளைக்கிழங்கை சாலட், சாண்ட்விச் மற்றும் இதர உணவுகளோடு சேர்த்து உண்ணும் போது, உடல் எடை அதிகரிக்கும்.
சேனைக்கிழங்கு
அதிக அளவு ஸ்டார்ச் கொண்டுள்ள மற்றொரு உணவாக சேனைக்கிழங்கு உள்ளது. ஒரு முறை அதனை உண்ணும் போது, உடம்பில் 150 கலோரிகள் அதிகரிக்கும். அதனை அடிக்கடி சத்தான உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
வேர்க்கடலை வெண்ணெய்
அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் நிறைந்துள்ள இயற்கையான வேர்க்கடலை வெண்ணெய், உடல் நல ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணை புரிகிறது. அதிலும் அதனை பிரட் அல்லது பிஸ்கட்களில் தடவி உண்டால், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பாதாம் வெண்ணெய்
ஆரோக்கியமான புரதம் நிறைந்த நட்ஸ் வகையாக விளங்குகிறது பாதாம் வெண்ணெய். மேலும் இதில் அதிமுக்கிய கொழுப்பமிலங்களும் நிறைந்துள்ளது. இதனை சாலட், பிரட் மற்றும் டெசர்ட்டுகளில் சேர்த்த சாப்பிட்டால், சருமம் பளபளப்பாகவும், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதனுடன் சேர்த்து உடல் எடையும் அதிகரிக்கும்.
ஆலிவ் எண்ணெய்
சாலட்களில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாக விளங்கும். அதில் அதிக அளவு கலோரிகள் மட்டுமல்லாமல், லினோலெயிக் அமிலமும் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால், உடல் எடையை அதிகரிப்பதோடு, இதய நோய்கள் வராமலும் காக்கும்.
பாதாம் பருப்பு
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இதனை உடல் எடை கூடுவதற்கான ஆரோக்கியமான சில விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். தினமும் ஒரு கை பாதாம் பருப்புகளை உண்ணுவதால், உடலின் செயல்பாடு பாதுகாக்கப்பட்டு, நரம்பு திடமாக செயல்படும்.
ஆளி விதை
ஆளி விதையில் அதிக அளவில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பமிலம் அடங்கியுள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை காத்து, உடலை சீரான முறையில் செயல்பட உதவும். எனவே தினமும் போதுமான அளவை ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் உடல் எடையை அதிகரிக்க உதவி புரியும்.
தேங்காய் பால்
தேங்காய் பாலில் அதிக அளவு டயட் எண்ணெய்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பலவகையான உணவு வகைகளுக்கு சுவையை கூட்டவும் பயன்படுகிறது. தேங்காய் பாலில் செய்த உணவில் அதிக கலோரிகள் இருக்கும். எனவே இதனை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்கும்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |