LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க

டிவிட்டரை சார்ந்த செயலிகள் (Applications) தினமும் பல்லாயிரக்கணக்கில் வெளிவருகிறது. இந்த அவசர யுகத்தில் இவை அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்வது நிச்சயம் இயலாத காரியம். இந்த செயலிகள் பற்றி தகவல்கள் தர‌ பல அடைவுகள் (directories) இருந்தாலும், அவற்றில் நம் தேவைக்கேற்ற செயலிகளை தேடுவது சிரமமான காரியமே.

இந்த பகுதியில் பல டிவிட்டர் கணக்குகளை ஒரே நேரத்தில் நிர்வகிக்க வசதியான‌ செயலிகளை தொகுத்துள்ளோம். இன்று பலர், தங்கள் தனிப்பட்ட தேவைக்காகவும், தொழில் முறை தேவைக்காகவும் பல டிவிட்டர் கணக்குகள் வைத்திருக்கும் நிலையிலே உள்ளனர். எனவே இவர்களுக்கு ஒரே நேரத்தில் பல டிவிட்டர் கணக்குகளை நிர்வகிப்பதற்கான செயலிகள் அத்தியாவசிய தேவையாகிறது. அவர்கள் வசதிக்காக, டெக்ஸ்டாப் மற்றும் வலைதளத்தில் பயன்படுத்தகூடிய செயலிகளை இங்கு தொகுத்துள்ளோம். கூடுதலாக, உலவி சேர்ப்பான்கள் (Browser add-ons) மற்றும் தொழில் முறை செயலிகளையும் தொகுத்துள்ளோம்.

கணினி செயலிகள் :

Nambu : பல டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்க மிகச்சிறந்த செயலி. இந்த செயலியில் டிவிட்டர் போக்குகள் (Twitter Trends), சேமித்த தேடல்கள் (Saved searches), இணைப்பு திரட்டி (link aggregation), வடிகலன்கள்(filters), குழுமங்கள் (groups) போன்ற வசதிகளும் உள்ளது. மேலும் tr.im பயன்படுத்தி URL-களை சுருக்கவும், pic.im மூலம் புகைப்படங்களை பதிவேற்றமும் செய்யமுடியும்.

Twhirl : Twhirl-க்கு மாற்றாக Seesmic Desktop வந்திருந்தாலும் பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதி மற்றும் டிவிட்டுகளை ஒரே நெடுவரிசையில் காணும் வசதி போன்றவற்றால் இதை பயன்படுத்துபவர்கள் இந்த செயலியை பெரிதும் விருப்புகிறார்கள். மேலும் இந்த செயலியில் இருந்து நேரடியாக ping.fm இல் பதிவு செய்யலாம். Seesmic காணொளிகளை பதிவு செய்யவும், தொடரவும் இதில் வசதி உள்ளது.

Twibble Desktop : Twibble மூலம் ஒரே நேரத்தில் மூன்று டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்கலாம். இதில் பலதரப்பட்ட குறுவழி விசைகள் (key board shortcuts), இடத்தை குறிப்பதற்கான வசதிகள் (Location facilities) மற்றும் பார்வையிடும் வசதிகள் (viewing options) உள்ளன‌

Tweetie for Mac : இது ஒரே நெடுவரிசையில் டிவிட்டகளை நிர்வகிக்கும் செயலி (Single column twit app). ஏற்கனவே இவர்களின் அலைபேசி செயலி பிரபலமடைந்துள்ளதால், இந்த டெக்ஸ்டாப் செயலி அறிமுகம் செய்யப்பட்டவுடனே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு அனைவரையும் கவரக்கூடியவகையில் அமைந்துள்ளது. இதை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் இதிலுள்ள குறுவழி விசைகள் (keyboard shortcuts) ,உரையாடல்கள் (conversations), நேரடி செய்தி திரி (threaded direct message) போன்ற வசதிகளை பெரிதும் விரும்புவார்கள்

Digsby : இது Multi-cilent IM சேவைக்காகவே பெரிதும் அறியப்பட்டுள்ளது. ஆனால் இதை பல டிவிட்டர் கணக்குகள் மற்றும் பல சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கவும் பயன்படுத்தலாம். இது விண்டோஸில் மட்டுமே இயங்கக்கூடியது. Portable ஆகவும் இயங்கும்.

இணைய செயலிகள் :

Matt : Multiple Account Twitter Tweeter என்பதன் சுருக்கமான Matt , பல டிவிட்டர் கணக்குகளை வலையிலிருந்து நிர்வகிக்க மிகவும் சுலபமான செயலி. இதன் வடிவமைப்பு பல வண்ணங்களில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

Twittbot : இந்த செயலி ஒரே நேரத்தில் பல டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்கும் வசதி மட்டுமல்லாது,

பலர் ஒரே டிவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் வசதியையும்

கூடுதலாக வழங்குகிறது. இந்த செயலி மூலம் மறுமொழிகளை (@replies) அவதானித்து அதை குறிப்பிட்ட டிவிட்டர் கணக்குகளில் மீள் பதிவு செய்யமுடியும். இதை ஒரு குழுவில் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்தும்படியோ அல்லது அனைவரும் பயன்படுத்துபடியோ கட்டமைக்கலாம். பல டிவிட்டர் கணக்குகளில் இருத்து டிவிட்டுகளை திரட்ட சிறந்த கருவி.

Tweet3 : வலையிருந்து பல டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்க வித்தியாசமான செயலி தேடுபவ‌ர்களுக்கானது இது. இந்த செயலி ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு கருவிதட்டை(Dash board) தருகிறது. அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டமைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்களுக்கு பிடித்த நிறத்தை தேர்வு செய்து கொள்ளலாம், பேஸ்புக்குடன் ஒருங்கிணைக்கலாம்,டிவிட்டரில் ஒருவரை தொடரவோ அல்லது விலகவோ பயன்படுத்தலாம். ஒவ்வொரு கருவிதட்டிற்கும் உங்கள் விருப்பப்படி அமைப்புகளை (settings) மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

Splitweet : பல டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்க வடிவமைக்கப்பட்ட இந்த செயலி, பல டிவிட்டர் கணக்கின் டிவிட்டுகளை ஒரே பக்கத்தில் பார்க்கும் வசதியும், ஒரு நேரத்தில் ஒரு டிவிட்டை பல கணக்குகளை பதிவு செய்யும் வசதியும், சில குறிப்பிட்ட தர அடையாளங்களை (Brands) தொடரும் வசதியும் வழங்குகிறது. இது தர அடையாளங்களை அவதானிக்கும் கருவியாகவே முன்னிருத்தப்படுகிறது. ஆனால் CoTweet, EasyTweet அல்லது Hootsuite போன்ற செயலிளுடம் ஒப்பிடும் போது Splitweet சற்று பின் தங்கியுள்ளது என்பது உண்மையே.

TwitIQ : இந்த‌ செய‌லி twitter.com-ஐ போன்றே வடிவமைப்பு கொண்டது. ஆனால் twitter.com-ஐ விட பல கூடுதல் வசதிகள் தரக்கூடிய செயலி. டிவிட்டர் முகப்பு பக்கத்தில் பல கணக்குகளிடையே தேர்வு செய்து மாறும் வசதி இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள், அது தான் TwitIQ செயலி. மேலும் இதில் twitter.com-ஐ ஒப்பிடும் போது சிறப்புசொல் தொகுதி (Keyword cloud), விவாதம், கேள்விகள்,URL, Retweets-களிடையே தாவும் வசதி ஆகியாவை கூடுதலாக உள்ளது. இதிலுள்ள மறைவான விடயம் உங்கள் TimeLine ல் @mentions உரையாடல்கள், Retweets, links உள்ள கீச்சுகளை வடிகட்ட முடியும்.

Twitomate : நீங்கள் முன்பதிவிட்ட டிவிட்டுகளை சுழற்சி முறையில் டிவிட்டரில் பதிவு செய்யும் ஒரு அடிப்படை செயலி இது. உங்களிடம் பல டிவிட்டர் கணக்குகள் இருந்து, அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை டிவிட்டுகளை தொடர்ச்சியாக‌ பதிவு செய்யவேண்டுமால் இந்த செயலி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தொழிற்முறை செயலிகள் :

CoTweet: பெருநிறுவனங்கள் பயன்படுத்தும் டிவிட்டர் CRM கருவி CoTweet. டிவிட்டர் செயல்பாட்டில் கூடுதலாக ஒரு வர்த்தக அடுக்கை(Business layer) தருவது இதன் சிறப்பம்சம். இதுவும் மற்ற செயலிகள் போல பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதி தருவது தான்.ஆனால் பலர் ஒரே கணக்கை பாதுகாப்புடன் இயக்கும் வசதியை தருகிறது.எனவே தவறுதலாக ஒரே வேலையை பலர் செய்யும் வாய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இந்த செயலி, குறிப்பிட்ட நேரத்தில் முன்பதிவிட்ட டிவிட்டுகளை பதிவுவேற்றம் செய்யும் வசதி,சக உறுப்பினருக்கு டிவிட்டுகளை ஒதுக்கும் வசதி, டிவிட்டுகளுக்கு குறிப்புகள் சேர்க்கும் வசதி ஆகியவையும் தருகிறது.

EasyTweets :
இந்த செயலி சந்தை விற்பனையாளர்களுக்கான செயலியாக முன்னிறுத்தப்படுகிறது. EasyTweets வலைபதிவுகள் (Blogging Platform) போன்ற வடிவமைப்பு கொண்டது. இந்த செயலிக்கு சேவை கட்டணமாக மாதம் $24 (குறைந்தபட்சம்) செலுத்தினால் பல கூடுதல் வசதிகளை தருகிறது. அவை – தொடர் தேடல் வசதி, முன்று கணக்குகள் மேல பயன்படுத்தும் வசதி, பல கணக்குகளில் ஒரே நேரத்தில் டிவிட்டுகளை பதியும் வசதி, குறுஞ்செய்தி முன்னறிவிப்புகள், இணைப்புகளை பற்றிய கூகுள் பகுப்பாய்வு தரவுகள் (Google Analytical data) போன்ற வசதிகளாகும். Tweet Deck பயன்படுத்தியவர்கள் இதில் உள்ள நெடுவரிசையில் டிவிட்டுகளை காணும் வசதியை பெரிதும் விரும்புவார்கள்.

HootSuite : இது வலையில் செயல்படும் செயலி. இந்த செயலி பல கணக்குகள் மற்றும் பல நிர்வாகிகளை சேர்க்கும் வசதி கொண்டது. இணைப்புகள் (இணைப்புகளை இவர்களின் ow.ly பயன்படுத்தி பதிவு செய்திருந்தால்) பற்றிய புள்ளிவிவரங்களை டிவிட் பக்கத்திலே காட்டும் வசதி கொண்டது இந்த செயலி, டிவிட்டுகளை தேடும் வசதி,காலவரை பதிவேற்றம், ping.fm-இல் பதிவேற்றம் செய்யும் வசதி போன்ற பல கூடுதல் வசதிகளையும் தருகிறது

உலவி சேர்ப்பான்கள் :

Twitterfox : இது ஒரு ஃபயர் ஃபாக்ஸ் உலவி சேர்ப்பானாகும். TwitterFon என்னும் ஐ-போன் செயலியை வடிவமைத்தவர்களே இந்த சேர்ப்பானையும் வடிவமைத்துள்ளனர். இந்த சேர்ப்பான் உங்கள் உலவியின் வலது மூலையில் எந்தவித இடையூறும் இன்றி செயல்படுகிறது. இதன் விருப்பதேர்வுகளில் (Preferences) பல கணக்குகளை சேர்க்கலாம். மேலும் ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்குக்கு இலகுவாக தாவலாம்

Adjix2TwitterLink : இது Adjix எனும் URL சுருக்கும் சேவை வழங்கும் புத்தகக்குறி (Bookmarklet) சேவையாகும். இதன் மூலம் நாம் இணையத்தில் உலாவரும் போது பயனுள்ள‌ இணையதளம் அல்லது இணைப்புகளை கண்டால் அதை மற்றவர்களுக்கு டிவிட்டும் வசதியை தருகிறது. பல டிவிட்டர் கணக்கு வைத்திருந்தால், எந்த கணக்கின் மூலம் இதை பகிறவேண்டும் என குறிப்பிடலாம். மேலும் சேமித்து வைத்து, பிறகு குறிப்பிட்ட‌ நேரத்தில் இதை பகிறும்படியும் செய்யலாம்

அலைப்பேசி செயலிகள் :

Twitteriffic : Twitteriffic 2.0 என்ற இந்த புதிய மேம்படுத்தப்பட்ட செயலி, ஐ-போனில் பல டிவிட்டர் கணக்குகளை நிர்வாகிக்க மிகச்சிறந்த செயலியாகும். இது ஒரு இலவச செயலி. இதன் சேமித்த தேடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடல் வசதிகள நிச்சயம் உங்களை கவரும்.

TweetStack : TweetDeck-ஜ உங்கள் ஜ-போனுக்கே கொண்டுவருகிறது. பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை தருகிறது. உங்கள் விருப்பப்படி குழுமம்,தேடுதல், Retweet பக்கங்களை அமைத்துக்கொள்ள வேண்டுமானால் இது சிறந்த செயலி. கட்டண செயலி.

LaTwit : பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதி, ping.fm-இல் பதிவு செய்யும் வசதி, பயனர்களை மறைக்கும் வசதி, எழுத்துருவின் அளவுகளை மாற்றும் வசதி, பக்கம் விட்டு பக்கம் தாவும் வசதி ஆகிய சேவைகளை வழங்குகிறது. கட்டண செயலி.

Tweetie : Mac கணினிகளுக்கான செயலியைப் போல ஐபோன் அலைபேசிகளுக்கான டிவிட்டர் செயலிகளில் ஒரு முன்னோடி. இதன் கட்டண சேவை பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை தருகிறது.

SimplyTweet : இந்த செயலி டிவிட்டருக்கான அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வது மட்டுமல்லாது சில கூடுதல் சேவைகளையும் தருகிறது. பல கணக்குகளை நிர்வகிக்கும் வசதியுடன் கூடுதலாக டிவிட்டர் போக்குகளை பார்க்கும் வசதி, குறிப்புகளை சேர்க்கும் வசதி, சபாரி உலவியின் புத்தககுறிப்புகளை பயன்படுத்தும் வசதி, டிவிட் செய்துகொண்டிருக்கும் போதே தொடர்புகளை பார்க்கும் வசதி போன்ற பல்வேறு வசதிகளை தருகிறது. கட்டண செயலி.

Pocketwit: இது விண்டோஸில் இயங்கும் அலைபேசிக்களுக்கான செயலி. மற்ற செயலிகளில் உள்ளது போலவே பல கணக்கு நிர்வாகம்,குழுமம்,உரையாடல்கள்,டிவிட் சுருக்குதல்,ரீ டிவிட்,முகவரி புத்தகம் போன்ற வசதிகளை கொண்டது.

Gravity : S60 (Nokia,LG,Samsung சாதனங்களுக்கான டிவிட்டரின் சொந்த செயலி இது. இதன் விலை $10 ஆகும். இது பல அற்புதமான வசதிகளை கொண்டது. பல கணக்குகள் நிர்வாகம், தேடல்கள், மறுமொழிகள், செய்திகள் போன்றவற்றை தனி பக்கங்களில் பார்க்கும் வசதி, பக்கங்களுக்கிடையே தாவும் வசதி, புகைபடங்களை பதிவேற்றும் வசதி போன்ற பல வசதிகளை கொண்டது.

பதிவு : @thirumarant

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: Twitter Account   Multi Twitter Account   ட்விட்டர்   ட்விட்டர் கணக்கு   ட்விட்டர் அக்கவுன்ட்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.