LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்

ட்விட்டர் ஒரு பரந்து விரிந்த சமூக ஊடகம், இதில் நன்மையை போலவே சில தீமைகளும், தீவினைக்காரர்களும் கலந்து உள்ளனர். அண்மைக் காலமாக ட்விட்டரில் Direct Message Spam கள் மிக வேகமாக பரவி வருகின்றன. மக்கள் அந்த சுட்டியை தெரியாமல் திறந்து விடுகின்றனர். இணைப்பு திறக்கப்பட்டவுடன் அவர்களது ட்விட்டர் கணக்கின் கடவு சொல்லை திருடி விடுவர், அதன் பின் அதே Spam செய்தி உங்கள் பெயரில், உங்கள் கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு பரவும். பெரும்பாலும் இதில் சிக்கி கொள்வது புதியவர்கள் தான். மிக அதிகம் பேரை பின்பற்றுகையில் இந்த தொல்லை தரும் செய்திகளை நம் inbox ல் இருந்து அழிப்பதே பெரும் வேலையாக இருக்கும்.

இத்தகைய ஸ்பாம் செய்திகளின் மூலம் தங்கள் தளத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்த அல்லது தங்களது ட்விட்டர் செயலியை உங்கள் கணக்கில் இணைத்திட முயல்கிறார்கள். மேலும் ட்விட்டர் போலவே தோன்றும் Phishing தளங்களில் உங்கள் கடவு சொல்லை கொடுத்து ஏமாறச் செய்வார்கள். twitter.com என URL bar ல் இருந்தால் தவிர கடவுச் சொல்லைக் கொடுக்காதீர்கள். இதற்கெனவே ட்விட்டர் https ஆகவும், Oauth மூலம் உள்நுழையும் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. இது போன்று புதிது புதிதாக முளைக்கும் தொல்லைகள் பற்றி ட்விட்டர் நிறுவனத்தின் @spam @safety @support மூலமாக அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம்.

தங்களின் கணக்கு பாதிக்கப்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது Applications பகுதியில் சென்று நீங்களாக இணைப்பு தராத application களை பார்த்து “Revoke Access” பொத்தானை அழுத்தி Referesh செய்து நீக்குவது. பின்னர் Account பக்கத்திற்கு சென்று தங்களின் கடவு சொல்லை மாற்றுவது, Profile பகுதியில் Web சுட்டி மாற்றப்பட்டிருந்தால் சரி செய்வது, கீழே HTTPs only : Always Https என்பதை தேர்வு செய்திடுவது, உங்கள் கீச்சுகளில், மற்றும் Sent DM (Direct Message) களில் உங்கள் பெயரில் அனுப்ப பட்டிருக்கும் ஸ்பாம் களை கண்டிப்பாக அழிப்பது.. உங்களால் மற்ற ஒருவர் பாதிக்காமல் தடுக்கும்.

ஸ்பாம் செய்திகள் விதம் விதமாக அனுப்புகிறார்கள் உதாரணத்திற்கு,

“Is this you in this pic/video/blog?”

“See who’s visiting your profile/stalking you on Twitter”

“This is something you might like to see…”

“$3,000 to $8,000 a month working from home”

“You have been sent a e-Card”

“when did you make this video? its hilarious, cant stop laughing lol”

“haha i cant stop laughing, your facial expression here is priceless!”

“join in my mafia family”

இன்னும் நிறைய..

ஒரு ட்விட்டர் கணக்கு ஸ்பாம் என தெரிந்தால் உடனே அதை ட்விட்டருக்கு தெரிவிக்க வேண்டும், அதற்க்கு அந்த ட்விட்டர் பக்கத்திற்கு சென்று..

Report Spammer


படத்தில் காட்டியுள்ள படி Report Spam என கொடுக்கலாம். பின்னர் அது உங்களை பின்பற்றுவதிலிருந்து தடுக்கப்படும். ட்விட்டர் தன் @Safety Team மூலம் அதை ஆராய்ந்து உண்மையில் ஸ்பாம் எனில் கணக்கை தடை செய்து விடும். விளையாட்டுக்கு செய்தால் உங்களுக்கே வினையாக முடியலாம். இது போல நமது கணக்கு முடக்கப்பட வழிவகுக்கும் சில விதிமுறை மீறல்களைப் பற்றி முன்னர் சொல்லி இருந்தோம். அதையும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதே!

உங்கள் நண்பரின் கணக்கில் இருந்து இது போல் ஸ்பாம் செய்திகள் வந்தால் நீங்களே முன்வந்து அவருக்கு சரி செய்ய உதவுங்கள், உறுதியாக இது போன்ற DM கள் உங்கள் நண்பரால் தெரிந்தே அனுப்பபடுபவை அல்ல, அவர் மீது குற்றமில்லை. இது போன்ற நமக்கு தெரியாத விடயங்களில் நாம் உதவியை எதிர்பார்ப்போம் இல்லையா? அவர்களுக்கு இந்த பதிவை பரிந்துரைக்கலாம். மேற்கொண்டு ஐயம் இருந்தால் தீர்க்கலாமே.

உங்களது பாதிக்கப் பட்ட கணக்கை மீட்பதோடு, த்விட்டரின் பாதுகாப்பை பலப்படுத்தவும் உதவி புரியலாம், ஆம். முதலில் @spam கணக்கு தனை பின்பற்றுங்கள். உங்களுக்கு ஏதேனும் Spam DM வந்தால் அதை அவர்களுக்கு தெரிவியுங்கள். இதன் மூலம் புதிய ஸ்பாம் பரவி இருந்தால் ட்விட்டர் தனது பயனர்களுக்கு அறிவுறுத்தும். பயனர்களின் கடவுச் சொல்லை திருடும் அந்த தளத்தினை சோதித்து பின் DM வழி பகிர முடியாமல் தடுத்து விடும். ட்விட்டர் பெயரில் போலி மின்னஞ்சல்கள் உங்களது மின்னஞ்சலுக்கு வந்து உங்கள் user name, password தனை தெரிவிக்கும்படி கேட்டால் அவற்றை spoof @ twitter . com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்! ஆனால் Spammer கள் புதிது புதிதாக தளங்களை உருவாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள்!

பிற சமூக தளங்களில் செய்தி அனுப்பும் முன், நண்பர்களை இணைக்கும் முன் Captcha குறிச்சொற்களை சரியாக எழுதிய பின்பே அனுமதிக்கும், த்விட்டரின் எளிமை தன்மை காரணமாக அது வைக்கப்படவில்லை. பெரும்பாலான spam கள் சுட்டிகளை சொடுக்குவதின் மூலமே பரவுகின்றன. நீங்களாக கேட்காமல் ஒருவர் சுட்டியை அனுப்பி இருந்தால் திறக்காதிர்கள், குறிப்பாக ஆங்கிலத்தில் இருந்தால், .ru .im என முடியும் தளங்களாக இருப்பின். அந்த DM தனை அழிப்பதே சாலச் சிறந்தது. அதையும் மீறி உங்களுக்கு DM அல்லது Tweet ல் உள்ள ஒரு இணைப்பை திறந்து பார்க்க தோன்றினால் Google GWT வழியாக திறக்கவும். உங்களது firefox உலவியில் WOT addon தனை இணைத்துக் கொண்டால் பச்சை நிறம் காட்டும் இணைப்புகளை மட்டும் திறந்து கொள்ளலாம். இந்த யோசனை twitter.com ல் வேலை செய்யும். அல்லது சுருக்கப்பட்ட bit.ly , tinyurl போன்ற சுட்டிகளை untiny.me தளத்தில் விரிவு செய்து பார்த்து விட்டு திறக்கலாம்.

சில ட்விட்டர் client கள் Google GWT பாதுகாப்பு உடன் இயங்குகின்றன. த்விட்டருக்கென தனி மின்னஞ்சல் மற்றும் தனி கடவு சொல் வைத்திருப்பது நலம். அதை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதிர்கள். உங்கள் கணினியின் பாதுகாப்பை அதிகரியுங்கள். AntiVirus/FireWall மென்பொருட்கள் தவறான தளங்களில் நீங்கள் நுழைவதை விட்டும் உங்களை பாதுகாக்கும். Open Network ல் ட்விட்டர் தனை பயன்படுத்தினால் SignOut செய்து விட்டு cookies களையும் அழியுங்கள் இதற்க்கு Firefox ல் ctrl+alt+delete பயன்படுத்தலாம். கடவு சொல்லை தட்டச்ச OnScreen Keyboard பயன்படுத்துங்கள். Windows – Runல் OSK என தட்டச்சவும். Opera USB portable போன்ற உலவிகளின் மூலம் உங்களின் PenDrive இலிருந்து கொண்டே இணைய தளங்களை பயன்படுத்தலாம் cookie கள் கணினியில் சேகரம் ஆகாது.

இன்னொரு வழி SocialOomph.com தளத்தின் @OptMeOut தனை பின்பற்றுவது, அவர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள், அவர்களிடம் இருந்து ஒரு DM வரும், பின் அவர்களுக்கு நீங்கள் சும்மா ஒரு DM அனுப்ப வேண்டும், பின்னர் அவர்களிடம் இருந்து ஒரு confirmation வரும். அத்தோடு அவர்களை unfollow செய்து விடலாம். இது வரும் முன் காக்கும் நடவடிக்கை. நிறைய Spam App கள் SocialOomph தளத்தின் AutoDM marketing வசதிகளைப் பயன்படுத்துவதால், Do Not Disturb சேவை போல நாம் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

TweetDeck போன்ற செயலிகள் Auto URL short/unshort வசதிகளைத் தருகின்றன. Tweete , Dabr போன்ற செயலிகளில் settings ல் Links Open Via : Direct to GWT மாற்றுவதன் மூலம் பாதுகாப்பாக சுட்டிகளைத் திறக்கலாம்.

புதிது புதிதாக ட்விட்டர் spam தொல்லைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன, அறிந்த பாதுகாப்பு வழிகளை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளோம்!

பதிவு : @karaiyaan

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: ஸ்பாம்   SPAM   Protect Twitter Account   Twitter Account   ட்விட்டர் கணக்கு        
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.