LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

வாக்களிப்பது எப்படி ? ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!

நாளை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முதன் முதலாக வாக்களிக்க இருக்கும் இளைய தலைமுறையினருக்கு உதவும் வண்ணம், வாக்களிப்பது எப்படி என்பது பற்றிய விரிவான தகவல்களை நாம் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.  


வாக்களிக்கும் மையத்திற்கு செல்லும் முன், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, 100 நாள் வேலைதிட்ட அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தையும், பூத் சிலிப்பையும் கொண்டு செல்ல மறக்கக் கூடாது.


வாக்கு சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்வதை தவிர்க்கவும். 


தனியார் வாகனங்கள், ஓட்டுச்சாவடிக்கு, 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்.


முதல் தேர்தல் அலுவலர், உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரி பார்த்து, உரத்த குரலில் படிப்பார். அதை ஓட்டுச் சாவடிக்குள் உள்ள அனைத்து கட்சி ஏஜன்ட்களும் உறுதி செய்வர்.


இரண்டாவது அலுவலர், உங்களது இடது ஆள் காட்டி விரலில், அடையாள மையிட்டு, ஓட்டளிக்கும் சிலிப் வழங்கி, வாக்காளர் எண்ணைப் பதிவு செய்வார். இதில் நீங்களும் கையெழுத்திட வேண்டும்.


அடுத்ததாக, நீங்கள் மூன்றாம் அலுவலரிடம், ஓட்டு பதிவிற்கான சிலிப்பை காண்பிக்க வேண்டும். அவர் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள, 'பேலட் பட்டனை' அழுத்துவார். பின் நீங்கள், ஓட்டு போடும் மறைவிடத்திற்கு சென்று, உங்களது வாக்கை இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்.


வாக்குபதிவு இயந்திரத்தில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் சின்னம் மற்றும் பெயருக்கு எதிரே நீல நிறத்தில் பொத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். 


யாருக்கும் ஓட்டுப்போட விருப்பம் இல்லாவிட்டால், "நோட்டா' என்ற பட்டனை அழுத்தலாம்.


வாக்காளர் ஏதாவது ஒரு பட்டனை மட்டும் அழுத்தி, வாக்குபதிவு செய்ய வேண்டும்.


நீல பட்டன் பயன்படுத்தும்போது, நீங்கள் ஓட்டளித்த வேட்பாளரின் பெயருக்கு எதிரே, சிகப்பு விளக்கு எரியும்; 


வாக்குபதிவு செய்யப்பட்ட பிறகு, 'பீப்' என்ற ஒலி கேட்கும். இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள விளக்கு, அணைந்து விடும். 


வாக்களிக்கும் முறை, இத்துடன் நிறைவடையும்.  


வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல..... நமது கடமையும் கூட......

by Swathi   on 23 Apr 2014  3 Comments
Tags: ஓட்டு   ஓட்டு போடுவது எப்படி   How to put Vote   Votu Poduvathu Eppadi           
 தொடர்புடையவை-Related Articles
வாக்களிப்பது எப்படி ? ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! வாக்களிப்பது எப்படி ? ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
கருத்துகள்
17-Apr-2019 12:50:45 Kavitha.s said : Report Abuse
How to put online vote
 
12-Apr-2019 14:38:11 S. Nagalakshmi said : Report Abuse
We put thabal pottu.
 
24-Apr-2014 07:08:22 பால சுப்ரமணியன்.மு said : Report Abuse
சார் தபால் ஓட்டு போட என்ன செய்யவேண்டும்?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.