|
|||||
திருமணத்தை பதிவு செய்வது எப்படி ? ஆன்-லைனின் விண்ணப்பிக்கலாமா ? |
|||||
![]() தமிழ்நாடு கட்டாய திருமண பதிவுச் சட்டம் கடந்த 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.
திருமணத்தை எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன :
பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு.
பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, பான்கார்டு, அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. அப்போது கட்டணம் 150 ரூபாய் ஆகும்.
திருமண பதிவினால் என்ன பலன் :
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்த வழக்கில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.
ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, ஆவணங்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.
கூடுதல் தகவல் மற்றும் விண்ணபிக்க :
http://evisitregn.tn.gov.in/evisitregn/appointment.do
http://www.tnreginet.net/english/smar.asp என்ற இணையதளத்தை பார்க்கவும், |
|||||
by Swathi on 21 Jan 2014 27 Comments | |||||
Tags: திருமண பதிவு காதல் திருமணம் பதிவு காதல் திருமணத்தை பதிவு செய்வது எப்படி திருமணத்தை பதிவு செய்து எப்படி Register Marriage How to Register Marriage How to Register Marriage Tamil | |||||
|
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|