LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hyderabadi Chicken Dum Biryani)

தேவையானவை :



சிக்கன் எலும்புடன் - 3 /4 கிலோ
வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
எண்ணெய் - 1 /4 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தழை - 1 /4 கப்
புதினா - 1 /4 கப்
குங்குமப்பூ - 1 டீஸ் ஸ்பூன்
பால் - 1 /2 கப் (வெது வெதுப்பானது)


சாதத்திற்கு தேவையானவை :



பாஸ்மதி அரிசி - 3 கப்
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
மராட்டி மொக்கு - 1
அனாசிப்பூ - 1
கருஞ்சீரகம் - 2 டீஸ் ஸ்பூன்


சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையானவை :



பச்சை மிளகாய் - 5 (பொடித்தது)
இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 /2 கப்
கருஞ்சீரகம் - 2 டீஸ் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 /4 டீஸ் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம்பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்



அரைக்க தேவையானவை :


மல்லித்தழை - 1 /4 கப் (பொடித்தது)
பட்டை - ஒரு இன்ச்
புதினா - 1 /2 கப் (பொடித்தது)
மிளகு - 7 - 8
ஏலக்காய் - 3
கிராம்பு - 3


செய்முறை :


1.முதலில் அரிசியைக் களைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.


2.கோழி கறியை கழுவி வைத்துக் கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை நீங்கலாக மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக புதினா, மல்லித்தழை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, சிக்கன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்து கலக்கி ஊற வைக்கவும். இதன் மேல் சிறிது வறுத்து வைத்துள்ள வெங்காயம் சிறிது சேர்க்கவும்.


3.அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதனுடன் நெய், எண்ணெய், கருஞ்சீரகம்,பிரியாணி இலை,மராட்டி மொக்கு அனாசிப்பூ, பட்டை,கிராம்பு சேர்க்கவும்.


4.தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக சூட்டில் 4  நிமிடங்கள் வரை வேக வைக்கவும் உடனடியாக சாதத்தை வடித்து தனியே வைக்கவும்.குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து வைத்திருக்கவும்.


5.ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும்.இதன் மேலே வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி பரப்பி விடவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா இலை சேர்க்கவும்.இறுதியாக குங்கம்பூ கலவையை ஊற்றவும்.


6.பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு கண்ணாடி மூடி போட்டு கொள்ளவும். அதிக சூட்டில் 3 நிமிடங்கள் வரை வைக்கவும். பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி  பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து விடவும்.இப்போது  நான் - ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.


7.நன்-ஸ்டிக் பாத்திரம் சூடானதும், இதன் மேலே பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை வைத்து அரை மணிநேரம் வரை வேக விடவும். சிமியில் வைத்தால் 40 நிமிடங்கள் வரை ஆகும். முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை வெண்ணையில் வறுத்தும் போடலாம்.சுவை மேலும் மெருகேறும்.

Hyderabad Chicken Dum Briyani

Ingredients for Hyderabad Chicken Dum Briyani:

 

Chicken with Bone-3/4kg

Onion-2 (Chopped Lengthly)

Oil-1/4 Cup

Ghee-2 tbsp

Coriander Leaves-1/4 Cup

Mint-1/4 Cup

Saffron-1 tsp

Milk-1/2 Cup (Luke Warm)

 

Ingredients to Cook Rice:

 

Basmati Rice-3 Cup

Bay Leaf-1

Cloves-2

Marathi Mogga-1

Star Anise-1

Cumin-2 tsp

 

Ingredients for Marination:

 

Green Chilly-5 (Chopped)

Ginger, Garlic Paste-2 tbsp

Curd-1/2 Cup

Cumin-2 tsp

Chilly Powder- 2 tsp

Turmeric Powder-1/4 tsp

Coriander Powder-1 tbsp

Salt-as Needed

Lemon Juice-2 tbsp

 

Ingredients for Grinding:

 

Coriander Leaves-1/4 Cup (Chopped)

Cinnamon-1 Inch

Mint-1/2 Cup (Chopped)

Pepper-7-8

Cardamom-3

Cloves-3

 

Procedure to make Hyderabad Chicken Dum Briyani:

 

1. Wash the rice and soak for half an hour. Heat oil in a pan, add chopped onion and fry till get golden color.

2. Wash the chicken and keep aside. Fry and grind the given ingredients except mint and coriander leaves and then grind again along with mint and coriander leaves. Mix the grinded paste together with chicken and marinate along with given marinating ingredients. Add little amount of fried onion together with marinate chicken.

3. Mix all together and soak for 4 hours. Heat water in a deep pan. When water starts boiling, add ghee, oil, cumin, bay leaf, marathi mogga, star anise, cinnamon and cloves.

4. When water boiled well, add soaked rice and allow to boil for 4 minutes. Strain the water and keep aside. Mix saffron in luke warm water.

5. Heat a wide deep vessel, add oil, ghee and soaked chicken and then cook on high for 2 minutes. Spread the cooked rice over the chicken layer. Add fried onion, remaining coriander leaves and mint over the chiken. Finally add saffron milk.

6. Cover the vessel using a glass lid. Allow high flame for 3 minutes. Then allow medium flame and remove the vessel from stove and place a non stick vessel. Allow to heat.

7. Place back the briyani vessel on the non stick vessel and cook briyani for half an hour. If allow simmer it will take 40 minutes to cook. We can add fried nuts  like raisin and cashew nuts.

 

 

 

 

 

by Swathi   on 2012-06-26  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.