"இந்தியாவை நேசிக்கிறேன்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடக்கும் 73- வது பொதுக்குழு கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.
ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, சுஷ்மா சுவராஜை வரவேற்று, அவரை அதிபர் டிரம்பிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பிரதமர் மோடியின் வாழ்த்துகளை, அதிபர் டிரம்பிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய அன்பை என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்று கூறினார்.
பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சுஷ்மா சுவராஜ் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
|