|
||||||
லிங்கா ரஜினியை பார்த்து வியந்து போனேன் - சொல்கிறார் ராதாரவி !! |
||||||
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் லிங்கா... இந்த படத்தின் படபிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்த பல சுவாரசிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து, ராதாரவி கூறியதாவது, படத்தில், ஒரு பெரிய 'டேம்' மீது ஏறி ரஜினி வசனம் பேச வேண்டும். அந்த காட்சியில் அவர் பேசும்போது அவர் கூட நான் மட்டுமே இருக்க வேண்டும். அதனால் ரவிக்குமார் என்னையும் ரஜினியையும் 'டேம்' மீது ஏற சொல்லிவிட்டார். நான் கூட வருவதை கவனிக்காமல் ரஜினிகாந்த் விறு விறு என படிக்கட்டில் அவரது வேகத்தில் ஏறி "நான் ரெடி" என்று சொல்லி விட்டார். அவர் கூட ஏறத்தொடங்கிய நானோ பாதி படியைக்கூட தாண்டவில்லை. இதே போல் ஒரு அனுபவம் 20 வருடத்திற்க்கு முன்பு உழைப்பாளி படத்திலும் எனக்கு ஏற்பட்டது. அதே ரஜினியை தான் நான் லிங்காவிலும் பார்க்கிறேன். ரஜினி என்னை விட வயதில் பெரியவர் என்றாலும் அவர் வேகத்திற்க்கும் சுறுசுறுப்பிற்க்கும் என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. நான் இதுவரை 296 படங்களில் நடித்துள்ளேன். தற்போது நடித்து வரும் லிங்கா தான் என்னுடைய திரை வாழ்க்கையின் மைல் கல்லாக இருக்கும் என ராதாரவி தெரிவித்துள்ளார். |
||||||
by Swathi on 03 Sep 2014 0 Comments | ||||||
Tags: Lingaa Rajini Radha Ravi | ||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|