LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

நான் கேப்டன் பதவியில் இருந்து விலக மாட்டேன் - டோனி !


இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகமாட்டேன் என்று கூறியுள்ள டோனி அறிவித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்டுகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெறுப்பும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதற்கிடையே கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.இது பற்றி டோனி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,எளிதாக கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்; அணியில் ஒரு வீரராக நீடிக்கிறேன் என்பதை கூறி விட முடியும். அப்படி செய்வது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும். நான் பொறுப்பை உதறிவிட்டு ஓடி விட மாட்டேன். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் தேர்வாளர்கள் உள்ளனர். அவர்கள் அணி தலைவர்  பற்றி முடிவு செய்யட்டும். அணியை ஒருங்கிணைத்து, அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதே எனது வேலை.ஒவ்வொரு வீரர்களும் அபாரமாக விளையாடும் போது, அந்த அணிக்கு தலைமை தாங்குவது எப்போதும் சிறப்பான விஷயமாக இருக்கும். அந்த நேரத்தில் அணித்தலைவரே தேவையில்லை. அணி சிறப்பாக செயல்படாத போது தான், கேப்டன்ஷிப் பற்றி பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் அது போன்ற சமயத்தில் தான் ஒரு தலைவராக, அணியை எப்படி வழிநடத்துவது என்பது முக்கியம். ஒரு அணித்தலைவராக இது தான் எனக்கு விடப்பட்ட சவாலாகும். இப்போது அணியை ஒருங்கிணைத்து, இளம் வீரர்களையும், சீனியர் வீரர்களையும் அரவணைத்து, சரியான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு டோனி கூறினார்.

I Will not Quit Captaincy - Dhoni

The easiest thing for me to say right now is to say, 'I quit captaincy' and be a part of the side. But that's like running away from the responsibility,"he said after India were handed a seven-wicket defeat by England at the Eden Gardens on Sunday to trail the four-match series 1-2.Of course there are others who will decide. There is BCCI and the administrative people who also want to look into that, Dhoni said at the post-match press conference.Dhoni, whose Test form has also come under the scanner, said it was his responsibility to get the team together and prepare for the next match.For me, my responsibility is to get the team together and be prepared for the next Test match. This is where experience will count. You have got the right mix of experienced and fresh guys,he pointed out.As a leader, this is a challenge that has been thrown up to me or towards me. It's always good to lead a side when everybody is doing well. That's a time when you don't need a leader. Leading a side is when the team is not doing well.You would try to gel the team well and back the senior guys and try to move in the right direction,he said.

by Swathi   on 10 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.