LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

இதயத்தில் இணைந்த தலைவன்

 பெருந்தலைவரின் இறுதிச் சடங்கு நடந்தது . சிதைக்கு தீ மூட்டுமுன் பீரங்கிகள் மூன்று முறை முழங்கின . தலைவா தலைவா என மக்கள் மனமுருக கதறியழுத குரல் விண்ணைத் தொட்டது . தலைவரின் தங்கை பேரன் கனகவேல் சிதைக்குத் தீயிட்டார் . சிதையில் இருந்து தீ எழுந்தது . கூடி இருந்த அனைவரும் உணர்ச்சி வசப்பட்டுக் கதறினர் .

தன்னைப் பிரதமராக்கி நாட்டின் மானம் காத்த தியாகத்தலைவனின் உடலைத் தீ தீண்டியதைக் கண்ட இந்திரா காந்தியால் அழுகையை அடக்க இயலவில்லை . கையால் வாயைப்பொத்திக் கொண்டு கதறினார் .

நம்முடைய வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து பேரிருள் சூழ்ந்து விட்டது . அன்புக்கும் , மரியாதைக்கும் உரிய அந்தப் புனிதர் இப்போது இல்லை .

இத்தனை வருடங்களாக அனைவருடன் வாழ்ந்து ஆலோசனையும் , ஆறுதலும் தந்த தலைவன் இனி இல்லை .

காந்திஜியோடு காமராசரும் சென்று கலந்து விட்டார் . தலைவர் மறையும்போது நாகர்கோவில் எம் . பி . ஆக இருந்தார் . 1969 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம்தேதி முதல் இறுதிப் பேச்சு அடங்கும் வரை 6 ஆண்டுகள் 8 மாதம் 24 நாட்கள் அவர் எம் . பி . யாக இருந்தார் .

காந்திஜி அமரத்துவம் அடைவதற்கு முன் கடைசியில் “ ஹே ராம் ” என்று கூறினார் . நேருஜி கடைசியாக “ எல்லாப் பைல்களையும் பார்த்துவிட்டேன் ” என்றார் . தலைவர் இறுதியாக கூறிய வார்த்தை “ விளக்கை அணை ” என்பதாகும் .

பாரதத்திற்கு வழி காட்டும் ஒளியாக விளங்கிய விளக்கும் அணைந்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது .

1975 ஜனவரி 26 இல் தலைவர் குடியரசு தினச் செய்தி விடுத்தார் . “ அன்புக்குப் பணிவோம் . கட்டுப்படுவோம் . அதிகாரத்துக்கு கட்டுப்பட மாட்டோம் . பலாத்காரத்திற்கு அஞ்ச மாட்டோம் என்ற உறுதியை இந்தக் குடீயரசு தின விழாவில் எடுத்துக் கொண்டு காரியம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் ” என்று அந்தச் செய்தியில் கூறியிருந்தார் . இதுதான்தலைவர் கடைசியகா மக்களுக்குக் கூறிய செய்தி .

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் தலைவர் நாடெங்கும சுற்றுப் பயணம் செய்து காங்கிரசுக்கு தேர்தல் நிதி திரட்டினார் . அப்போது இன்புளூயன்சா ஜூரத்தால் பாதிக்கப்பட்டார் . பின் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார் .

பிரதமர் இந்திரா காந்தி பெருந்தலைவரின் உடல் நிலையை விசாரித்துக் கடிதம எழுதினார் . பதிலுக்கு காமராசரும் உடல் நலம் தேறி வருகிறது என்று பதில் எழுதினார் . பிரதமர் இந்திராவுக்கு எழுதிய கடைசிக் கடிதம் இதுதான் .

1975 ஜூலை 2,3 ம் தேதிகளில் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெருந்தலைவர் கலந்து கொள்ளவில்லை . அவர் கலந்து கொள்ளாத முதல் காரியக் கமிட்டிக் கூட்டம் இதுதான் .

1975 அக்டோபர் 1 ஆம் தேதி பெருந்தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லத்துக்குச்சென்று அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறிவிட்டு 4 தடவை “ போய் வருகிறேன் ” என்று கூறி சிவாஜி கணேசனிடம் விடை பெற்றார் .

சென்னை காந்தி மண்டபத்தில் 1975 அக்டோபர் 2 ஆம்தேதி காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக கவர்னர் கடிதம் எழுதியிருந்தார் . ஆனால் பெருந்தலைவரோ காந்திஜியோடு அமரராகச் சென்று கலந்து விட்டார் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.