|
|||||
இது கதிர்வேலன் காதல் - திரை விமர்சனம் !! |
|||||
![]() இயக்குனர் - எஸ். ஆர். பிரபாகரன் நடிப்பு - உதயநிதி ஸ்டாலின் நயன்தாரா சந்தானம் இசை - ஹாரிஸ் ஜயராஜ் மதுரையில் உள்ள ஒரு ஆஞ்சநேய பக்தராக வருகிறார் உதயநிதி. ஏற்கனவே ஃப்ரெண்டாக பழகும் வில்லனை, நல்லவன் என நம்பி லவ் பண்ணும் மூடுக்கு வந்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர்ப் பெண்னாக நயந்தாரா. இப்படி படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே எதிரும், புதிருமான கேரக்டர்களாக சிக்கல்களுடன் ஹீரோ-ஹீரோயினைக் காட்டும்போது, ஒப்பனிங் செம..... ம்ம்ம்ம்........ கோயம்புத்தூரில் வாழும் ஹீரோவின் அக்கா, கோபித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார் எனும்போதே, ஹீரோ அங்கே போகப்போகிறார் என்று தெரிந்துவிடுகிறது. அதன்பின் முதல் ஒரு மணி நேரத்திற்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெளிவாக எல்லோராலும் சொல்ல முடிகிறது. முதல் ஒரு மணி நேரம், சொல்லும்மளவுக்கு பெரிய சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாமல், ஃபேமிலி செண்டிமெண்ட், அக்கா-மாமா கதை, வில்லன் கேரக்டர் (சாரி) நெகடிவ் கேரக்டர் என சற்று தொய்வாக படத்தின் கதை நகர்கிறது. அடுத்ததாக ஹீரோ, ஹீரோயினின் எதிர்வீட்டுக்கே குடி போவது, ஹீரோயின் பின்னால் சுத்துவது, ஹீரோயினின் பாய் ஃப்ரெண்ட் கெட்டவனாக இருப்பது என மிகவும் பழசான ஐடியாக்களுடன் படம் நகர்ந்துகொண்டிருக்கும்போது, அவ்வப்போது வரும் சந்தானம் தான் (நம்மை)காப்பாற்றுகிறார். பின்னர் சந்தானம் காதலுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பிக்கும்ப்போது தான், படத்தின் வேகமே அதிகரிக்கிறது. ஹீரோயினுக்கு பாய் ஃப்ரெண்ட் கெட்டவன் என தெரிந்த பின், படம் இன்னும் கொஞ்சம் கலகலப்பாக நகர்கிறது. படத்தில் வில்லன் இருந்தாலும் ஃபைட் எதுவும் வைக்கலா....... ரொம்ப சந்தோசம். படத்தை முடிந்தவரை ஜாலியாகக் கொண்டு செல்ல நினைத்திருக்கிறார்கள். அதனால் ஹீரோவின் காதல் மேலும் நமக்கு பெரிய அக்கறை வரவில்லை. எனவே சேருவார்களா,இல்லையா எனும் எதிர்பார்ப்பு நமக்கு எழவேயில்லை. ஓடிப்போன அக்கா, ஒன்னுமில்லாத விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு சொந்த வீட்டுக்கா வருவார்? இது போன்று லாஜிக் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத காட்சிகள். அதைவிட அடுத்த சீனுக்கு லீடாக ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, வேறொரு சீன் வருகிறது. சந்தானம் உதயந்தியிடம் ஃபோன் நம்பர் கொடுத்துவிட்டு ‘எதுவும்னா ஃபோன் பண்ணுடா?’ என்கிறார். அடுத்த சீனில் உதயநிதி ஃபோன் செய்வது, அக்காவிற்கு. அக்கா ஃபோன் பேசி முடிக்கும்போது காலிங் பெல் அடிக்கிறது. ‘மாமா வந்திருப்பார்..கதவைத் திற’ என்கிறார். கதவைத்திறந்து உதயநிதி போவது மொட்டை மாடிக்கு. அங்கே மாமா எக்ஸர்ஸைஸ் செய்துகொண்டிருக்கிறார். பிறகு தான் புரிகிறது, அது அடுத்த நாள் காலை சீன் என்று. இப்படி குழப்பம் தரும் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னால் சுற்றுவது, சந்தானம் ஐடியா கொடுப்பது என ஓகே..ஓகே போன்றே பல காட்சிகள் வருகின்றன. ஆனாலும் சந்தானம், உதயநிதியின் அப்பாவை சமாதனப்படுத்த மதுரை வரும் காட்சியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ்வரை, படம் செம விறுவிறுப்பு + கலகலப்பு. படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக, அப்பா-மகன்-காதல் பற்றி வரும் வசனங்கள் தூள்..... உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடியைப்போல் இல்லாமால், இந்த படத்தில் கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். சந்தானத்திற்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. நயந்தாராவை கலாய்ப்பது, காதலுடன் பார்ப்பது, கடைசிக் காட்சியில் அப்பாவுடன் பேசும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார். இந்தப்படத்தின் முக்கிய ஆதாரமே சந்தானம் தான். ஓகே..ஓகே அளவிற்கு இல்லையென்றாலும், வருகின்ற காட்சிகளில் எல்லாம் தியேட்டர் அதிர்கிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள் செம...... ஹீரோயின் நயன்தாராவைப் பற்றி உங்களுக்குத்தான் தெரிந்திருக்குமே.. அதனால் சொல்வதற்கு ஒன்றுமில்லை...... மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல்...... காமெடிக்காக பார்க்கலாம் ........... |
|||||
Udhayanidhi Stalin and Santhanam Still in Idhu Kathirvelan Kadhal | |||||
by Swathi on 13 Feb 2014 2 Comments | |||||
Tags: இது கதிர்வேலன் காதல் இது கதிர்வேலன் காதல் திரைவிமர்சனம் இது கதிர்வேலன் காதல் விமர்சனம் இது கதிர்வேலன் காதல் சினிமா இது கதிர்வேலன் காதல் கதை கதிர்வேலன் காதல் சினிமா விமர்சனம் Idhu Kathirvelan Kadhal Review | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|