LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அகநானூறு

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

தமிழ் இலக்​கி​யப் பாக்​கள் அனைத்​துமே முக்​க​னி​யின் சாறு பிழிந்து புனை​யப்​பட்​ட​வையோ என எண்​ணும் வகை​யில்,​​ படிக்​குந்​தோ​றும் இன்​பம் பயப்​பவை;​ நினைக்​குந்​தோ​றும் நெஞ்​சத்தை குளிர் சார​லால் நனைப்​பவை.​
வி​த​வி​த​மான கனி​கள் விளைந்​தா​லும் "முக்​கனி' என தமி​ழர்​க​ளால் சிறப்​பிக்​கப்​பெற்​றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்​றி​லும்,​​ இலக்​கி​யத் தோட்​டங்​க​ளில் அதி​கம் கனிந்து மணம் வீசி,​​ வாச​கனை வாச​னை​யா​லும்,​​ சுவை​யா​லும் சுண்டி இழுப்​பது பலாக்​க​னி​தான்.​
ம​னித மனத்தை குரங்​கு​டன் ஒப்​பி​டு​வது வழக்​கம்.​ குரங்கு மனத்தை எத​னு​டன் ஒப்​பி​டு​வது?​ அரு​வி​யின் இக்​க​ரை​யில் நிற்​கி​றது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அரு​வி​யைக் கடந்து அக்​க​ரைக்​குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்​கள் அடர்ந்த காடு என்​றால் மந்​திக்​குக் கேட்​கவே வேண்​டாம்.​ இங்கோ,​​ இடை​யில் தடுப்​பது தண்​ணீர்க் காடு!​
அப்​போது,​​ பறிப்​பார் இல்​லா​மல் முற்​றிய பலாக்​கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்​த​படி வரு​கி​றது.​ அரு​வி​யில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்​ப​ழத்​தின் மீதேறி அமர்ந்து கொள்​கி​றது.​ மலைச்​சார​லில் உள்ள ஓர் ஊரின் பக்​க​மா​கச் சென்று வீழும் அரு​வி​யின் துறையை அடைந்​த​தும் பலாப்​ப​ழத்தி​லி​ருந்து இறங்​கிச் செல்​கி​றது மந்தி.​
பசி நீக்​கும் உண​வுப் பொரு​ளான பலா பட​கா​கி​விட்​டது.​ அரு​வி​யைக் கடந்து செல்ல உத​வி​ய​தால் "பலா'க்க​னியை "பால'க்கனி என்றே அழைக்​க​லாம் எனத் தோன்​று​கி​ற​தல்​லவா!​​
அரு​வி​பாய்ந்த கரு​வி​ரல் மந்தி
செழுங்​கோட் பல​வின் பழம்​புணை யாகச்
சாரல் பேரூர் முன்​துறை இழி​த​ரும்...​
​(பா..382,​ வரி​கள் 9}11)
என,​​ தலை​வ​னின் நாட்டு வளத்​தைக் கூறும் தலை​வி​யின் கூற்​றா​கத் தொடர்​கி​றது,​​ கபி​ல​ரின் அந்த அக​நா​னூற்​றுப் பாடல்.​ அந்த மந்​தி​யைப்​போ​லவே,​​ தலை​வ​னும் தான் மேற்​கொண்ட செய​லில் எத்​த​கைய இடை​யூ​று​கள் வந்​தா​லும் அவற்​றைத் தக்க வழி​க​ளில் தகர்த்​தெ​றிந்து தன்னை வந்​த​டை​வான் என மறை​மு​க​மா​கக் குறிப்​பி​டு​கி​றாள் தலைவி.​
த​லை​வ​னின் மலை நாட்டு வளத்​துக்கு மட்​டு​மல்ல,​​ தலை​வி​யின் மன வளத்​தைச் சோதிக்​கும் காமத்​தின் பாங்​கை​யும் பளிங்​கென உவ​மை​யாக்க பலாக்​க​னி​யால் முடி​யும்.​
உ​யிரோ மிகச் சிறி​யது.​ கண்​வழி புகுந்து நெஞ்​சில் வேரோடி உயி​ரெ​லாம் பட​ரும் காமமோ மிகப் பெரி​யது.​ அர​சன் அன்று கொல்​வான்;​ தெய்​வம் நின்​றும் கொல்​லும் என்​பார்​கள்.​ காமமோ என்​றும் கொல்​லும்.​ காதல் பார்​வை​யா​லும்,​​ கனிந்த மொழி​க​ளா​லும் தலை​வி​யின் இத​யத்​தைக் கடத்​தி​ய​வன்,​​ இப்​போது திரு​ம​ணம் செய்​யா​மல் காலத்​தைக் கடத்​து​கி​றான்.​ சித்​திர விழி​யாள் சில நாள் பொறுக்​க​லாம்,​​ ஆனால்,​​ நாள்​கள் மாதங்​க​ளா​கி​விட்ட பின்​பும் மண​நாள் குறித்து எவ்​வித அறி​கு​றி​யை​யும் காண்​பிக்​க​வில்லை அவன்.​ எப்​ப​டிப் பொறுப்​பாள்?​
கூ​டா​ரத்​துக்​குள் நுழைந்த ஒட்​ட​கத்​தின் கதை​யாக,​​ காமம் தலை​வி​யின் உயிரை வதைக்​கி​றது.​ அதை,​​ அவ​ளது தலை​வ​னி​டம் சொல்ல வேண்​டிய இக்​கட்​டுக்கு உள்​ளா​கி​றாள் இன்​னு​யிர்த் தோழி.​ தோழி​யும் பெண்​தானே!​ நேர​டி​யாய்ச் சொல்ல அந்த நேரி​ழை​யா​ளுக்கு நெஞ்​சில் துணி​வேது?​ உவ​மை​யால் உணர்த்த நினைக்​கி​றது இத​யம்.​
ம​லைத்து நிற்​கும் அவள் பார்​வை​யில்,​​ மலை​யில் வளர்ந்​தி​ருக்​கும் பலா மரங்​கள் தென்​ப​டு​கின்​றன.​ அவற்​றில் உள்ள மெல்​லிய கொம்​பு​க​ளில் மிகப் பருத்த பலாக் கனி​கள் முற்​றித் தொங்​கு​வ​தைப் பார்க்​கி​றாள் தோழி.​ பலாக் கனி​யைத் தாங்​கும் மெல்​லிய கொம்​பின் பரி​தாப நிலை​யைச் சொல்லி,​​ தலைவி துன்​பம் நீங்கி,​​ இன்​பம்​பெற வேண்​டு​மா​னால் உடனே அவ​ளைத் திரு​ம​ணம் செய்​து​கொள் என்​கி​றாள் தோழி,​​ தலை​வ​னி​டம்.​
வேரல்வேலி வேர்​கோட் பல​வின்
சாரல் நாட செவ்​வியை ஆகு​மதி
யார் அத​றிந்​திசி னோரே?​ சாரல்
சிறு​கோட்​டுப் பெரும்​ப​ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்​த​வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)
என,​​ காமத்​தின் தன்​மையை "குறுந்​தொகை'யில் தோழி​யின் கூற்​றாக,​​ சுளைப்​பலா உவ​மை​யால் சுவை​ப​டச் சொல்​ப​வர் வேறு யாரு​மல்​லர்,​​ குறிஞ்​சிக் கவி​ஞர் கபி​ல​ரே​தான்.​
க​டை​யெழு வள்​ளல்​க​ளில் ஒரு​வன் பொதிகை மலை​யில் பொன்​னாட்சி தந்த ஆய் என்​ப​வன்.​ பகை​வர் எதிர்த்து நின்​றால் அவர்​க​ளின் தலை​களை அவன் கரங்​கள் கிள்ளி எடுக்​கும்;​ பரி​சில் பெற வரு​வோ​ருக்கோ அவன் கரங்​கள் பொருள்​களை அளக்​கா​மல் அள்​ளிக்​கொ​டுக்​கும்.​
வீ​ர​மும் ஈர​மும் ஒரு கொடி​யில் மலர்ந்த மலர்​க​ளாய் மணம் வீசு​வ​தைத் தமி​ழக மன்​னர்​க​ளி​டம் மட்​டுந்​தான் அதி​கம் காண முடி​யும்.​ அதற்கு ஆயும் விதி​வி​லக்​கல்​லன்.​
அ​வ​னி​டம் பரி​சில் பெற்​றுச் செல்​வ​தற்​காக கூத்​தர்​கள் சிலர் அவனை நாடி வரு​கின்​ற​னர்.​ அவ​னது எல்​லைக்​குள்​பட்ட மலைக்​கா​டு​க​ளின் வழியே வரும் அவர்​கள் இளைப்​பா​றும் பொருட்டு தங்​கள் தோள்​க​ளிலே சுமந்​து​வந்த மத்​த​ளங்​களை பலா​ம​ரத்​தின் கிளை​க​ளில் மாட்​டித் தொங்​க​விட்​டுள்​ள​னர்.​
மந்தி ஒன்​றின் பார்​வை​யில் மத்​த​ளம் பட்​டு​விட்​டது.​ சும்​மா​யி​ருக்​குமா?​ தொடு​தொ​டு​வென மனது தொல்​லை​செய்ய,​​ விடு​வி​டு​வென மரக்​கி​ளையி​லி​ருந்து இறங்கி வரு​கி​றது.​
மத்​த​ளம் என அறி​யாத அம் மந்தி,​​ கனி​தான் என நினைத்து கனி​வோடு தட்​டு​கி​றது.​ அதி​லி​ருந்து இன்​னிசை வரு​கி​றது.​ அரு​கே​யுள்ள குளத்தி​லி​ருக்​கும் ஆண் அன்​னங்​களோ அந்த இசைக்​குத் தக்​க​படி குர​லெ​ழுப்​பு​கின்​றன.​ விளைவு...இசை​யும் பாட்​டும் அங்கே இல​வ​ச​மாக அரங்​கே​று​கின்​றன.​
மன்​றப் பல​வின் மாச்​சினை மந்தி
இர​வ​லர் நாற்​றிய விசி​கூடு முழ​வின்
பாடின் றெண்​கண் கனி​செத் தடிப்​பின்
அன்​னச் சேவல் மாறெ​ழுந் தாலும்
கழல்​தொடி ஆஅய் மழை​த​வழ் பொதி​யில்..​
​(புற​நா​னூறு,​​ 128,​ வரி​கள் 1}5)
எனத் தொட​ரும் புல​வர் உறை​யூர் ஏணிச்​சேரி முட​மோ​சி​யார்,​​ இப்​ப​டிப்​பட்ட சூழ​லில் பகை​வ​ருக்கு இங்​கென்ன வேலை என்று கூறி ஆய் மன்​ன​னின் வீரத்​தைப் புகழ்​கி​றார்.​
ப​லாப்​ப​ழத்தை "வாய்ப் புசிக்​கும்'; மத்​த​ளமோ இசை​யால் காது​க​ளைக் குளி​ர​வைக்​கும்.​ இங்கே இரண்​டையு கலக்​கச் செய்த மட​மந்தி நடத்​திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்​கும்?​'
உ​ரு​வத்​தில் பெரி​ய​தா​யி​ருந்​தா​லும்,​​ உவ​மை​யாக எடுத்​தாள எளி​தாய் இருப்​ப​தாலோ என்​னவோ வருக்கை ​(வேர்ப்​பலா)​ புல​வர்​க​ளின் பாடல்​க​ளில் தனக்​கென ஓர் இருக்கை கொண்​டுள்​ளது என்​றால் மிகை​யில்​லை​தானே!

by Swathi   on 09 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.