|
||||||||||||||||||
இலக்கியம்-இலக்கணம் |
||||||||||||||||||
இலக்கியம்-இலக்கணம் - ச.தண்டபாணி தேசிகரின் பார்வையில் மகா வித்துவான் ச.தண்டபாணி தேசிகரின் “திருக்குறள் அழகும் அமைப்பும்” என்ற நூலிலிருந்து இலக்கியத்தையும், இலக்கணத்தையும் பற்றி சொல்லியிருந்ததில் சிலவற்றை இங்கு எடுத்து எழுதி இருக்கிறேன். மக்களின் நாகரிக வளர்ச்சி என்பது மொழி வளர்ச்சியை பொறுத்தே அமைகின்றன. நாகரிகம் என்பது இருவகையாக பிரித்துக்கொள்ளலாம் வாழ்வியல் நாகரிகம்: வாழ்வதற்கு தேவையானவைகளை பெருக்குவது, அவற்றை பயன்படுத்திக்கொள்வது. அறிவியல் நாகரிகம்: இந்த வாழ்வியல் நாகரிகம் உன்னத வளர்ச்சி அடைந்த பின் அதனால் விளையும் இன்ப அனுபவங்களே அறிவியல் நாகரிகம். இந்த நாகரிகத்தை எத்தனையோ மக்கள் உணர்ந்தார்கள், உணர்ந்தவற்றை அவ்வப்போது தம்மிடையே பழகும் மக்களிடம் வாயுரையாக வழங்கினார்கள். அவ்வாறு வழங்கியவைகளை, கேட்டவைகள் பின்னர் மறைந்து போயிருக்கவும் வாய்ப்புண்டு. அவ்விதம் நிகழாமல் அதை பற்றி தன் அனுபவ சிந்தனைகளை எழுத்தோவியங்களாக எல்லோர் வாயிலும் எளிமையாக தவழும் பாட்டோவியங்களாக , கருத்தில் நடக்கும் கவிதைகளாக தீட்டி வைத்தார்கள். அவர்களாலே மொழி வளர்ந்தது, வளர்கினறது, இதுவே இலக்கியம், இலக்கிய வளர்ச்சி. இலக்கியத்தின் சுவை: பல நிற பசுக்கள் கறந்த பாலில் ஒரு சேர பரவியிருக்கும் பண்புகளாக வெண்மையும், சுவையையும், நாம் அனுபவிப்பது போல இலக்கிய பண்பையும் உணர்ந்தார்கள். அப்பண்புதான் அழகு, அதுதான் இலக்கணம். இலக்கணம்-இலக்கியம் ஒப்பீடு : வரம்பிற்கு உட்பட்டும் எழும் இலக்கியங்களே மொழியை வளர்க்க உதவுகின்றன. இங்கனம் மொழி வளருவதற்காகவே இலக்கணங்கள் உருவாகின.இலக்கிய கற்பக மரங்களை வளர விடாமல் தடுக்கும் வேர் புழுக்கள் அல்ல, இலக்கணங்கள். அம்மரங்களை ஒடித்து ஒழுங்காக உருவாக்கி பருக்க வைக்கும் பண்பாடுகளே இலக்கணங்கள். “அடித்து வளர்க்காத பிள்ளையும்”, “முறுக்கி வளர்க்காத மீசையும்” பயன்படாதவாறு போல, இலக்கணங்களால் சோதிக்கப்படாத தூய்மையுறப்படுத்தாத இலக்கியங்களால் எந்த பயனும் இல்லை. இலக்கணம் உயிர், இலக்கியம் உடல். இலக்கணம் ஒளி, இலக்கியம் விளக்கு . இலக்கணம் மணம். இலக்கியம் பூ ஆதலால் உலகத்திலுள்ள எந்த மொழியும் இலக்கிய உடலில் இலக்கண உயிரை இயற்கையாகவே பெற்று விடுகிறது “எள்ளின்று எண்ணெய் எடுப்பதுபோல” இலக்கியத்திலிருந்து எடுப்பது இலக்கணம். மொழி கலப்பும்,இலக்கணச்சீர்திருத்தமும்: ஒவ்வொரு மொழி பேசும் மக்கள் சமுதாய வாழ்வாகிய கூட்டு வழ்வை தொடங்கிய் காலத்தும் தம்முள் கலந்தனர், அவர்கள் மொழியும் கலந்தன. கருத்துக்களும் அவ்வண்ணமே கலந்தன. இது வாழ்வில் மட்டுமன்றி இலக்கியத்திலும் கலந்தன. மொழிகளை தத்தமது மொழியியற்கைக்கு ஏற்றவாறு உருமாற்றி அமைத்து கொண்டனர். கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.இன்ன கருத்து இந்த பொழியிலிருந்து வந்தது,இந்த அமைப்பு இன்னாரிடமிருந்து வந்தது என்பது சிறந்ததாக கருதப்படாது. இந்த கருத்துக்கு ஆதரவாக இந்த ஆசிரியர் கூறுவன: கம்பன் கருத்துக்கள் பல காளிதாசனிடம் காணப்படுகின்றன். காளிதாசன் கருத்துக்கள் பல, செகப்பிரியரிடம் திகழ்கினறன.. கம்பன் வால்மீகத்தை மொழி பெயர்த்து சொல்ல அதனை வாங்கிக்கொண்டு கற்பனையமுதம் குழைத்து கவியமுதத்தை பரிமாறினான் என்பது வரலாறு. ஆகவே கதை மொழி பெயர்ப்பு, கற்பனை சொந்தம், ஆதலால் கற்பனையில் கம்பன் காளிதாசனை பின்பற்றினான் என்று சொல்ல முடியுமா? கவிஞர் கருத்துக்கள் அவரவர் வாழ்க்கை அனுபவங்களால் சொல்லப்பட்டவை., உலக ஏட்டிலிருந்து உணர்ந்து கொள்ளப்பட்டவைகளன்று. ஆதலால் கருத்துக்களெல்லாம் ஒன்றாயிருத்தல் இயல்பே, ஏன் சொற்களும், ஒன்றாக இருந்து விட வாய்ப்புண்டு. இதை இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது. இலக்கியத்தின் இரு பெரும் காப்பியங்கள்: தொல்காப்பியம் : மொழியமைதியை முன்னர் கூறி, பின் அம்மொழியை பேசும் மக்களிடையே அக வாழ்வின் இயல்புகள், புற வாழ்வின் இயல்புகளை எடுத்து இயம்புகிறது, பின் அடுத்தப்பாக்களில் அமைந்துள்ள அழகுகள்,அவைகளால் மனிதன் அனுபவிக்கும் சுவைகள், உணரும்போது உளவாகும் உடல் நிலைகள் முதலான சிறந்த கவிதை பண்புகளை காட்டுகிறது. திருக்குறள் மக்களின் வாழ்க்கை இயல்புகளை மட்டும் அறிவிக்கின்றது. அதனால் இலக்கியமாயிற்று. ஒரு குறிக்கோள் வாழ்வின் இலக்கணங்களை அறிவிப்பதால் இதனை இலக்கிய இலக்கணம் என்று கூறிவிடலாம். இதனைக்கொண்டு தமிழ் மக்கள் தமது வாழ்க்கையை திருத்திக்கொள்வர் என்பதை ஆசிரியர் திருவுள்ளகிடைக்கையாதல் வேண்டும்.. இதனை தொடர்ந்து இவ்வாசிரியர் திருக்குறளின் பெருமைகளையும், அதன் விளக்கவுரைகளையும் சொல்லிக்கொண்டு செல்கிறார். குறிப்பு: ஆசிரியரை பற்றி ஆயிரம் பிறை கண்ட அருந்தமிழ்ச் செம்மல் ஐம்பத்தைந்து ஆண்டு கால ஆசிரிய ஆராய்ச்சி பணி அறிஞர் பேருரை,விருத்தியுரை எழுதி வெளியிட்ட நூல்கள்: திருக்குறள் ஆய்வு உரை வளம், உரை களஞ்சியம், அகராதி நூல்கள்,கணபதி ஆடல் வல்லான், மேலும் பல சிறப்புகளை தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ளார். |
||||||||||||||||||
Literature-Grammer | ||||||||||||||||||
by Dhamotharan.S on 16 Dec 2016 2 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|