LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!

இரத்த தானம் பிற உயிர்களைக் காக்க இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஓர் ஒப்புயர்வற்ற அறிய வாய்ப்பு. இரத்த தானம் செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். எந்த தீங்கும் ஏற்படாது. இரத்த தானம் செய்த  48 மணி நேரத்தில் நாம் தானமாக அளித்த இரத்தம் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது.

யார் இரத்த தானம் செய்யலாம்?

18 முதல் 60 வயதுடைய, உடல் ஆரோக்கியமுள்ள, நல்ல பழக்க வழக்கங்களுடைய ஆண் - பெண் இருபாலரும் இரத்ததானம் செய்யலாம்.

உடல் எடை 45 கிலோ அதற்கு மேலும் உள்ளவர்கள்,

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 gm % இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் (Blood Pressure) 100/50 mmHg மற்றும் 180/100 mmHg இருத்தல் அவசியம்.

ஒவ்வொரு தடவையும் இரத்ததானம் செய்யும் கொடையாளர்கள் 3 மாத இடைவெளியில் தானம் செய்யலாம்.

யார் இரத்த தானம் செய்யக் கூடாது?

உடல் எடை 45 கிலோவுக்கு குறைவாக உள்ளோர்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12,5 gm% க்கு குறைவாக உள்ளோர்.

இரத்த அழுத்தம் 100/50 mmHg குறைவாக உள்ளோர் மற்றும் 180/100 mmHgக்கு அதிகமாக உள்ளோர்.

18 வயதுக்கு கீழ் உள்ளோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர்.

மது அருந்தியவர்கள் 24 மணி நேரத்திற்கு தவிர்க்க வேண்டும்.

பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் 6 மாதம் வரை

சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் 3 மாதம் வரை

மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்று ஓராண்டு வரை.

பால் வினை நோய்க்கு சிகிச்சை முடிந்து ஓராண்டு வரை.

ஆண்டிபயாடிக் மருந்து / மாத்திரை உட்க்கொண்டோர் 48 மணி நேரத்திற்கு தவிர்க்க வேண்டும்.

வெறி நாய்க்கடிக்கு கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வருபவர்கள்.

கடந்த 6 மாத காலத்தில் இரத்ததானம் பெற்றவர்கள்.

கடந்த 3 மாத காலத்தில் இரத்ததானம் செய்தவர்கள்

கடந்த 3 மாதங்களில் நிமோனியா, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்.

இரத்ததானம் செய்யும் நாளில் இருமல், ஜலதோஷம், தொண்டைவலி உள்ளவர்கள்.

இருதய நோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்கள்.

பலருடன் உடலுறவு கொள்பவர்கள், போதை ஊசி பழக்கம் உள்ளவர்கள்.

காசநோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை.

பெண்கள் கருவுற்றிக்கும் போதும், தாய்ப்பால் ஊட்டும் போதும் மற்றும் மாதவிடாய் நேரத்திலும் இரத்த தானம் செய்யக்கூடாது.

கருச்சிதைவு செய்து கொண்ட பெண்கள் 6 மாதம் வரை

ஹெப்படைடிஸ் B, ஹெப்படைடிஸ் C மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோர் வாழ்நாள் முழுவதும்.

இரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்


தொடர்ச்சியாக ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் இரத்ததானம் செய்வோருக்கு மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஒவ்வொரு தடவையும் இரத்ததானம் செய்யும் போது உடலிலுள்ள இரத்த செல்கள் புத்துனர்ச்சியடைகிறது. மேலும் புதிய இரத்தச் சிவப்பணுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகி இரத்த ஓட்டம் சீரடைகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தேவதைகள் விண்ணுலகில் மட்டும் வாழ்கிறார்கள் என்று யார் சொன்னது?

அவர்கள் நம் மத்தியிலும் தினமும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இரத்ததானம் செய்யும் நீங்களும் இவ்வுலகில் வாழும் உயிர் காக்கும் தேவதைகளே.

இரத்ததானம் செய்வோர். மனிதரில் தெய்வம் போன்றோர்.

by Swathi   on 13 Jun 2016  1 Comments
Tags: Blood Donation   இரத்த தானம்                 
 தொடர்புடையவை-Related Articles
இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!! இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!
கருத்துகள்
19-Dec-2019 03:45:39 RaghuRaman said : Report Abuse
குட் நியூஸ் நண்பா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.