LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!!

தாலி - நம் குடும்ப வாழ்வியலின் ஆதாரம். திருமணம் ஒரு ஆண், பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாற்பரியங்களைக் குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.

இவற்றைக் கட்டிய ஆணும், கட்ட்ப்பெற்ற பெண்ணும் வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி, புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

by Swathi   on 27 Feb 2015  1 Comments
Tags: திருமணம்   மாங்கல்யம்   விவாகம்   மணப்பெண்   தாலியின் மகத்துவங்கள்   Mangalyam   Thirumanam  
 தொடர்புடையவை-Related Articles
உன் தாலி........! உன் தாலி........!
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-13-11-2015
ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015 ஜோதிட இமயம் அபிராமி சேகர்: ஜோதிடம்-கேள்வி-பதில்-06-11-2015
விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!! விவாகத்தின் போது மணப்பெண்ணிற்குக் கட்டப்படும் தாலி-யின் மகத்துவங்கள்..!!
திருமணம் என்பது சிக்கலா? திருமணம் என்பது சிக்கலா?
கருத்துகள்
21-Jun-2015 05:10:33 ந . ஜெயபாலன், said : Report Abuse
இன்று அறுப்பு போராட்டங்களும்,ஆதரவு போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கும்போது, மங்கள நாணைப் பற்றியும், அதன் உருவாக்கங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள உதவும் அருமையான கட்டுரை இது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.