LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)

மேஷம் (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் உங்கள் மனதில் எழும் புதுப்புது ஆலோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, உங்களின் எதிர்பார்ப்பை விட அதிக அளவுக்கான இலாபங்களை அள்ளித் தரும். தொலைதூரப் பயணங்களால் வியாபாரத்தில் நன்மை ஏற்படும். உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீர்கள். மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது நல்லது. எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். வியாபாரம் அமோகமாக இருக்கும்.
பரணி
இந்த வாரம் உறவுகளைச் சந்திப்பதனால்  மனமகிழ்ச்சி  ஏற்படும். படுக்கை அறை சுகங்கள் மற்றும் நல்ல, ருசியான உணவு  ஆகியவையும் கிடைக்கும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். தொழிலில் வரும் இடையூறுகளைத் தவிர்க்கப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். நிறுவன வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து செயல்பட்டால் வியாபாரம் பெருகும்.   புதிய திட்டங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழிலில் முன்னேற்றம் காண முயல்வீர்கள்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் தனவரவு எதிர்பார்ப்புக்கு மேல் அதிகரிக்கும். தாராளமாகச் செலவும் செய்து மகிழ்வீர்கள். புதிய வீடு, பூமி வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும்.  விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். வியாபாரத்திலும் அதிக இலாபங்களை எதிர்பார்க்கலாம்.  

ரிஷபம் (கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பாராத தனவரவால் ஏற்றம் காண்பீர்கள்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். புனித யாத்திரைகள் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும். நண்பர்களை சமாளிக்க, சரிக்கட்ட சாதுர்யமும், சாமர்த்தியமும் தேவைப்படும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும்.
ரோகிணி
இந்த வாரம் அழகுப் பெண்களின் சிநேகமும், அழகான தனிவீடும் அமையும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். தொழிலில்  இலாபத்தை அதிகரிக்கப் புதிய தயாரிப்பு யுக்திகளைக் கையாள்வீர்கள்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். புதிய தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். எதிர்பாராத தனவரவால் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். தொழிலில் உற்பத்தித் திறன் அதிகரித்து முன்னேற்றம்   ஏற்படும். தொழிலாளர்களும் ஒத்துழைப்புத் தருவர்.

மிதுனம் (மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக  இருக்கும். ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும்.  கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். உங்களின் தெய்வீக சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும்.  அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும்.  
திருவாதிரை
இந்த வாரம் மனதுக்குப் பிரியமான மங்கையுடன் ஏற்படும் இனிய சுற்றுலாப் பயணங்களால் இன்புறுவீர்கள். புதிய நண்பர்களால் பல நன்மைகள்  ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள். உடன் பிறப்புக்களுடன் சுமுகமாகச் செல்வது நல்லது. மாணவர்களுக்குக் கவனச் சிதறல்கள் காரணமாகப் படிப்பில் ஆர்வம் குறையலாம்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவு ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கு நன்மை ஏற்படும்.  தொலை தூரப்பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும்.  வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். அரசு அதிகாரிகளால் சிலருக்குத் இடையூறுகள் ஏற்படலாம்.  வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஆயினும், பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.

கடகம் (புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் தனவரவுக்கான வழிகள் தாராளமாய்த் திறந்திருக்கும். தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் ஏற்படும், கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும்.  புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். அரசுப் பணியில் தங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்.
பூசம்
இந்த வாரம் வருமான வாய்ப்புகள் பெருகும். பழைய கடன்கள் சுலபமாக வசூலாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் ஏற்பட்டாலும், தந்தைவழி உறவுகளால் தேவையற்ற தொல்லைகள் ஏற்படலாம். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்வு தரும்.  அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம்.
ஆயில்யம்
இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். புனிதப் பயணங்கள் புத்துயிர் அளிக்கும். கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும்.

சிம்மம் (மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் புதிய முயற்சிகளால் ஓரளவு பண வருமானம் அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும். மனதுக்கு விருப்பப்படி அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல் வாங்கல் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் இலாபம் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் நல்ல ஆதாயத்தைத் தரும்.
பூரம்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும் இனிய பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். ஆன்மிகத்தால் முன்னேற்றம்  உண்டு. உயர்வும் உண்டு. நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூல பலன்கள் உண்டு. உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும்.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வலுவான உயர் அதிகாரிகளின் உதவியால் நினைத்ததைச் சாதித்துக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். இனிய பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனைவி, மக்களின் உடல் நிலையால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும்.

கன்னி (உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.  மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்ச்சி ஏற்படுவதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில், பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஹஸ்தம்
இந்த வாரம் புதிய வீடு மனை வாங்கும் முயற்சிகள் வெற்றி பெரும். வீட்டில் திருமணம் சம்பந்தமான பேச்சுக்களால் மகிழ்ச்சி நிலவும். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்.  அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சில அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். துன்பம் வரும் போது அன்புக்கு இனியவர்களால் உங்கள் கண்ணீர் துளிகள் துடைக்கப்படலாம். கவலையை விடுங்கள்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். புனித யாத்திரைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள். புதிய கொள்முதல் மூலமாகத் தொழிலில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். இலாபமும் அதிகரிக்கும், மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பயன்களை அடைவீர்கள்.

துலாம் (சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், பெண்களால் இலாபம், ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். வியாபாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வியாபார விருத்தி ஏற்படும்.  வியாபார விஷயமான திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். அரசுப் பணிபுரிபவர்களுக்கு புதிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். சுறுசுறுப்பாக பணிகளை ஆற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.
சுவாதி
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். சிலருக்குப் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை முன்னேற்றமான காலமாக இருக்கும். மகிழ்ச்சி பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன் நன்கு படித்தபின் கையொப்பம் இடவும். தொழில் துறையில் விரிவாக்கத் திட்டங்களால்  இலாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். அரசுக் கடன்களும் தடையின்றிக் கிடைக்கும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சியும், அதிக இலாபமும் ஏற்படும். மனைவியின் உடல்நிலை உங்களுக்குக் கவலையைத் தரலாம், எனவே, ஆறுதலாக, உங்கள் அன்பைப் பொழிந்தால், அவள் விரைவில் குணமடைந்து எழ ஓர் உந்துதலைத் தரும்.

விருச்சிகம் (விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் அனைத்து வகையிலும் உங்கள் பொருளாதார நிலை திருப்திகரமானதாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான நல்ல பலன்களைத் எதிர்பார்க்கலாம் அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த காரிய அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும்.
அனுஷம்
இந்த வாரம் பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். உங்களுக்கு ஓரளவே பணவரவு இருக்கும். காரியங்களைத் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்.
கேட்டை
இந்த வாரம் குடும்ப வாழ்க்கை சீரான சாலையில் செல்லும் சொகுசு வாகனம் போல் இனிதாகச் செல்லும். உங்களுக்கு மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம், சுகம் ஆகியவை ஏற்படும். கடின உழைப்பும், கடமை உணர்வுமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  பணப் பெட்டியும் பணத்தால் நிரம்பும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு (மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்
இந்த வாரம் விரும்பிய பொருட்களை எல்லாம் வீட்டில் வாங்கிக் குவிப்பீர்கள். உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். தொழில் முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு உழைத்தால்தான்  அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். ஆராய்ந்து பங்குச் சந்தைகளில் ஈடுபட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
பூராடம்
இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான  வசதி வாய்ப்புகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். இலாபமும் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அன்பும், நட்பும் கிடைக்கும். அதனால், நீங்கள் எதிர்பார்த்த உயர்வும் கிடைக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். புதிய வாகன வசதிகள் மேம்படும். கௌரவம், அந்தஸ்து உயரும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குழந்தை பாக்கியம் ஏற்படும். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள்.

மகரம் (உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக வரவுக்கு மிஞ்சிய   பணச் செலவுகள் ஏற்படும். பிள்ளைப் பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.
திருவோணம்
இந்த வாரம் நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். நினைத்த காரியங்கள் நடக்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீர்கள். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித்திறன் குறையும் வாய்ப்பு ஏற்படலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நோய் நொடிகள் நீங்கி நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர்.

கும்பம் (அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.   உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்குத் தற்போது இருக்கும் வேலையை விட நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
சதயம்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு பகை ஏற்படும். எனவே,  எதிரிகளிடம் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும். வரும் பணத்தைச் சேமித்து வைப்பது நல்லது.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சி மற்றும் மனஅமைதி ஏற்படும். மதிப்பு, கௌரவம் உயரும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பால் இலாபம் அதிகரிக்கும். புதிய திட்டங்களால் தொழிலில் விருத்தி ஏற்படும். பக்தி மார்க்க ஈடுபாடு அதிகரிக்க, கோவில்களுக்குச் சென்று மகிழ்வீர்கள்.
உத்திரட்டாதி
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஏனோதானோ என்றில்லாமல் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.
ரேவதி
இந்த வாரம் பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கையில் சுகமான அனுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். புதிய திட்டங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் காண முயல்வீர்கள். வெற்றியும் உங்கள் வாசற்கதவைத் தட்டும்.

by Swathi   on 13 Jan 2018  1 Comments
Tags: Natchathira Palangal   Tamil Natchathira Palangal   Weekly Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்           
 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
19-Jan-2018 22:21:52 RAMON ROCHAMBEAU said : Report Abuse
THE 28TH FEBRUARY 2018THE PLANET GEANT JUPITOR IS GOING TO CHANGE HIS POSITION IN ZODIAC AT COSMOS SCORPION GIVES LOTS OF CHANGES IN ALL OFOUR LIFE IN தி WORLD DEFINITELY CHANGE OF LIFE GETTING NEW JOBS அண்ட் MONEY ROTATIONS பிசினஸ், MONEY COMING EASILY IN YOUR LIFE ALL THE MOUVEMENTS CHANGES VERY POSITIVE IN ALL OUR LIFE TO GET MORE HAPPY PLEASE WAIT AND SEE THE RESULT OF THE CHANGE OF MAJOR JUPITOR PLANET RAMON ROCHAMBEAU PARIS THE EVERY ASPECT OF JUPITOR IS ALWAYS GOOD
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.