LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி !!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

 

இதில் முதல் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் (127), அஷ்வின் (92) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

 

மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில், பெஸ்ட் வேகத்தில் பவுண்டரி அடித்து அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 177 ரன்னில் அவுட் ஆகி, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 453 ரன் எடுத்தது. 219 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 168 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் முகம்மது சமி 5, அஸ்வின் 3, புவனேஸ்வர்குமார் 1 விக்கட்டுகளை கைப்பற்றினர். ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

by Swathi   on 08 Nov 2013  0 Comments
Tags: Kolkata Test   India Vs West Indies   51 Runs   டெஸ்ட் போட்டி   கொல்கத்தா டெஸ்ட்        
 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.