LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

அமெரிக்காவைவிட இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறிவருகிறது ! சொல்கிறார் ஒபமா !

அமெரிக்காவை விட இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் வேகமாக முன்னேறி வருவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். 


இது பற்றி அமெரிக்காவின் சட்டனூக நகரில் அவர் பேசியதாவது, நாம் பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், முதலீடுகளையும் பெருக்க வேண்டிய நேரம் இது, ஏனெனில் இந்தியா, ஜெர்மனி, சீனா போன்ற 
நாடுகள் நம்மை விட வேகமாக முன்னேறி வருகிறது. நம்நாட்டில் வசிக்கும் நடுத்தர வகுப்பினருக்கு, நல்ல சம்பளத்துடன் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் எதிர்கால வளர்ச்சிக்கு வழி செய்ய முடியும்.அமெரிக்காவில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து பார்த்தால், இப்போதுதான் முதல் முறையாக உற்பத்தி சார்ந்த வேலைகள் குறையவில்லை. அவை அதிகரித்து வருகின்றன. வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு அரசு அமைப்புகளை இணைக்கக் கூடிய 45 உற்பத்தி மற்றும் புத்தாக்க நிறுவனங்களை நாடாளுமன்றம் சட்டமியற்றி உருவாக்க வேண்டும். புதுமையான எரிசக்தி ஆதாரங்களை கண்டுபிடிக்கவும், மின்சார சக்தியில் இயங்கும் வாகனங்கள் ஆகியவற்றை இரட்டிப்பாக்கவும், எண்ணெய் 
இல்லாமல் வாகனங்களை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிக்கு பணம் செலவழிக்கவும் வேண்டிய நேரம் இது. நாம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யதால் தான் நம்நாட்டின் பொருளாதாரம் வலுவடையும் என ஒபாமா உரையாற்றினார்.  

by Swathi   on 31 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.