LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினம் - அமெரிக்கா, ரஷ்யா வாழ்த்து

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் 
"சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது.
நம் இரு நாடுகளும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்குப் பொதுவான தொலைநோக்குடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு எனப் பல துறைகளில் பரவியுள்ளது.
இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீனச் சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்..." என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.
இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்யத் தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் "ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது.
இந்​திய - ரஷ்ய உறவு மிக​வும் சிறப்​பானது, முன்​னுரிமையை அடிப்​படை​யாக கொண்​டது, பாது​காப்​புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மேலும், ரஷ்​யா​வின் நம்​பிக்​கைக்கு உரிய நட்பு நாடாக இந்​தியா உள்​ளது என்று புதின் கூறி​யிருக்​கிறார்.
சமூக பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களில் இந்​தியா அங்​கீகரிக்​கப்​பட்ட வெற்​றியை பெற்றுள்ளது. உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு மிகுந்த மரி​யாதை உள்​ளது. அத்​துடன் உலகள​வில் மிக முக்​கிய​மான விவ​காரங்​களில் இந்​தியா தனது பங்​களிப்பை வழங்கி வரு​கிறது என்று புதின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். மேலும் இரு நாடு​களின் கூட்டு முயற்சியால் ஒத்​துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்​து​வோம்..."  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியாவுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் "சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்திய மக்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்று உறவு முக்கியமானது.

நம் இரு நாடுகளும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் பாதுகாப்புக்குப் பொதுவான தொலைநோக்குடன் ஒன்றிணைந்துள்ளோம். நம் உறவு தொழில்துறை, புதுமையான கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் விண்வெளி ஆய்வு எனப் பல துறைகளில் பரவியுள்ளது.

இணைந்து செயல்படுவதன் மூலம், அமெரிக்காவும் இந்தியாவும் இன்றைய நவீனச் சவால்களை எதிர்கொண்டு, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்..." என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு மற்​றும் பிரதமர் மோடிக்​கு, ரஷ்ய அதிபர் புதினும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள ரஷ்யத் தூதரகம் நேற்று வெளி​யிட்ட அதி​காரப்​பூர்வ அறிக்​கை​யில் "ரஷ்ய அதிபர் புதின் இந்​திய சுதந்​திர தின வாழ்த்​துகளை அனுப்பி உள்​ளார். அதில், குடியரசுத் தலை​வர் முர்​மு, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்​துள்​ளார். இந்​தியா தகு​தி​வாய்ந்த மரி​யாதைக்​குரிய நாடாக விளங்​கு​கிறது.

இந்​திய - ரஷ்ய உறவு மிக​வும் சிறப்​பானது, முன்​னுரிமையை அடிப்​படை​யாக கொண்​டது, பாது​காப்​புத் துறை இணைந்து செயல்பட கூடியது என்று புதின் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மேலும், ரஷ்​யா​வின் நம்​பிக்​கைக்கு உரிய நட்பு நாடாக இந்​தியா உள்​ளது என்று புதின் கூறி​யிருக்​கிறார்.

சமூக பொருளா​தா​ரம், அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் இதர துறை​களில் இந்​தியா அங்​கீகரிக்​கப்​பட்ட வெற்​றியை பெற்றுள்ளது. உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு மிகுந்த மரி​யாதை உள்​ளது. அத்​துடன் உலகள​வில் மிக முக்​கிய​மான விவ​காரங்​களில் இந்​தியா தனது பங்​களிப்பை வழங்கி வரு​கிறது என்று புதின் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். மேலும் இரு நாடு​களின் கூட்டு முயற்சியால் ஒத்​துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்​து​வோம்..."  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

by hemavathi   on 15 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.