நாடு முழுவதும் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வரும் ஜூனில் 243(24.3 கோடி) மில்லியனாக அதிகரிக்கும் என இண்டெர் நெட் அண்டு மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி விகிதமானது, ஆண்டு ஒன்றிற்கு 28 சதவீதம் என்ற அளவில் காணப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2007-ல் டிஜிட்டல் வர்த்தக சந்தையில் சுமார் 8 ஆயிரத்து 146 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றதாகவும் ,அவை 2012-ல் 47 ஆயிரத்து 349 கோடியாகவும், 2013 டிசம்பர் இறுதி வரையில் 62 ஆயிரத்து 967 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக இண்டெர் நெட் அண்டு மொபைல் அசோசியேசன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
|