|
||||||||
அமெரிக்காவுடன் இந்தியா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புகிறது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் |
||||||||
![]()
அமெரிக்காவுடன் இந்தியா சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "இந்தியாவின் மிக முக்கிய மற்றும் முன்னணி வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. எனவே இந்தியா - அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வரும் 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைய நம்முடைய இலக்குகளையும், லட்சியத்தையும் கருத்தில் கொண்டு உலகின் வலுவான பொருளாதாரங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களை செய்து முடிக்கத் தீவிரம் காட்ட வேண்டும்.
அந்த வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்துதான் என்னுடையதும். அமெரிக்கா-இந்தியாவுக்கு இடையில் சிறந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். இதற்காக இந்தியா ஆழமான ஈடுபாட்டை கொண்டிருந்தாலும் முக்கியமான துறைகளில் சமரசம் செய்யாது. குறிப்பாக, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் உட்பட உள்நாட்டு நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்" என்றார்.
|
||||||||
by hemavathi on 30 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|