LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

சூதாட்ட புகார் எதிரொலி - இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு !

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இங்கிலாந்தில் அடுத்த மாதம் 6 ந்தேதி தொடங்க உள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் கடுமையான கட்டுபாட்டுகளை விதித்துள்ளது. அதன் படி கடந்த 2011 ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றபோது மேலாளராக பணிபுரிந்த ரஞ்சிப் பிஸ்வால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றரை ஆண்டுகள் மேலாளர் பதவியில் இருந்த இவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், உள்ளதை உள்ளபடி அப்படியே அறிக்கையாக 
கொடுத்துவிடும் துணிச்சல் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீரர்கள் இரவு பார்ட்டிகளுக்கு செல்ல தடை, நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.முன் அனுமதி இன்றி தங்கியிருக்கும் ஓட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது. யாரிடம் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. வீரர்களின் மொபைல் எண்கள் முழுவதும் கண்காணிக்கப்படும். போன்ற நடைமுறைகளும் கடைபிடிக்கப்படும். இந்த விதிகள் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும், 2011ல் உலக கோப்பை வென்ற பின், யாரும் இதை ஒழுங்காக பின்பற்றவில்லை. இம்முறை, சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, பிஸ்வாலை இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

by Swathi   on 30 May 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத் காயங்களே என்னை வலிமையானவளாக மாற்றியது - தங்க மங்கை வினேஷ் போகத்
பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு.. பிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..
காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்... காயத்தையும் பொருட்படுத்தாது தங்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்...
ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !! ஐ.சி.சி தரவரிசை பட்டியல் : 20 - 20 ல் இந்தியா முதலிடம் !! டெஸ்டில் ஆஸ்திரேலியா முதலிடம் !!
7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !! 7வது ஐபிஎல் ஏலம் : 14 கோடிக்கு விலை போன யுவராஜ் !! விலைபோகாத ஜெயவர்த்தனே !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.