|
||||||||
இந்தியர்கள் விசா விதிகளை மீறினால் நாடு கடத்தலுக்கு ஆளாக நேரிடும் - அமெரிக்கா |
||||||||
இந்தியாவிலிருந்து வந்தவர்கள் விசா விதிகளை மீறினால் நாடு கடத்தலுக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதை ஏற்க மறுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. வரி விதிப்பு விகிதத்தில் இருநாடுகள் இடையேயான கருத்து முரண் எழுந்து வரும் சூழலில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டுத் தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "உங்கள் அமெரிக்க விசாவின் விதிமுறைகளையும், இங்குத் தங்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் மதிக்க வேண்டும். சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட நாட்களுக்குப் பிறகு (மின்னணு படிவம் I-94ல் குறிப்பிட்டுள்ள படி) அமெரிக்காவில் தங்குவது விசா ரத்து, நாடு கடத்தப்படுவதற்கு வாய்ப்பு, எதிர்காலத்தில் அளிக்கப்படும் விசாக்களுக்கு தகுதியற்ற தன்மை போன்ற கடுமையான விளைவுகளுக்கு வழி வகுக்கும். அமெரிக்காவில் பயணம் செய்ய, படிக்க அல்லது பணி செய்ய இங்கு அதிகக் காலம் தங்குவது உங்கள் திறமையை நிரந்தரமாகப் பாதிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டினரின் நுழைவைக் கண்காணிக்கவும், அவர்கள் வெளியேறி விட்டனரா என்பதைக் கண்டறியவும் மின்னணு படிவம் I-94 அந்நாட்டுப் பாதுகாப்புத்துறையால் வழங்கப்படுகிறது. இந்தப் படிவத்தில் ஒரு வெளிநாட்டினர் அமெரிக்காவில் எவ்வளவு நாட்கள் வரை தங்கச் சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் புதிய திட்டத்தின்படி, சில சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக விசா விண்ணப்பதாரர்கள் அமெரிக்க விசாவிற்கு தகுதி பெற $5,000 முதல் $15,000 வரையிலான பத்திரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
|
||||||||
| by hemavathi on 12 Aug 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|