LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக நவீன ரயில் பெட்டிகள்!

இந்தியாவின் அதிவேக, நவீன ரயிலின் பெட்டிகள் சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த மாடர்ன் ரயிலுக்கு ''டிரெய்ன் 18'' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம்  தொடங்கியது.

இந்தியாவின் அதிவேக ரயிலாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது. கடந்த 30 வருடமாக இந்த ரயில் ஓடிக் கொண்டுள்ளது. இந்த சாதனையை தற்போதைய புதிய ரயில் முறியடிக்க உள்ளது.

இந்த ரயில் மணிக்கு 150-160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்தியாவில் இதற்கு முன் இவ்வளவு வேகத்தில் செல்லும் ரயில் உருவாக்கப்பட்டதே இல்லை. இது சென்னையில் உருவாக்கப்பட்டு இருப்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

இந்த ''டிரைன் 18'' முழுக்க முழுக்க ஏ/சி வசதி கொண்டது. அதேபோல் இதில் அனைத்து பெட்டிகளிலும் இலவச அதிவேக வைபை வசதி உள்ளது. அதிநவீன டாய்லெட் வசதி உள்ளது. தானாகத் திறக்கும் கதவுகள் உள்ளது. வெளிநாடுகளில் உள்ளது போல் ஜன்னல்கள் முழுக்க முழுக்க கண்ணாடியால் உருவாக்கப்பட்டு உள்ளது.

 மெட்ரோவில் இருப்பது போலவே இதன் உட்பக்கம் ஒளிவிளக்குகள் இருக்கும். ஏசியும் கூட அதேபோல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருக்கும் ஜிபிஎஸ் காரணமாக பயணிகள் தாங்கள் இருக்கும் இடத்தை எளிதாக அடையாளம் காண முடியும். அனைத்து சீட்டிற்கும் அடியில் சார்ஜிங் பாயிண்ட் இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் இன்ஜின் இல்லை என்பதுதான். மின்சாரத்தின்  மூலம் இயங்கும் இந்த ரயில் மெட்ரோ ரயில் போலவேதான் செயல்படும். இந்தியாவின் முதல் செல்ப் புரோபல்ட் ரயில் இதுவாகும். அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமிரா உள்ளது.

மொத்தம் 16 பெட்டிகள் உள்ளது. நடுவில் 2 பெட்டிகள் சிறப்பு இருக்கை உள்ள பெட்டிகள். மீதமுள்ள 14 பெட்டிகள் ஜெனரல் வகுப்பு பெட்டிகள் ஆகும். ஆனால் இவை அனைத்து மிக அதி நவீனமாக இருக்கும். சிறப்பு இருக்கை பெட்டியில் 56 இருக்கைகள் உள்ளது.  ஜெனரல் வகுப்பில் 78 இருக்கைகள் உள்ளது.

இதில் இருக்கும் தானியங்கி கதவுகள் நாம் உள்ளே சென்றால்தான் மூடும். கதவு மூடிய பின் மட்டுமே வண்டி நகரும். மெட்ரோ போலவே செயல்படும். அதேபோல் இதில் பொருட்களை வைத்துக் கொள்ளவும், எடையை ஏற்றவும் தனி பகுதி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதை உருவாக்க 100 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. இது பிரான்ஸ் மற்றும் சீனா, மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பம் கலந்து உருவாக்கப்பட்டது ஆகும்.  சென்னையில் அடுத்த சில நாட்கள் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது.

by Mani Bharathi   on 29 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.