|
||||||||
இனி அவளுக்கு எழுதப்போவது |
||||||||
அநேகமாய்
ஒவ்வொரு நாளும் துக்கம்.
தீன் பொறுத்த கோழி மாதிரி
விக்கும் அளவுக்கு
எறிந்துவிட்டேன் சிரிப்பை;
போய், ரோஜாப் பூவாய் மலர்க
அல்லது
மல்லிகையில் கன்னிகட்டு என்று.
நான்
கண்ணவிந்த குரங்கு.
சிரிப்பை எறியாமல் பிறகென்ன செய்வேன்?
கனவில்கூட அநீதியும் பயங்கரமும்
வாற்பூட்டி
என்னை வதைப்பதனால்.
தானாக எனது முகம்
'ஐஸ்' அடித்த மீன் சதையைப்போல
விறைத்து
உதடு பிரியுதில்லை.
என் சிரிப்பை அவள்
இடைக்கிடை கேட்டுக் கடிதம் எழுதுவாள்.
வெள்ளியைப் பார்த்துத் திருப்தியுறு.
முடிந்தால்,
வெங்காயத் தொலிகளைப் போட்டாவது
பழைய காற்றுகளை வாசலுக்கு கூட்டிக்
காது கொடு,
நான் வரவில்லை.
வேண்டுமென்றால் என் முப்பத்திரெண்டு பற்களையும்
முரசுகளையும்
அனுப்புகிறேன் என்று.
அநேகமாய் ஒவ்வொரு நாளும் துக்கம். தீன் பொறுத்த கோழி மாதிரி விக்கும் அளவுக்கு
எறிந்துவிட்டேன் சிரிப்பை; போய், ரோஜாப் பூவாய் மலர்க அல்லது மல்லிகையில் கன்னிகட்டு என்று.
நான் கண்ணவிந்த குரங்கு. சிரிப்பை எறியாமல் பிறகென்ன செய்வேன்? கனவில்கூட அநீதியும் பயங்கரமும் வாற்பூட்டி என்னை வதைப்பதனால்.
தானாக எனது முகம் 'ஐஸ்' அடித்த மீன் சதையைப்போல விறைத்து உதடு பிரியுதில்லை.
என் சிரிப்பை அவள் இடைக்கிடை கேட்டுக் கடிதம் எழுதுவாள். வெள்ளியைப் பார்த்துத் திருப்தியுறு. முடிந்தால், வெங்காயத் தொலிகளைப் போட்டாவது பழைய காற்றுகளை வாசலுக்கு கூட்டிக் காது கொடு, நான் வரவில்லை. வேண்டுமென்றால் என் முப்பத்திரெண்டு பற்களையும் முரசுகளையும் அனுப்புகிறேன் என்று.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|