LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

இனிப்பு சோமாஸ்

தேவையானவை :


மைதா - அரை கிலோ

ரவை - அரை கிலோ

நிலக்கடலை - 100 கிராம்

எண்ணெய் - அரை லிட்டர்

பொட்டுக்கடலை - 100 கிராம்

வெல்லம் - கால் கிலோ 

ஏலக்காய் - 5 (பொடி செய்தது)


செய்முறை :


1.பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.


2.வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.


3.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார்.


4.அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.


5.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்


6.சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து தேய்த்து நடுவில் 1 - 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும்.


7.சோமாஸ் செய்வதற்கான அச்சை பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். 


8.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் வெட்டி  வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சுவைத்து  மகிழவும்.

by Arul Jothi   on 18 May 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா சர்க்கரைவள்ளி கிழங்கு அல்வா
நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai) நெய் உருண்டை - Nei_Urundai (Paasiparuppu Urundai)
ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie ஆரோக்கிய கோகோ கேக் -Healthy Cocoa Brownie
கேரட் லஸ்ஸி கேரட் லஸ்ஸி
முக்கனிப் பழக்கலவை முக்கனிப் பழக்கலவை
தினை கதம்ப இனிப்பு தினை கதம்ப இனிப்பு
மாம்பழ ரப்ரி மாம்பழ ரப்ரி
வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி வேர்க்கடலை வெண்ணெய் ஸ்மூத்தி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.