LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இன்ஸ்பிரேஷன் (Inspiration )

தொடர்:இன்ஸ்பிரேஷன்-4

காமராஜ் 


     கல்வி, அந்த நாட்களில் மேல்தட்டு வகுப்பினருக்கும் உயர் ஜாதியினத்தவருக்கும் உரியதாக இருந்தது. அவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழ்நிலை இருந்து வந்தது. கல்விச்சாலைகளும் குறைவாகவே இருந்தது. வக்கீலுக்கு படிக்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையும் இருந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை நடுத்தர மக்கள் கூட உணர முடியவில்லை. காரணம் கல்விக்கு அதிக அளவில் பணம் செலவு செய்ய வேண்டும். இந்த நிலைய மாற்ற வந்தார் காமராஜ்.

  கல்விக் கட்டணத்தை மெல்ல மெல்ல தளர்த்தினார். ஆனால் என்ன செய்ய மாணவர்கள் படிக்க வரவில்லை. காரணம் ஏழ்மை. வாழ்க்கையை ஏழ்மையை சீரழித்துக் கொண்டிருந்தது. இப்படியே போனால் என்னாவது என்று சிந்தித்தார் காமராஜ். கல்விக் கட்டணைத்தை குறைத்தால் கூட படிக்கமுடியாத அளவு வாழ்க்கை தரம் இருந்தது. ஆனால் அவர்கள் படித்துவிட்டால் அவர்களது வாழ்க்கை தரம் மட்டுமல்ல. நாடும் முன்னேறும் என்று கனவு கண்டார் காமராஜ்.
  ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்தார் காமராஜ். அப்போது ஒரு முதியவரும் இரண்டு சிறுவர்களும் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். காரை நிறுத்தி அவர்கள் அருகில் சென்றார். அந்த சிறுவர்களைப் பார்த்து   ‘‘ ஏம்பா பள்ளிக்கூடம் போகலையா?’’ என்று கேட்டார்.


அந்த சிறுவர்களின் முகம் வாடியிருந்தது. கண்கள் ஒளியிழந்திருந்தது.
பள்ளிக்கூடம் சென்றால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற அவர்களின் நிலை காமராஜை மிகவும் பாதித்தது. எப்படியாவது அந்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் கரங்களில் தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார்.

அதற்காக ஒரு திட்டம் வகுத்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார். அதனால் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கல்வியின் அவசியத்தை உணர்ந்தனர். எப்படியாவது குழந்தைகளை படிக்கவைத்துவிட வேண்டும் என்ற தூண்டுகோல் தமிழகைத்தையே மாற்றியது. கல்வி புரட்சி ஏற்பட்டது. குப்பனும் சுப்பனும் கூட கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்தது, காமராஜரின் தனி மனித தூண்டுகோல் சமுதாயத்தையே மாற்றிவிட்டது.

ஹியூமர் இன்ஸ்பிரேஷன் 

  இதுவரை நாம் சமுதாயத்தையும் உலகத்தையும் மாற்றிய தூண்டுகோல்களைப் பார்த்தோம் அல்லவா. நாம் இந்த முறை சார்லி சாப்ளினின் இன்ஸ்பிரேஷனைப் பார்ப்போம். நாம் அவசர அவசரமாக சாலையைக் கடக்கையில் சாலை ஓரம் அமர்ந்திருக்கும் செருப்பு கடைக்காரன் நமது காலணிகளையே பார்ப்பான். காரணம் அவனது தொழில் அதுபோல் தான் சார்லி சாப்ளின் ஹிட்லரின் செயல் பாடுகளை காமெடியாக உணர்ந்தார்.

 ஆயிரம் கோடிப்பேர் இறப்புக்கு காரணமாகவும் இரண்டாம் உலகப்போர் உருவாக தூண்டுகோலாகவும் இருந்தவர் அல்டாஃப் ஹிட்லர்.  யூதர்களை இனத்துரோகிகளாக கருதிய ஹிட்லர். அவர்களைக் கொல்வதற்காகவே மரண தொழிற்சாலை அமைத்தார். யூதர்களைக் கொன்று புதை குழியில் போட்டு மூடினார். கொல்லப்படும் யூதர்களை கணக்கு வைத்துக் கொள்வதற்காகவே நாஜிப் படையினர் இடையில் ஒரு தனிப் பிரிவினை ஏற்படுத்தினார். துப்பாகிச் சுடும் பயிற்சிக்காக யூதர்களை ஒரு பொம்மையைப் போல பயன்படுத்தினார் ஹிட்லர். அத்தகைய கொடுங்கோலாட்சி செய்தவர் ஹிட்லர். அவரது பெயரைக் கேட்டாளே குலை நடுங்கும். இன்றைக்குக் ஏதாவது அராஜகத்தை நேரில் பார்த்தால் ஹிட்லர் தான் நினைவுக்கு வருவார். பல கொடுங்கோல் ஆட்சிகளுக்கு அடிப்படை ஹிட்லர். ஹிட்லரை நினைத்தாலே வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும் ஆனால் ஒரு சார்லி சாப்ளினுக்கு நகைச்சுவையாக தோன்றியது. ஹிட்லரின் வீரம் அந்த நடிகருக்கு இதைப் போன்ற ஒரு நகைச்சுவை உலகத்தில் இல்லை என்பதைப் போல் தோன்றியது.


   ஹிட்லரின் நடவடிக்கை சார்லி சாப்ளினுக்கு நகைச்சுவை இன்ஸ்பிரேஷனை ஏற்படுத்தியது. ‘தி கிரேட் டிக்டேட்டர்’ என்ற படத்தை உருவாக்கினார்.  ஹிட்லரை கேலி செய்தார். அந்த படம் சார்லி சாப்ளினுக்கு மிகப்பெரிய பேர் வாங்கித் தந்தது. அதுவரை ஹிட்லரை ஒரு கொடுங்கோலன் பய உணர்வுடன் பார்த்தவர்களை சார்லி சாப்ளின் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். இந்த தூண்டுகோல் அப்படி ஒன்று இந்த சமூகத்தை மாற்றவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த தூண்டுகோல் மக்கள் மனதில் இருந்த பய உணர்வினைப் போக்கி, மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. சார்லிசாப்ளினின் துணிச்சலை வியந்து பாராட்டியிருக்கிறது. ஒரு நகைச்சுவை கலைஞனுக்கு சமூக சிந்தனை இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார் சார்லி சாப்ளின். 

 

_   சூர்யா சரவணன்   

-முற்றும் 

by Swathi   on 30 Aug 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
12-Dec-2013 00:34:36 கார்த்திக் said : Report Abuse
நல்ல கட்டுரை ..... வாழ்த்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.