|
||||||||
பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 13 நாடுகளில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டிய திருக்குறள் கோரிக்கையை முன்வைத்தோம். |
||||||||
பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் சிகாகோ தமிழ் மொழி அறக்கட்டளைக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் அரங்கப்பகுதியில் ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தார்கள். அதில் திருக்குறள் நூல்கள், மொழிபெயர்ப்புகள் மட்டுமே வைக்கமுடிந்தது. இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வெளிநாட்டுத் தரத்தில் மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்டிருந்தது. கலந்துகொள்ளும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத விவரங்களைத் தொகுத்து வழங்கி மொழிபெயர்க்க ஊக்கப்படுத்தவேண்டும் என்ற நிலையில் திருக்குறள் நூல்களைத் , மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து அச்சில் இல்லாததை அச்சில் கொண்டுவர, உருவாக்கப்பட்டுள்ள வலைத்தமிழ் பதிப்பகம், உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக்குழு சார்பில் கலந்துகொண்டேன்.
"திருக்குறள் 2030" திட்டத்தில் இதுவரை வெளிவந்துள்ள 60 மொழிபெயர்ப்புகள் விவரங்களையும் 345 முறை மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளின் விவரங்களையும்,இன்னும் மொழிபெயர்க்கப்படவேண்டிய 127 மொழிகளின் தகவலோடு முழு புள்ளிவிவரங்களுடன் பங்கேற்றேன்.
திருக்குறள் மொழிபெயர்ப்புக்கென தனி ஒருவரை அரசு நியமித்திருந்தது. அவருடன் உரையாடி,இதில் கலந்துகொன்டுள்ள 60 நாடுகளில் வாய்ப்புள்ள அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்க கோரிக்கை வைத்தோம். தகவலை முழுமையாகத் திரட்டி கொண்டுவாருங்கள் என்றார்கள். உடன் இருவரை நியமித்து 60 நாடுகளில் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. இன்னும் 13 நாடுகளில் 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நாடுகள்-மொழிகள் தரவுகளைத் திரட்டி அச்செடுத்து கோரிக்கையாக கண்காட்சி ஒருங்கிணைப்பு செய்யும் முனைவர். சங்கர சரவணன், இணை இயக்குநர் அவர்களிடம் வழங்கினேன்.
உடன் அதற்கு உரிய செலவை தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத் துறை ஏற்கும் என்று கூறி, உரிய ஏற்பாடு செய்து அனைத்து நாடுகளின் பதிப்பகங்களுடன் பேசி அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்புகளை செய்ய, திருக்குறள் மொழிபெயர்ப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்பாளரிடம் அறிவுறுத்தினார். தானும் இதை இரவு நடக்கும் பங்கேற்பாளர்கள் கூட்டத்தில் வலியுருத்திப் பேசுகிறேன் என்று நம்பிக்கையளித்தார்.
இது தன்னார்வப் பணி, குழுவின் ஒரு முழுநாள் நேரத்தை எடுத்துக்கொண்டது. ஆனால் 28 புதிய மொழிகளில் 13 நாடுகளில் அய்யன் திருவள்ளுவனின் கருத்துகள் பரவினால் அது நாம் இந்த மொழிக்கு செய்யும் பங்களிப்பு என்ற வகையில் நிறைவுடன் வலைத்தமிழ் குழு களத்தில் நின்று இதை செய்துமுடித்து இரவு திரும்பினோம்.
இச்சந்திப்பில் பல எழுத்தாளர்கள் , ஆளுமைகள், மொழிபெயர்ப்பாளர்கள் , நியூயார்க்கில் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த திரு.ஜான் பேர்க்கீஸ், அராபியில் மொழிபெயர்த்த முனைவர்.ஜாகிர் ஹூசேன் என பலரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
-வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
| by Swathi on 18 Feb 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|