LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வாசிங்டன் டி.சி. பகுதியில் பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு!

ஆகஸ்ட் 26‍-ஆம் நாள் சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது!  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை முறையாக மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து ஒரு பன்னாட்டு விழா நடைபெற்றது! காலை 9 மணிக்கு,  தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கியது விழா.  அடுத்து குத்து விளக்கு ஏற்றுதலை திருமதி கீதா பிரபாகரன்,  திருமதி ஜெயந்தி சங்கர், திருமதி கல்பனா மெய்யப்பன், நளினி முத்துவேல், இரமா செந்தில்முருகன் முதலியோர் முன்னின்று நடத்தினர்.  தொடர்ந்து வாசிங்டன் தமிழ்ச்சங்க இளையோர் பலர் இணைந்து 'தாய் மொழியே வணக்கம் , 'யாமறிந்த மொழிகளிலே, மற்றும் குறுந்தொகைப் பாடல்களுக்கு பரத நாட்டியம் ஆட,  விழா களை கட்டியது. மாநாட்டை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம். வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டம், மற்றம் சில தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தின.  பேரவையின் துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி ஆற்றிய துவக்க உரையில், பன்னாட்டு திருக்குறள் மாநாடு, பன்னாட்டுப் புறநானூறு மாநாடு என்ற வரிசையில் இந்த அமைப்புகள் இணைந்து நடத்தும் மூன்றாவது மாநாடு இது என்று குறிப்பிட்டார். அடுத்ததாக வரவேற்புரை நிகழ்த்தி,  விழாவுக்கு வந்த சிறப்பு விருந்தினர்களை  அறிமுகமும் செய்தார் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் இர. பிரபாகரன்.  குறுந்தொகை சார்ந்து நடத்தப்பட்ட, பாட்டு மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாடவும் பேசவும் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களுக்கு சிறப்பு விருந்தினர், திரு. கலியமூர்த்தி IPS (பணி நிறைவு) அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

 

ஆய்வு அமர்வுகள்: 

குறுந்தொகை ஆய்வு பற்றிய முதல் அமர்வில், முனைவர் மருதநாயகம்  'உளவியல் நோக்கில் குறுந்தொகைப் பாடல்களைப்' பற்றியும் முனைவர் நிர்மலா மோகன் 'குறுந்தொகையில் தோழியம்' குறித்தும், முனைவர் முருகரத்தினம் 'செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள்' பற்றியும் பேசினர். மருத்துவர் சோம. இளங்கோவன் நிகழ்ச்சியினை மட்டுறுத்தினார். 

 

இரண்டாவது அமர்வில் 'தமிழுக்குப் பெருமை சேர்ப்பதில் விஞ்சி நிற்பது: சங்க இலக்கிய அகப் பாடல்களா?  புறப்பாடல்களா?' என்ற பட்டிமன்றம் பேராசிரியர் மோகன் தலைமையில் சிறப்பாக‌  நடைபெற்றது.  திரு. மயிலாடுதுறை சிவாவும், திருமதி நிர்மலா மோகனும் அணித்தலைவர்களாக இருந்து சிறப்பித்ததனர்.

 

சுவையான மத்திய உணவுக்குப் பிறகு, முனைவர் R.C. சரவணபவன் தலைமையில் நடைபெற்ற மூன்றாவது அமர்வில்,  திரு. பாபு விநாயகம் குறுந்தொகைப் பாடல்களை இசையாக வழங்க,  திரு, பன்னீர்செல்வம், திரு. மகேந்திரன் பெரியசாமி ஆகியோர் குறுந்தொகை சார்ந்து கவிதை மழை பொழிந்தனர்.  திரு. அகத்தியன் பெனடிக்ட்,  குறுந்தொகையில்  ‘அலர்’ என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா போன்று முழங்கினார்.  திரு. மணிக்கண்டன் சங்க இலக்கியம்பற்றி ஒரு சிற்றுரை ஆற்றினார்.

 

குறுந்தொகை கண்ட தலைவனும் தலைவியும் என்ற நிகழ்ச்சியில்,   திருமதி லதா கண்ணன் குறுந்தொகைப் பாடல்களை, தமிழிசையில்  நுட்பமாகப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். 

 

நான்காவது அமர்வில் குறுந்தொகையில் கேள்வி பதில் பல்லூடக  நிகழ்ச்சி திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களின் ஒழுங்கு படுத்தலில் சுமார் 40 பேர் பங்களிப்புடன் சங்க காலத்துக்கே பார்வையாளர்களை எடுத்துச் சென்று மெய்மறக்க வைத்தது.  இந்த நிகழ்ச்சியை முனைவர் இர. பிரபாகரனின் வழிக்காட்டலில், திரு. நாஞ்சில் இ. பீற்றர் தயாரித்து வழ்ங்கினார். கூடவே மின்னசோட்டா செல்வி அத்விகா சச்சிதானந்தன் “அகம் என்ன ஆகாததா? அகன்று நிற்க!” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார்.  

 

பின்னர் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரபாகரன்  குறுந்தொகையில் உவமை நயம் என்ற தலைப்பில் ஒரு ஆய்வுரை வழங்கினார்.  

 

ஐந்தாவது அமர்வு முனைவர் அரசு செல்லையா தலைமையில்   குறுந்தொகையின் சிறப்பு பற்றி ஆய்ந்தது.  கலைமாமணி இலந்தை இராமசாமி ''குறுந்தொகையில், தோழியே ...வாழியே.." என்ற தலைப்பிலும், பேராசிரியர் மோகன் "நவில்தொறும் நயம் நல்கும் குறுந்தொகை" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினர்.

 

ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமையவேண்டும் என்பதை, செல்வி மாதவி நடனமாகவும், மருத்துவர்கள் சம்பந்தனும் ஜானகிராமனும் கருத்துக்களாகவும் பதித்தனர். 

மாநாட்டு மலரை, மலர் ஆசிரியர் திரு செந்தில் முருகன் முன்னிலையில், திரு. கலியமூர்த்தி வெளியிட்டார். முனைவர் பிரபாகரன் மற்றும் பேராசியர் மோகன் எழுதிய‌ இரண்டு குறுந்தொகை நூல்கள் வெளியிடப்பட்டன. 

 

மாலையில் விழா சிறப்பு அழைப்பாளர் திரு. கலியமூர்த்தி சங்க இலக்கியங்களை தற்காலத்துடன் இணைத்து ஓர் அருமையான சொற்பொழிவாற்றினார். பார்வையாளர்களைக் கட்டிப்போட்ட அந்த இனிய பேச்சுக்குப்பின் அனைத்து சிறப்பு விருந்தினர்களும், பட்டயம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும்  சிறப்பு செய்யப்பட்டன.  செல்வி காவ்யா சுந்தர், மற்றும் உன்னதி மேத்தா இணைந்து 'யாயும் ஞாயும் யாராகியரோ!  நறுமுகையே...! என்ற குறுந்தொகை நடனத்துடன்  தெடர்ந்து ஸ்ரேயா சகோதரிகளின் அழகே தமிழே.. என்ற பாடலுக்கு நடனமாடினர்.  கலைநிகழ்ச்சிகள் கும்மி, ஒயிலாட்டம் என்று களைகட்ட, 'காதல், பிரிதல், இணைதல்' என்ற தலைப்பில்  குறுந்தொகை மையக்  கருத்துக்களோடு சுமார் ஐம்பது பேர் கலந்துகொண்ட, அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்திய  மாபெரும் நடன நிகழ்ச்சி திருமதி புஷ்பராணி வில்லியம்ஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக நடந்தது.  பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு இரவு 8:45 மணிக்கு வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. இராசராம் சீனிவாசனின் நன்றிவுரை வழங்க, இனிதே நிறைவு பெற்றது.

 

நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து காணொளிகளையும் காண :

https://www.youtube.com/playlist?list=PL7znEdGz2G7eyVh6GtKWxjYcbUdxehxeI

by Swathi   on 30 Aug 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.