LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் பிப், 21 உலகத் தாய்மொழி தினம் சிறப்பு பல்வழி அழைப்பு கூட்டத்தை சிறப்பாக நடத்தியது ..

 

விழாவை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.இராசாராம் துவங்கிவைக்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி நெறிப்படுத்தி நடத்தினார்..
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தலைவர் திருமதி.செந்தாமரை பிரபாகர் தாய்மொழிநாள் செய்தியை குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். 
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் நன்றியுரை கூற, நிகழ்ச்சி சரியாக 90 மணித்துளிகளில் நிறைவுசெய்யப்பட்டது. 

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உலக தாய்மொழி தினத்தை கொண்டாட, சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது . பல்வழி அழைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து மொழி ஆய்வாளர் திரு.ஆழி செந்தில்நாதன், சமூக செயல்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திருமதி.அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர். மேலும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து திருமதி.மேகலா இராமமூர்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.   


அமெரிக்காவின் வாசிங்டன் பகுதியிலிருந்து தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் முனைவர் இரா.பிரபாகரன் அவர்கள் "தமிழா! நீ பேசுவது தமிழா!" என்ற தலைப்பிலும்,பேரவை  மேனாள் தலைவர் முனைவர்.முத்துவேல் செல்லையா அவர்கள் "தாய்மொழியில் பேசுவதன் தேவை என்ன?" என்ற தலைப்பிலும், முனைவர் சொர்ணம் சங்கர் அவர்கள் "தாய்மொழியும்... தமிழ் இருக்கையும் .." என்ற தலைப்பிலும், 
தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் திரு.அகத்தியன் பெனடிக்ட் அவர்கள் "தாய்மடியே! தமிழ்மொழியே!" என்ற தலைப்பிலும் ,தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் திரு.ச.பார்த்தசாரதி அவர்கள் " தாய்மொழியும்.. தொழில்நுட்ப வளர்ச்சியும்"  என்ற தலைப்பிலும், கவிஞர் திரு.மகேந்திரன் "செம்மொழி எம்மொழி .. தாய்மொழி தமிழ்மொழி " என்ற தலைப்பிலும் சிறப்பாக பேசினர்.  


விழாவை வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.இராசாராம் துவங்கிவைக்க, செயற்குழு உறுப்பினர் திரு.கொழந்தைவேல் இராமசாமி நெறிப்படுத்தி நடத்தினார்..


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தலைவர் திருமதி.செந்தாமரை பிரபாகர் தாய்மொழிநாள் செய்தியை குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையின் மேனாள் தலைவர் திரு.நாஞ்சில் பீற்றர் அவர்கள் நன்றியுரை கூற, நிகழ்ச்சி சரியாக 90 மணித்துளிகளில் நிறைவுசெய்யப்பட்டது. 

 

 காணொளித் தொகுப்பு.....

உலக தாய்மொழி தினம் சிறப்புரை - வழக்கறிஞர் திருமதி.அருள்மொழி
https://www.youtube.com/watch?v=dCbsd8OpzfY

 

திருமதி.மேகலா இராமமூர்த்தி :உலக தாய்மொழி தினம் சிறப்புரை
https://www.youtube.com/watch?v=COrAUcuJ2fc

தமிழா! நீ பேசுவது தமிழா!: முனைவர்இரா.,பிரபாகரன்
https://www.youtube.com/watch?v=OVc2gUtSCT4

தாய் மொழியில் பேசுவதன் தேவை என்ன?- முனைவர். முத்துவேல் செல்லையா
https://www.youtube.com/watch?v=vS6ATP79yVg

தாய்மொழியும் தமிழ் இருக்கையும் :: முனைவர் சொர்ணம் சங்கர்
https://www.youtube.com/watch?v=gtXoKlMAu5g

தாய்மடியே! தமிழ்மொழியே! : திரு.அகத்தியன் பெனடிக்ட்
https://www.youtube.com/watch?v=MgQv4bipSVs

தாய்மொழியும் தொழில்நுட்ப வளர்ச்சியும்: ச.பார்த்தசாரதி
https://www.youtube.com/watch?v=7pNLrw8J0ts

செம்மொழி எம்மொழி! தாய்மொழி தமிழ்மொழி :கவிஞர் மகேந்திரன் பெரியசாமி
https://www.youtube.com/watch?v=yDARmr6T5KE

by Swathi   on 22 Feb 2018  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர். ஸ்னோஃப்ளேக்கின் முதல் இந்திய அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரியான தமிழர்.
கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா. கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.
துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு. துபாய் நூலகத்துக்குத் தமிழக எழுத்தாளரின் நூல்கள் அன்பளிப்பு.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை. வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.
யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார். யாழ்ப்பாணம் தமிழ் விவசாயிகளுக்கு 234 ஏக்கர் நிலம்: இலங்கை அதிபர் ரணில் விடுவித்தார்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்! பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி சாதனை.. அமெரிக்காவில் நடந்த அதிசயம்!
அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள். அமெரிக்கத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்ப்பள்ளி சார்பில் 6.99 ஏக்கரில் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள்.
நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன? நட்சத்திரங்களைச் சுற்றி உறைந்த ஆல்கஹால், அசிட்டிக் ஆசிட்: வெப் டெலஸ்கோப் கண்டறிந்தது என்ன?
கருத்துகள்
25-Feb-2018 10:32:35 ந. ஜெயபாலன், said : Report Abuse
வலைத் தமிழ் உதவியால், வாஷிங்டன் தமிழ் சங்க நிகழ்வை , நேரில் அமர்ந்து பார்த்தது போன்ற மன நிறைவு. வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் அஞ்சல் முகவரி கிடைக்குமானால், தமிழ் நாட்டில், திருநெல்வேலியிலிருந்து வெளியாகவும் "நெல்லை பரணி" என்ற காலாண்டு இதழை அனுப்பிவைக்கலாம்.
 
24-Feb-2018 23:58:13 நக்கீரன் said : Report Abuse
நிறையன்புடையீர், வணக்கம். நலம்; வாழிய நலம். வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட உலகத் தாய்மொழி நாள் செய்தியை மலேசிய செம்பருத்தி இணைய ஏட்டில் பதிவு செய்ய விரும்பினேன். ஆனால், படங்களை பதிவிறக்கம் செய்யவோ படி எடுக்கவோ இயலவில்லை. இதன் தொடர்பில் ஏதும் செய்தீர்களானால் வாசிங்டன் தமிழ்ச் சங்க செய்திகளை மலேசிய இணைய ஏட்டில் பதிவு செய்ய முயலுவேண். இக்கண் நக்கீரன், செய்தியாளர், கோலாலம்பூர், ௦௧௩-௨௪௪ ௩௬ 24
 
24-Feb-2018 02:24:25 Ramesh said : Report Abuse
tamil nattil ullavargale tamil mozhiyai marandhuvitta ikkalathil ulagil engo or moolaiyil tamil mozhikkaga padupadum em makkalukku enadhu nandrigalai therivithukkolgiren!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.